சிறக்கடிக்க ஆசையில் இனி கதை மாறப்போகிறது! ரோகிணியின் பிஏவால் வரும் பிரச்சனை.. செல்வம் உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் செல்வமாக நடித்துக் கொண்டிருக்கும் பழனியப்பன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அவரே கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரோகிணி பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் அவர் செய்த சில பித்தலாட்டங்கள் இன்னும் தெரியவில்லை. ரோகிணி தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்பதற்காக சிட்டியிடமும் அதிகமாக வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

ரோகிணி பற்றிய உண்மை
ஆனால் இப்போது ரோகிணி பற்றிய உண்மைகள் எல்லாமே குடும்பத்திற்கு தெரிய வந்து, அவரை மனோஜிடமிருந்து விவாகரத்து செய்வதற்காக விஜயா ஒத்த காலில் நின்று கொண்டிருக்கிறார். நிலைமை எப்படி இருக்கும் போது இந்த சீரியலில் செல்வம் ஆக நடித்துக் கொண்டிருக்கும் பழனியப்பன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ரோகிணியின் பிஏ தினேஷும் கூட இருக்கிறார். அவரை பழனியப்பன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
பழனியப்பன் வீடியோ
இவரை யார் என்று தெரிகிறதா? இவர்தான் ரோகிணியின் பிஏ. இவரை காணோம் என்று இவருடைய ரசிகர்கள் எல்லாம் இப்போ தேடுகிறார்கள். என்னிடம் கூட பலர் இனி ரோகிணியின் பிஏ வரமாட்டாரா அவர் எங்கே போனார் என்று கேட்கிறார்கள். இப்போ இவர் வந்துவிட்டார் இனிதான் இந்த சீரியலில் கதை சூடு பிடிக்கப் போகிறது என்று சொல்லி இருக்கிறார்.
அதோடு இந்த சீரியலில் ரவி எப்படி செஃப்பாக இருக்கிறாரோ அதேபோல இவர் நிஜத்தில் ஒரு ஹோட்டலில் செஃப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இனி இவரை வைத்து தான் இந்த சீரியலில் சில பிரச்சனைகளும் ட்விஸ்ட்களும் வரப்போகிறது என்று க்ளூ கொடுத்திருக்கிறார். இதனால் அடுத்த வாரத்திற்கான எபிசோடு பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது.
சிறகடிக்க ஆசையில் அடுத்து வருவது
ஏற்கனவே ரோகிணியின் மகன் கிரிஷ்க்கு காய்ச்சலாக இருப்பதால் அவர் மீனாவையும் முத்துவையும் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அண்ணாமலை நேரில் சென்று நீங்கள் பார்க்க வேண்டாம் என்று சொன்னதால் சத்யாவை ரோகிணி வீட்டிற்கு போக சொல்லி அங்கிருந்து வீடியோ காலில் முத்து பேசியிருந்தார். அப்போது சிந்தாமணி அங்கே இருப்பதையும் சத்யா பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.
இதனால் இதைப்பற்றி சத்யா முத்துவிடம் சொல்வாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல வீட்டு பத்திரத்தை யாருக்கும் தெரியாமல் சிந்தாமணி சொன்னதைக் கேட்டு பைனான்சியரிடம் விஜயா கொடுத்திருக்கிறார். இதை வைத்தும் இனி ஒரு பிரச்சனை வரும். இதற்கிடையில் இந்த பிஏ தினேஷ் என்ன குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications