சிறகடிக்க ஆசை: தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்ட முத்து.. விஜயாவுக்கு அதிர்ச்சி! இது பலருக்கு பாடம்
சென்னை: (Siragadikka Aasai Serial Today Episode )விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் 2026 ஜனவரி 30 ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடில், ரோகிணி மீண்டும் அனுஜுடைய வாழ்க்கையில் வந்திருக்கிறார் இதனால் விஜயா கோபத்தில் இருக்கிறார் அதே நேரத்தில் முத்து செய்த செயல் அவருக்கே வினையாக வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு தொடங்குவது, மீனா புதிதாக திறந்த பூக்கடையின் திறப்பு விழாவுடன். இந்த விழாவில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் ரோகிணி அழையா விருந்தாளியாக வந்து நிற்கிறார் . அவரை பார்த்ததும் விஜயாக்கு கடுப்பாக இருந்தாலும், இந்த ஆர்டர் தொடர்பாக மேனேஜரே அழைத்ததாக ரோகிணி சொல்வதால், சண்டை போடாமல் அமைதியாக இருக்கிறார்.

பூக்கடையை அண்ணாமலையும் விஜயாவும் சேர்ந்து திறந்து வைக்க, முதல் வாடிக்கையாளராக அண்ணாமலையே பூ வாங்குகிறார். முத்து, அந்த பூவை விஜயாவிடம் கொடுக்கச் சொல்லி, சூழலை கொஞ்சம் லேசாக்க முயற்சி செய்கிறார்.
இதற்கிடையில், ரோகிணி மேனேஜரை அழைத்து ஆர்டர் விஷயமாக பேச, அங்கே இருந்து பெரிய அப்டேட் ஒன்று வருகிறது. அந்த மேனேஜர், இந்த அபார்ட்மெண்டுக்கான ஹோம் அப்ளையன்ஸ் சப்ளை ஆர்டரை மனோஜுக்கே தர முடிவு செய்துள்ளதாக . இதைக் கேட்டு மனோஜ் ரொம்ப சந்தோஷமாகி, மேனேஜருக்கு நன்றி சொல்லுகிறார்.
அதற்கு மேனேஜர், இந்த ஆர்டர் உங்களுக்கு கிடைக்க காரணமே ரோகிணிதான். அவங்க சொல்லித்தான் நான் ஒத்துக்கிட்டேன், உங்க வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் ரோகிணி சொன்னாங்க. அவங்க மாதிரி மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்
என்று புகழ்ந்ததும், விஜயா கோபப்படுகிறார்
உடனே விஜயா, "மனோஜிடம், நீ ஏன் இந்த ஆர்டரை ஏத்துக்குற?" என்று கேட்க, மனோஜ், "எனக்கு இருக்கும் கடனை அடைக்க இந்த ஆர்டர் ரொம்ப உதவியாக இருக்கும்மா. அதனால இந்த ஆர்டரை நான் ரோகிணியோட சேர்ந்து டெலிவரி செய்றேன்" என்று சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதே நேரத்தில், "இந்த விஷயத்துக்காக அவள் செய்த துரோகத்தை நான் மறக்க மாட்டேன்" என்று மனோஜ் சொன்னாலும் விஜயாவிற்கு ரோகிணி மனோஜியுடன் சேர்ந்து பிசினஸ் செய்வது விருப்பமே இல்லை.
மறுபுறம், நீத்துவின் ரெஸ்டாரண்டில் வேறொரு பதற்றமான காட்சி. அங்கு வரும் முத்து, ஊழியர்களிடம், "நீத்து தர்ற சம்பளத்தை விட அதிகம் தர்றோம்" என்று டீல் பேசிக் கொண்டிருக்கும் போது, அதை பார்த்து நீத்து அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு முத்து, நீத்துவை தனியாக கூப்பிட்டு "ஸ்ருதியிடம் மன்னிப்பு கேள்" என்று சொல்ல, அதற்கு நீத்து, "அதெல்லாம் முடியாது. நான் ரவியை காதலிக்கிறேன்" என்று சொல்லி முத்துவை மேலும் கோபப்படுத்துகிறார்.
இதனால் முத்து கோபத்தில், "ஒழுங்கா மன்னிப்பு கேளு... இல்லன்னா ஓட்டலை அடிச்சு ஒடச்சிடுவேன்" என்று வார்னிங் கொடுத்து அங்கிருந்து போகிறார்.
இனி முத்து பேசியதை வைத்து நீத்து நாடகத்தை போட இருக்கிறார். நாம கோபத்தில் யாரிடமாவது வார்த்தையை விட்டால்.. என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று முத்து மூலம் எல்லோருக்குமே ஒரு பாடம்தான்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications