Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜயாவா இது? நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தும் நடந்த சோகம்.. நடிகை உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடிகை அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் சின்னத்தம்பி மற்றும் பாவம் கணேஷ் போன்ற சில சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் மூலம் புகழின் உச்சத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் அனிலா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறேன். ஆரம்பத்தில் மலையாள சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன்.

Siragadikka aasai serial Vijaya Actress Anila Sreekumar acting actor prabhu

அதற்கு பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்கு தமிழில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நான் தமிழில் நடிக்க போகிறேன் என்றபோது என்னுடைய தோழிகளும் என்னுடைய உறவினர்களும் தமிழ் மொழி உனக்கு தெரியாதே நீ எப்படி அங்கே நடிக்க போகிறா என்று கேட்டாங்க. நான் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு தைரியத்தில் தான் கேரளாவில் இருந்து தமிழ் சீரியலில் நடிக்க வந்தேன்.

தமிழில் சின்ன தம்பி, பாவம் கணேசன் போன்ற சீரியல்களில் நடித்திருந்தேன். அதுபோல ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்து எல்லாத்துக்குமே என்னுடைய கணவர் தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். சின்னதம்பி சீரியல் மூலமாக தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் நான் அதில் திமிர் பிடித்த மாமியாராக இருப்பேன். அதற்குப் பிறகு மனம் மாறி விடுவேன்.

ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் தான் என்னை பலர் கொண்டாடத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் என்னை திட்டி கொண்டிருக்கிறார்கள்‌. சிலர் நான் என்னுடைய இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்ட்களுக்கு கூட கோபமாக பதில் கொடுக்கிறார்கள். நான் நடிக்கிறேன் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் வெளியே செல்லும்போதெல்லாம் சிலர் உங்களுடைய நடிப்பு அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.

நான் 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருந்தாலும் எனக்கு கிடைக்காத அங்கீகாரம் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் கிடைத்தது. அதிலும் நடிகர் பிரபுவோடு சேர்ந்து நான் ஒரு திரைப்படத்தில் நடித்தேன். ஆனால் என்னுடைய துரதிஷ்டம் அந்த திரைப்படம் வெளியாகாமலே போய்விட்டது.

அந்த திரைப்படம் வெளியாகி இருந்தால் எனக்கு இன்னும் பெரிய அளவில் பெயர் கிடைத்திருக்கும். ஆனால் பிரபு சாரோடு நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. அவர் ரொம்பவே இனிமையானவர் தான். பிரபு சார் ஒரு பெரிய நடிகர் என்பதை மறந்து சகஜமாக பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகை அனிலா ஸ்ரீகுமார் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+