நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந்த பெண்.. காரை விட்டு ஓடி சென்று உதவிய ரஞ்சித்.. நெகிழ வைத்த காட்சி
சென்னை: பல்லடம் காமநாயக்கன்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் மயக்கம் போட்டு விழுந்த நிலையில் அந்த பக்கமாக சூட்டிங் முடித்துவிட்டு பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நடிகர் ரஞ்சித் காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
நடிகர் ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கவுண்டம்பாளையம் திரைப்படம் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கி இருக்கிறது. இவர் பேசும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் பேசும் பொருளாகி கொண்டிருக்கிறது. இவருடைய திரைப்பட கதை குறித்து கூட ஒரு சிலர் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் அவருடைய திரைப்படம் மற்றும் அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டார். பாக்கியாவிற்கு எப்போதெல்லாம் பிரச்சனையோ அங்கு உடனே ஓடி வருவது பழனிசாமி ஆகத்தான் இருக்கும். பழனிச்சாமி கேரக்டரில் நடிகர் ரஞ்சித் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சின்னத்திரையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் செந்தூரப்பூவே சீரியலிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் ரஞ்சித் ஷூட்டிங் முடித்துவிட்டு பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி காரில் சென்று கொண்டிருக்கும் போது பல்லடம் காமநாயக்கம்பாளையத்தில் தன்னுடைய கணவரில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார்.

அப்போது அதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய காரை விட்டு இறங்கி ஓடி சென்று அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பி பார்த்திருக்கிறார். ஆனாலும் அந்த பெண் மயக்கத்தில் இருக்க உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் அவரை ஏற்றி செல்வது வரைக்கும் அந்த இடத்திலேயே இருந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அதுபோல ரஞ்சித் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தபோது அந்தப் பெண் எழுந்திருக்காமல் இருந்தபோது அந்த பெண்ணின் புடவை நழுவி செல்ல அதை ரஞ்சித் சரி செய்து இருக்கிறார். அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் பலர் ரஞ்சித்தை பாராட்டி வருகிறார்கள். ஒரு சிலர் வழக்கம் போல இதையும் கலாய்த்து வருகிறார்கள்.
பலர் சாலைகளில் விபத்து ஏற்பட்டால் கண்டும் காணாதது போல போய்விடும் நிலையில் ரஞ்சித் தன்னுடைய காரை விட்டு ஓடி வந்து அந்த பெண்ணிற்காக செய்த செயல் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மனிதநேயம் உள்ள எவராக இருந்தாலும் இதைத்தான் செய்வார் என்றாலும் ரஞ்சித்தின் பெருந்தன்மையான செயலைக் குறித்து பலர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications