சிறகடிக்க ஆசை “வெற்றி வசந்த்” பெயரில் மோசடி.. நடந்தது இதுதான்.. நம்ப வேண்டாம்! அவரே கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த் தன்னுடைய பெயரில் facebook பக்கத்தில் யாரோ ஒருவர் அக்கவுண்ட் ஓபன் செய்து சில ஏமாற்று காரியங்கள் செய்து வருகிறார்கள் எனவும் அதை நம்ப வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலங்களை அடைந்திருக்கின்றனர். அதிலும் கதாநாயகன் முத்துவிற்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருக்கிறது. அவர் பலருடைய நிஜ கேரக்டரின் பிரதிபலிப்பாக இருப்பதாலே இவருக்கு பலரும் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Television Siragadikka aasai serial

இதனாலேயே இவரை சின்னத்திரை ரசிகர்கள் இவர் "சின்னத்திரை விஜய்சேதுபதி" என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதுதான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதில் வெற்றி வசந்த் பேசுகையில், எல்லோருக்கும் நன்றி... இதுவரைக்கும் எனக்கு கிடைக்காத பெயரும் புகழும் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந்த பெண்.. காரை விட்டு ஓடி சென்று உதவிய ரஞ்சித்.. நெகிழ வைத்த காட்சி
இந்த சீரியலில் முத்து கேரக்டருக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு வருத்தமான செய்தியையும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் facebook-இல் ஆரம்பத்தில் தான் இருந்தேன். அப்போது ஒரு சில புகைப்படங்களை அதில் பதிவிட்டு இருந்தேன். அதற்குப் பிறகு என்னுடைய அக்கவுண்டில் இருந்த என்னுடைய ஒரு சில புகைப்படங்களை எடுத்துவிட்டு நான் அந்த அக்கவுண்டை லாக் செய்து விட்டேன்.

ஆனால் என்னை போலவே யாரோ ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களிடம் பேசி வருகிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது. நானும் அது குறித்து கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அது நான் கிடையாது. அது என்னுடைய ஒரிஜினல் அக்கவுண்டும் இல்லை. நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் இருக்கிறேன். பேஸ்புக் பக்கத்தில் இருந்து என்னுடைய பெயரில் சிலரிடம் புகைப்படங்களை அனுப்ப சொல்வதாகவும் கேள்விப்பட்டேன்.

சிறகடிக்க ஆசை: உண்மையை மறைச்சிட்டியே! அண்ணாமலை கேட்ட கேள்வி.. விஜயா இப்படி பேசிட்டாங்களே
தயவுசெய்து யாரும் அப்படி அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என்று அந்த வீடியோவில் வெற்றி வசந்த் பேசியிருக்கிறார். இது இணையத்தில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல பிரபலங்களின் பெயரில் பேக் ஐடியில் உலாவி வருவது குறித்து பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து கம்ப்ளைன்ட் செய்யப்பட்டிருந்தாலும் இணையத்தை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.

வெற்றி வசந்த் தான் சமூக வலைத்தளத்தில் யாரிடமும் பேசுவதே கிடையாது என்று கூறியிருக்கிறார். என்னிடம் வாட்ஸ் அப் இருக்கிறது அதில் கூட நான் யாரிடமும் பேச மாட்டேன். எனக்கு தேவை என்றால் போன் செய்துதான் பேசுவேன் இன்ஸ்டாகிராமிலும் யார் என்னிடம் பேசினாலும் எனக்கு பேசுவதற்கு நேரம் கிடையாது. நான் அதில் அதை விருப்பமும் பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதனால் இது போன்ற பிரபலங்கள் ஐடியில் இருந்து தங்களிடம் நேரடியாக யாராவது பேசுகிறார்கள் என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+