சிறகடிக்க ஆசை: விஜயா உயிருக்கு விலை பேசிய மனோஜ்.. சந்தேகப்படும் அண்ணாமலை! புது பிரச்சனையில் சிக்கும் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Feb 16) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில் செல்வத்திற்காக அருணிடம் பேச்சு வார்த்தைக்கு சென்ற முத்துவிற்கு புது பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு சீதா மீது சந்தேகம் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்து ரவிக்கு போன் செய்து நீ உடனே என்னை பார்க்க வரவில்லை என்றால் நான் இப்போது தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி இருந்தார். இதனால் ரவி ஸ்ருதி ரெஸ்டாரண்டில் இருந்து அவசரமாக கிளம்பி போயிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, அருண் அம்மா மீது செல்வம் கார் ஏற்றி ஆக்சிடெண்ட் செய்ததால் அவர் இறந்து போய்விட்டார். அதற்காக அருண் செல்வத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருந்த நிலையில் செல்வம் மற்றும் அருண் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செல்வம் மற்றும் அருண் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது செல்வம் ஒரு லட்சம் ரூபாய் பணம் தரேன் என்று சொன்னதும் அதற்கு அருண் முடியாது என்று சொன்னதற்கு முத்து அவனால அவ்வளவு தான் தர முடியும் என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.
அருண் சொன்ன வார்த்தை
அதற்கு அருண் நான் உங்க அப்பாவை கார் ஏத்தி கொன்னுட்டு ஒரு லட்ச ரூபா தந்தா ஏத்துக்குவியா என்று கேட்டது முத்து கோபத்தில் அருண் சட்டையை பிடித்து அடிக்க பார்க்கிறார். இதனால் அங்கு கலவரம் ஏற்படுகிறது. பிறகு எல்லோரும் திட்டி அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது அருண் எனக்கு இருபது லட்சம் பணம் வேண்டும் அப்படி என்றால் கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்கிறார்.
டிரைவர்கள் படும் கஷ்டம்
அதற்கு செல்வம் என்னால அவ்ளோ பணத்தை ரெடி பண்ண முடியாது, நான் ஒரு லட்சம் பணத்தையே முழுசா பார்த்தது கிடையாது என்று கதறி அழுகிறார். அதற்கு அருண் 15 லட்சம் ஓகே என்று சொல்ல, முத்து கார் டிரைவர்கள் படும் கஷ்டத்தை பற்றி எடுத்து சொல்கிறார். பிறகு வக்கீலும் அருணிடம் சொல்ல கடைசியாக அருண் அஞ்சு லட்சம் என்றால் ஓகே அதற்கு குறைந்து என்னால் முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
முத்துக்கு பிரச்சனை
உடனே சீதாவும் ப்ளீஸ் மாமா இதற்கு மேல பேசாதீங்க என்று சொல்ல, முத்து சரி ஒரு மாசம் டைம் கொடுங்க அதற்குள் பணத்தை ரெடி பண்ணுறோம் என்று சொல்லி அக்ரிமெண்ட் போட்டுக் கொள்கிறார்கள். மறுபக்கத்தில் நீத்துவை பார்ப்பதற்காக ரவி அவசரமாக போக நீத்து நீங்க வந்துட்டீங்க இனி நான் மாத்திரையை சாப்பிட மாட்டேன் எனக்கு இதே போல நான் கூப்பிட்ட நேரம் நீங்க வந்தா மட்டும் போதும், நான் உங்களை கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்லியோ அல்லது லவ் பண்ணி தொந்தரவு பண்ண மாட்டேன் செல்பிஷா மட்டும் இருப்பேன் என்று ரவியை போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அதிர்ச்சியில் விஜயா
ரவி கோபப்பட்டு திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக அண்ணாமலை வீட்டில் எல்லோரும் இருக்கின்றனர். அப்போது செல்வம் பிரச்சனை என்ன ஆச்சு என்று அண்ணாமலை விசாரிக்க அதற்கு அஞ்சு லட்சம் பணம் வேண்டும் என்று அருண் கேட்டிருப்பதாக முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவ்வளவு பணத்துக்கு அவன் எங்க போவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மனோஜ் அவனாவது பரவாயில்லை நானாக இருந்தால் அஞ்சு கோடி கேட்டிருப்பேன் என்று சொன்னதும், விஜயா ஷாக்காகி அதுக்காக என்னை கார்ல அடிபட்டு சாக சொல்லுறியா என்று கேட்க இல்லம்மா நான் சும்மா சொன்னேன் என்று மனோஜ் சமாளிக்கிறார்.
அண்ணாமலையின் சந்தேகம்
பிறகு அண்ணாமலை மீனாவிடம் சீதா சந்தோசமா இருக்காளா அந்த அருண் அவளை நல்லபடியா பார்க்கிறானா? என்று கேட்க, மீனா சீதாவை அடித்த விஷயத்தை சொல்லாமல் உண்மையை மறைத்து நல்லா தான் இருக்கா மாமா என்று சொல்கிறார். உடனே முத்து அண்ணாமலையிடம் என்ன ஆச்சுப்பா நீ இப்படி கேட்கிறா.. என்று கேட்க, ஏற்கனவே அருண் உன் மேல கோவத்துல இருக்குறான் உன் மேல உள்ள கோபத்தை அந்த பொண்ணு கிட்ட காட்டிட கூடாது அதனால தான் கேட்டேன் என்று அண்ணாமலை சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications