சிறகடிக்க ஆசையில் ட்விஸ்ட்.. ரோகிணியின் அம்மா இறந்துட்டாரா? கிரிஷ் நிலைமை என்ன? முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரோகிணியின் அம்மா ரோட்டில் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். அப்போது முத்து தான் அவரை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போகிறார். அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது இனி தான் தெரியவரும்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துக்கு தெரியாமல் சீதா மற்றும் அருனுக்கு மீனா ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்த விஷயம் சீதாவின் கல்யாணத்தில் தெரிய வந்ததால் முத்து கோபத்தில் இனி வீட்டுக்கு வராத என்று சொல்லி இருந்தார். இதனால் மீனா தன்னுடைய அம்மா வீட்டில் தான் இருந்து வந்தார். மீனா இல்லாததால் முத்து இரண்டு நாட்களாக அதிகமாக கஷ்டப்பட்டார்.

பிறகு ஒரு வழியாக ஜாடை மாடையாக மீனாவை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார். இதனால் மீனாவும் இப்போது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் சீதாவின் வீட்டில் விருந்துக்காக முத்து மற்றும் மீனாவை சீதா கூப்பிட்டு இருந்தார். அப்போதும் முத்து நான் வரவில்லை என்று சொன்னதால் சீதா மட்டும் தனியாக போகிறார். அங்கு சீதாவின் மாமியாரும்,அருணும் சீதாவை நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.
அதோடு மீனாவின் அம்மா மற்றும் தம்பியையும் சீதாவின் அம்மா நன்றாக கவனித்துக் கொள்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனா கண்கலங்கி இருக்கிறார். இனி வரும் எபிசோட்டில் கூட மீனா முத்துவிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார். அதில் சீதாவின் மாமியார் தன்னுடைய அம்மா மற்றும் தம்பியை பொறுப்பாக கவனித்துக் கொள்கிறார். ஆனால் விஜயா வீட்டிற்கு மீனாவின் அம்மாவும் தம்பியும் வரும்போதெல்லாம் விஜயா அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். இதை சொல்லி மீனா அழுது கொண்டிருக்கும் போது இந்த ஜென்மத்தில் உனக்கும் எனக்கும் இந்த கொடுப்பினை கிடைக்கல அடுத்த ஜென்மத்திலாவது உனக்கு நல்ல மாமியார் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கோ என்று முத்து சொல்லி இருந்தார்.
இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ என்று ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் கிரிஷ் உடைய பாட்டி அதாவது ரோகிணியின் அம்மா ரோட்டில் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். கிரிஷ் பக்கத்தில் இருந்து பாட்டி எழுந்திருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த பக்கமாக முத்து காரில் வரும்போது இதை பார்த்து இவங்களுக்கு என்னாச்சு என்று கேட்க, அப்போது அக்கம் பக்கத்தினர் இந்த அம்மா ரோட்டில் நடந்து வரும்போது பைக்குகாரன் ஒருத்தன் இவங்க மேல மோதிட்டு நிற்காமல் போயிட்டான். இவங்களுக்கு உயிர் இருக்கா இல்லையா என்று தெரியவில்லை என்று சொன்னதும் முத்து அங்கிருந்தவர்களை திட்டி விட்டு மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications