சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு மனோஜால் வரும் பிரச்சனை! ரோகிணி நிலைமை அவ்வளவுதானா? பாவம் முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா, ரோகிணி மற்றும் மனோஜ் பற்றி பார்வதியிடம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து இனி எதிர்பாராத திருப்பங்கள் வரப்போகிறது. ஏற்கனவே ரோகிணி தன்னுடைய மகன் க்ருஷை சேர்த்திருக்கும் ஸ்கூலில் தான் அண்ணாமலையும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதுவும் அண்ணாமலை அந்த ஸ்கூலில் அக்கவுண்ட்டண்ட்டாக வேலைக்கு சேர்ந்திருக்கும் நிலையில் ரோகிணி பற்றியும், அவருடைய மகனைப் பற்றியும் தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

television siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே முத்து ரோகிணியின் மகனை தேடி போன இடத்தில் க்ரிஷ் மற்றும் அவனுடைய பாட்டியை காணவில்லை என்று முத்து பீல் பண்ணி அண்ணாமலையிடம் பேசி இருந்தார். இதனால் க்ரிஷை ஸ்கூலில் அண்ணாமலை பார்க்கும்போது அவனை பற்றி விசாரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதுபோல ரோகிணி எதற்காக பார்வதி இடம் பணத்தை கொடுத்தார் என்று முத்துவும் மீனாவும் சந்தேகத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு மத்தியில் மனோஜ் புது வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். அந்த வீட்டை மனோஜிடம் விற்கும் தம்பதி அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறவர்கள் தான்.

அவர்கள் சொந்த வீட்டுக்காரருக்கு தெரியாமல் மனோஜிடம் மூன்று கோடிக்கு வீட்டை விற்கிறார்கள். அதோடு அட்வான்ஸ் ஆக 50 லட்சம் மட்டும் தரும்படி சொல்லி இருக்கிறார்கள். ரோகிணிக்கும் மனோஜுக்கும் இந்த வீடு ரொம்பவும் பிடித்து போகிறது. இதனால் அவர்களும் பணத்திற்கு எப்படியாவது ரெடி செய்து வீட்டை வாங்கி விட வேண்டும் என்று முடிவில் இருக்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

இந்த நிலையில் இந்த மகிழ்ச்சியான செய்தியை ரோகிணி குடும்பத்தில் வந்து சொல்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா பார்வதி இடம் பேசுகிறார் ஏற்கனவே பார்வதியும் விஜயாவும் பேசாமல் இருந்த நிலையில் இப்போது விஜயா தன்னுடைய மகன் மனோஜ் ஒரு வீடு வாங்க போகிறான் என்று சொல்கிறார்.

அதுவும் கடற்கரை பக்கமாக அந்த வீடு இருக்கிறது, மூன்று கோடிக்கு அந்த வீட்டை வாங்கப் போகிறான் என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு என்னுடைய மருமகள் வந்த நேரம் எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கிறது என்று ரோகிணியை பற்றியும் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு பார்வதி சந்தோஷப்படுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

காரணம் பார்வதி கொண்டு வந்த மருமகள்தான் ரோகிணி. இதனால் பார்வதியும் சந்தோஷப்படுகிறார். ஆனால் ரோகிணியும் மனோஜும் வீடு விஷயத்தில் ஏமாற போவது தெரியும்போது இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோல முத்து மற்றும் மீனா வாழ்க்கையிலும் புது பிரச்சனை வருகிறது.

மீனா புதியதாக டெகரேஷன் ஆர்டர் எடுக்கத் தொடங்கி இருக்கிறார். அதில் தனக்கு 7000 வருமானம் வந்ததும் உங்களைவிட இப்ப நான் தான் அதிகமா சம்பாதிக்கிறேன் என்று சொல்ல, அதைக் கேட்டு முத்துவின் முகம் மாறுகிறது. இதனால் இனி முத்து, மீனாவின் வாழ்க்கையிலும் பிரச்சனை வர இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+