திருச்செல்வம் என்கிட்ட நேரடியா அப்படி கேட்டாரு! இதை எதிர்பார்க்கல! சிறகடிக்க ஆசை மீனா மகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோமதி பிரியா விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கிக் கொண்டிருக்கும் திருச்செல்வம் தன்னிடம் பேசியதை பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பி போட்டி அதிகமாக இருக்கும். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டுக்கும் பல மாதங்களாகவே டிஆர்பி போட்டி இருக்கிறது. அதில் இரண்டு சீரியல்களும் மாறி மாறி முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

சிறகடிக்க ஆசை மீனா
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கும் திருச்செல்வம் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவிடம் பேசிய விஷயம் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது கோமதி பிரியா சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இயக்குனர் திருச்செல்வம் தான் விருது வழங்கி இருந்தார்.
கோமதி பிரியாவிற்கு விருது
அது குறித்து அவர் எமோஷனலாக பேசும்போது நான் திருச்செல்வம் சார் கையால் இந்த விருது வாங்குவேன் என்று நினைக்கவே இல்லை. இந்த நிகழ்ச்சிக்காக கீழே உட்கார்ந்து இருக்கும்போது கூட திருச்செல்வம் சார் என்கிட்ட ரொம்ப பேசிக்கிட்டே இருந்தாரு. உங்களை நான் எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல என்று சொன்னாரு.

நெகிழ்ந்த கோமதி பிரியா
பொதுவாக திருச்செல்வம் சாருடைய சீரியல்களில் தமிழ் பொண்ணுங்களுக்கு தான் அதிகமா முக்கியத்துவம் கொடுப்பாரு. ஆனால் மதுரையை சார்ந்த பெண்ணான உங்களை எப்படி நான் மிஸ் பண்ணினேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கேட்டது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. திருச்செல்வம் சார் இயக்கிய கோலங்கள் சீரியலில் இருந்து இப்போ உள்ள எதிர்நீச்சல் சீரியல் வரைக்கும் நான் பார்த்திருக்கிறேன்.

இயக்குனர் திருச்செல்வம் பாராட்டு
திருச்செல்வம் சாரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர் என்னை பாராட்டியது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. மதுரையில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போது விஜய் டிவியில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து, கதாநாயகியாகவும் மாறி இருக்கிறேன். எனக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இப்போது திருச்செல்வம் சார் என்னை பாராட்டியது என்னுடைய நடிப்பை பாராட்டியது எனக்கு பெரிய அவார்டு கிடைச்சா மாதிரி இருந்தது என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

ரசிகர்கள் பாராட்டு
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் கதைகளம் மதுரையில் இருக்கும் குணசேகரன் குடும்பத்தை பற்றி தான் இருந்து வருகிறது. அதில் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட கோமதி பிரியாவை நடிக்க வைக்க முடியவில்லை என்று இயக்குனர் திருசெல்வம் பீல் பண்ணியதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மீனாவுக்கு பிரச்சனை
அதேபோல சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா இனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது மண்டபம் மேனேஜர் ஒருவரிடம் மீனா அவர் காட்டிய பத்திரத்தில் படிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுத்ததால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏமாற்றிவிட்டார். இதை குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல் மீனா மறைத்து இருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
விஜயாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்து சந்தோஷத்தில் இருக்கிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள், மீனாவிடம் வேலை செய்தவர்கள் எல்லோருமே பணத்தை கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கி விட்டார்கள். இனி மீனா எப்படி இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.












Click it and Unblock the Notifications