சிறகடிக்க ஆசை: க்ரிஷ்ஷுக்காக ரோகிணி போட்ட பகீர் திட்டம்! அடுத்து என்ன நடக்கும்?
விஜய் டி.வி-யின் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை'யில், மீனாவுக்குத் தெரிந்த ரகசியத்தால் ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், ரோகிணி தனது புதிய திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

க்ரிஷின் உண்மையான தாய் ரோகிணிதான் என்ற அதிர்ச்சித் தகவல் மீனாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த உண்மையை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால், தானும் தன் மகனும் தற்கொலை செய்துகொள்வோம் என ரோகிணி மிரட்டியதால், மீனா அமைதி காத்து வருகிறார்.
உண்மையை மறைக்கும் குற்றவுணர்ச்சியால் மீனா நாள்தோறும் அவதிப்படுகிறார். மறுபுறம், ரோகிணி தனது அடுத்த கட்ட திட்டங்களை வகுக்கிறார். தன்னைப் பற்றிய உண்மை வெளிவருவதற்கு முன்பாக, க்ரிஷ் தனது கணவர் மனோஜுடன் நெருங்கிப் பழகி, அவர்களுக்குள் ஒரு நல்ல உறவு உருவாக வேண்டும் என்று ரோகிணி விரும்புகிறார்.
இந்தக் குழப்பமான சூழ்நிலையில், கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மீனா ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். ரோகிணியின் கற்பனையான அம்மா குறித்த பேச்சால் கோபமடைந்த மீனா, "அந்தக் கற்பனை அம்மா கற்பனையிலேயே இறந்து போகலாம்" என்று கூறிவிடுகிறார்.
இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ரோகிணி, தனது தாயாரை களமிறக்குகிறார். ரோகிணியின் தாயார் திடீரென வந்து, "க்ரிஷின் அம்மா இறந்துவிட்டார். அதனால் க்ரிஷுக்கு அடைக்கலம் இல்லை. க்ரிஷ், மீனா மற்றும் முத்துவுடன் தான் இருக்க ஆசைப்படுகிறான்" என்று நாடகமாடுகிறார்.
இதைக் கேட்ட அண்ணாமலை, "க்ரிஷ் இங்கேயே இருக்கட்டும், அவன் நம் வீட்டுப் பிள்ளை" என்று பாசத்துடன் கூறுகிறார். ரோகிணி திட்டமிட்டது போலவே அனைத்தும் கச்சிதமாக நடக்கிறது. க்ரிஷ் நிரந்தரமாக முத்து - மீனா வீட்டில் தங்குவது உறுதியாகிவிட்டது.
ரோகிணியின் சுயநல நாடகம் முழு வெற்றி பெற்றுள்ள நிலையில், க்ரிஷின் உண்மை எப்போது மனோஜிக்கு தெரியவரும்? மீனாவின் அமைதி எப்போது உடையும்? இனி என்னென்ன திருப்பங்கள் வரப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications