சிறகடிக்க ஆசை விஜயாவின் மகனும் விஜய் டிவி சீரியல் நடிகரா? அவரே வெளியிட்ட தகவல்! இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகை அனிலா ஸ்ரீகுமார் விஜயா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் அவருடைய மகனும் விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். அது குறித்த தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிலா பகிர்ந்து இருக்கிறார். அது இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் இருக்கின்றனர். அடுத்ததாக ரோகினி மற்றும் ஸ்ருதி தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் முத்து குடித்துவிட்டு பிரச்சனை செய்வாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் இருக்கின்றனர்.

இன்றைய எபிசோடு ஸ்ருதி மற்றும் ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்து முடிந்து விட்டது. ஆனால் ரோகிணியின் அப்பா இன்னும் வரவில்லை என்று கேட்டு விஜயா ரோகிணியிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அதோடு என்னை இளிச்சவாய்னு நினைச்சியா? நீ எத்தனை பொய் தான் என்கிட்ட சொல்லுவ? உங்க அப்பா வரமாட்டார்னா அதை என்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே? எத்தனை பேருகிட்ட உங்க அப்பா வரப்போறாருனு நான் சொல்லிக்கிட்டே இருந்திருக்கேன்.
கடைசியில் என்னை ஏமாத்திட்டியே என்று ப்ரோமோவில் ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் நடிகை அனிலா ஸ்ரீகுமார் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் தன்னுடைய சொந்த குடும்பம் பற்றி பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய மகன் சீரியலில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறான். அதுவும் தமிழ் சீரியலில் நடிப்பது தான் அவனுக்கு ரொம்பவும் ஆசை என்று சொல்லியிருந்தார். இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீக்கிரத்திலேயே முடிவடைந்த "பாரதிதாசன் காலனி" என்ற சீரியலில் நடிகை அனிலா மகன் நடித்திருக்கிறார்.
அது குறித்த ப்ரோமோவை அனிலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய மகனுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்போது அனிலா தன்னுடைய மகன் குறித்து பேட்டியில் பேசியிருக்கும் போது அவர் தன்னுடைய மகன் குறித்து வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் பாரதிதாசன் காலனி தொடங்கிய சில மாதங்களுக்குள்ளே முடிவுக்கு வந்துவிட்டது.
அதே நேரத்தில் அனிலா ஸ்ரீகுமார் தானும் தன்னுடைய மகனும் ஒரே சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தால் கூட நடிப்போம் என்று கூறியிருக்கிறார். மலையாளத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார்களாம். அப்போது அந்த ஷார்ட் பிலிமில் தன்னுடைய மகன் இறந்து போய் விட்டது போன்றும் அதற்கு நான் அழுவது போன்ற காட்சிகள் இருந்தது.
அந்த காட்சிகளில் அவன் தூங்கிக் கொண்டிருந்தான் நான் அழுது நடித்து முடித்துவிட்டு அடுத்த சூட்டிங்கிற்க்கு வந்து விட்டேன். ஆனால் தூங்கி முழித்த பிறகு என்னுடைய மகன் நான் நடித்த காட்சிகளை பார்த்து எங்க அம்மாவ பார்க்க வேண்டும் என்று அழுதுவிட்டான். என் மீது அவனுக்கு அவ்வளவு பாசம் என்று அனிலா பேசிய பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications