என்னால் முடியாது செஃப்.. நான் வெளியேறுகிறேன்.. சிவாங்கி சொன்னவுடன் குக் வித் கோமாளி நடுவர்கள் கோபம்
சென்னை: குக் வித் கோமாளியிலிருந்து நான் வெளியேறுகிறேன் என சிவாங்கி கூறியதை கேட்டவுடன் நடுவர்கள் கோபமடைந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் நடத்தப்படுகிறது. இதில் குக்குகளும் கோமாளிகளும் அடிக்கும் லூட்டியை காண மக்கள் டிவி முன்பு சனி, ஞாயிறுகளில் 9 மணிக்கு ஆஜராகிவிடுவார்கள்.

இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்த நிலையில் 4 ஆவது சீசன் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வரை 4 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் கிஷோர் ராஜ்குமார், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் ஆகியோர் ஆவர்.
இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு இம்யூனிட்டி ரவுண்ட் என வைக்கப்படும். இந்த ரவுண்டில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அடுத்த வாரம் சமைக்கவும் தேவையில்லை எலிமினேஷனுக்கும் செல்ல மாட்டார்கள். இந்த வாரம் நடந்து முடிந்த மற்ற 3 சீசன்களில் இருந்து ஒருவர் வீதம் 3 பேர் மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்துள்ளனர்.
அவர்கள் ரேகா, ஷகிலா, ரோஷினி ஆகியோர் ஆவர். இந்த வாரம் நடத்தப்படும் இம்யூனிட்டி ரவுண்டில் இந்த ஒருவர் இம்யூனிட்டி வாங்கினால் மற்றவர்கள் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு வந்துவிடுவர் என செஃப் பட் கூறினார். ஒரு வேளை பழைய போட்டியாளர்கள் மூவரில் ஒருவர் இம்யூனிட்டி வென்றாலும் மற்றவர்கள் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு வந்துவிடுவார்கள்.
இந்த இம்யூனிட்டி சுற்றின் முதலில் நடந்த அட்வான்டேஜ் ரவுண்டில் ரோஷினியும் குரேஷியும் வென்றனர். இதையடுத்து இன்று நடந்த இம்யூனிட்டி டாஸ்க்கில் முதல் சுற்றை நன்றாக சமைத்து அதிக மதிப்பெண்களை பெற்ற 4 போட்டியாளர்கள் இரண்டாம் சுற்றுக்கு சென்றனர். அவர்களில் விசித்திரா, சிவாங்கி, ஷகிலா, ஷெரீன் ஆகியோர். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு காய்கறி சமைக்க கிடைத்தது.
அதில் சிவாங்கிக்கு பாகற்காய் வந்துவிட்டது. தன்னால் பாகற்காயை சமைக்க முடியாது என அவர் கூறியிருந்தார். மேலும் இந்த இம்யூனிட்டி சுற்றில் இருந்து நான் வெளியேறிக் கொள்கிறேன் என சிவாங்கி நடுவர்களிடம் தெரிவித்தார். இதனால் நடுவர்கள் கோபமடைந்தனர். பாகற்காயை வைத்து நீ சமைத்துதான் ஆக வேண்டும் என கூறினர்.
இதனால் வருந்திய சிவாங்கி அந்த நிகழ்ச்சி முடியும் வரை முகத்தை வாட்டமாகவே வைத்திருந்தார். ஆனால் தனக்கு கிடைத்த பாகற்காயை வைத்து அவர் நன்றாக சமைத்து நடுவர்களிடம் இருந்து நல்ல கமென்ட்ஸை பெற்றார். ஏற்கெனவே ஒரு முறை சிவாங்கிக்கு பாகற்காய் வந்தது. அதை வைத்து அவரால் சரியாக சமைக்க முடியவில்லை. இந்த இம்யூனிட்டி ரவுண்டில் நல்ல மதிப்பெண்களை பெற்று ஷகிலா வென்றார். ஆகையால் விசித்திரா, சிவாங்கி, மைம் கோபி, ஆன்டிரியன், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் அடுத்த வாரம் நேரடியாக எலிமினேஷனுக்கு சென்றுவிட்டனர்.
இந்த வாரம் ஷகிலாவுடன் மோனிஷா பிளஸ்ஸியும் ஷெரினுடன் சரத்தும், ரோஷினியுடன் குரேஷியும் சிவாங்கியுடன் பரத்தும் மைம் கோபியுடன் சுனிதா, ஸ்ருஷ்டியுடன் புகழ், ஆன்ட்ரியனுடன் ஜிபி முத்து, ரேகாவுடன் சிங்கப்பூர் திலீபன் ஆகியோர் இணைந்து சமைத்தனர். முதலில் அட்வான்டேஜ் டாஸ்க்காக தேங்காய் பர்பி செய்ய போட்டியாளர்களுக்கு 25 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications