சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய ரகசியத்தை சொன்ன ஜீவா.. உடைந்த 30 லட்சம் ரகசியம்! விஜயா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜின் முன்னாள் காதலி ஜீவா அண்ணாமலை வீட்டில் வந்து மொத்த ரகசியத்தையும் சொல்கிறார். இதனால் விஜயா எதிர்பார்க்காத செயலை செய்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று வெளியான ப்ரோமோதான் வேற லெவலில் இருக்கிறது. இதற்குத்தானே இத்தனை நாட்கள் ஆசைப்பட்ட, அது இப்பவாவது நடந்ததே என்றுதான் சொல்லத் தோணுகிறது. ரோகிணி எப்போது இந்த சீரியலில் மாட்டுவார் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருந்தது. இதுவரைக்கும் ரசிகர்கள் போட்ட கமாண்டுகளுக்கு எல்லாம் இப்போதுதான் பதில் கிடைக்கிறது.

அதாவது ரோகிணி பற்றிய மொத்த உண்மையையும் முத்து குடும்பத்திற்கு தெரிய வருவது பற்றிய எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கும் நிலையில் இப்போது இன்னொரு விதமாக சீரியல் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதாவது 30 லட்சத்திற்கு வீடு வாங்கியிருக்கிறோம் என்று மனோஜ் மற்றும் ரோகிணி ஏமாந்து போயிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனோஜிடம் இருந்து 27 லட்சம் பணத்தை ஏமாற்றி கொண்டுட்டு போன ஜீவா பற்றி ரகசியம் இப்போது முத்துக்கு தெரிய வந்திருக்கிறது. அதோடு ஜீவாவிற்கு முத்து தான் மனோஜின் தம்பி என்பதும் தெரிய வந்ததால் நான் ஏற்கனவே உங்க அண்ணனிடம் 27 லட்சத்துக்கு வட்டியோட சேர்த்து 30 லட்சம் கொடுத்துட்டேன்.

உங்க அண்ணனை விட உங்க அண்ணி தான் ரொம்ப டேஞ்சர். அவங்க தான் என்ன மிரட்டி பணத்தை வாங்குனாங்க. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பணத்தை கொடுத்தாச்சு. அதற்கு எனக்கு சாட்சி கையெழுத்து போட்டதே நீ தானே என்று முத்துவிடம் சொன்னதால் இந்த மொத்த உண்மையையும் நீங்களே வீட்டில் வந்து சொல்லுங்க என்று ஜீவாவை முத்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார்.
ஜீவாவை வீட்டில் பார்த்ததும் விஜயா நீதானே என்னுடைய பையனிடம் இருந்து ஏமாத்தி 27 லட்சம் பணத்தை கொண்டுட்டு ஓடினவ என்று திட்ட, நான் 30 லட்சம் உங்க பையன் கிட்ட கொடுத்தாச்சு. உங்க பையனும் மருமகளும் என்னை மிரட்டி அந்த பணத்தை வாங்குனாங்க. போலீஸ் ஸ்டேஷனில் அவங்களே கையெழுத்து போட்ட ரசீது இருக்கு என்று காட்டியதும் மனோஜிடம் விஜயை நீ என்கிட்ட இந்த விஷயத்தையும் என்கிட்ட மறைச்சிட்டியே என்று அடிக்கிறார்.

அதற்கு மனோஜ் தப்பு என் மேல இல்லம்மா இந்த பணத்தை அப்படியே பிசினஸ் பண்ணலாம் என்று எனக்கு பிளான் போட்டு தந்ததே ரோகிணி தான். ரோகிணி சொன்னதால தான் நான் இதை உங்ககிட்ட சொல்லல என்று அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு விடுகிறார். இதனால் விஜயா பளார் என்று ரோகிணியை அறைகிறார்.

ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நாளை எபிசோடு வேற லெவலில் இருக்கப்போகிறது. ஒருவேளை இனி ரோகிணி இந்த முப்பது லட்சத்தில் தான் வீடு வாங்கி ஏமாந்தோம் என்று சொல்லி தப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications