கரைந்த சிவாஜி கணேசனின் சொத்துக்கள்.. அந்த உயில் போலி? அதுவிடுங்க, இப்ப பிரபு சொல்வது சரியே: பிரபலம்
சென்னை: அன்னை இல்லம் மீதான ஜப்தி உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி அப்துல் குத்துாஸ் முன்பு 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் பிரபு தரப்பில், "என் சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு, என் சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அது எப்படி முறையாகும்? அண்ணன் குடும்பம் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?' என்று வாதாடப்பட்டது".. இந்நிலையில், நீதிமன்றத்தில் பிரவு முன்வைத்த வாதம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
Media Circle யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதாக வந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நடிகர் பிரபு பதில் மனு தாக்கல் செய்தார்.. அதில், அன்னை இல்லத்துக்கும், என் அண்ணன் ராம்குமாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் நான்தான் என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அன்னை இல்லம் கடன்
இதையடுத்து, ஜப்தி நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தொடர்ந்து கேஸ் நடந்தது.. அந்த வழக்கு நேற்று கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதி பிரபுவிடம், "நீங்கள் அந்த கடனை செலுத்திவிட்டு, அந்த பணத்தை உங்கள் அண்ணனிடம் வாங்கி கொள்ளலாமே" என்று ஆலோசனை சொன்னார்.
அதற்கு பிரபு, "அன்னை இல்லம் கடன் மட்டுமேயில்லை, இதுபோல பல இடங்களில் அண்ணன் ராம்குமார் கடன் வாங்கியிருக்கிறார். யார் யாருக்கு அவர் கடன் தர வேண்டும் என்று முழுமையாக தெரியாது. அப்படியிருக்கும்போது, அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று பதிலளித்துள்ளார்.
நீதிமன்றத்தில் பிரபு எடுத்துரைத்த இந்த வாதம் சரியானதே.. தாய் சேய் என்றாலும், வாயும் வயிறும் வேறுதான்.. உடன்பிறந்தவர்கள் என்பதாலேயே அண்ணன் கடனுக்கு தம்பி பொறுப்பாளி ஆக முடியாது.. சிவாஜி கணேசன் ஏற்கனவே உயில் எழுதியிருக்கிறார்.. தன்னுடைய 2 மகன்கள், 2 மகள்களுக்கும் சொத்துக்களை பிரித்து வைத்து எழுதியிருக்கிறார்.
உயில் போலியானது
இதற்கு நடுவில்தான், சகோதரிகளுக்கு, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு வந்தது.. சிவாஜி கணேசன் உயில் பொய்யானது என்று சிவாஜி மகள்கள் சொன்னார்கள். இதனால், பிரபு, ராம்குமார் மீது 2 சகோதரிகளும் புகார் தந்தார்கள்..
பிறகு 4 பிள்ளைகளுமே உட்கார்ந்து சமரசம் பேசி, சொத்தை பிரித்து கொண்டார்கள். இன்னாருக்கு இன்ன சொத்து என்று நால்வருக்குள் பிரிக்கப்பட்டு விட்டது. அந்தவகையில்தான், அன்னை இல்லம் பிரபுவுக்கு வந்து சேர்ந்துள்ளது.. அப்படி கையில் வந்துள்ள அன்னை இல்லத்தை, எப்படி அண்ணனுக்கு தர முடியும்?
இது வெறும் செய்திதான்
எனினும் இதெல்லாம் சிவாஜி கணேசன் பிள்ளைகளுக்குள் நடக்கும் சொத்து விவகாரம். யாருமே அதற்குள் தலையிட்டு விமர்சிக்க முடியாது.. ஆனால், சிவாஜி கணேசனை நான் விமர்சித்ததாக, சிவாஜி ரசிகர்கள் கோபப்படுகிறார்கள். எனக்கு போன் செய்து திட்டுகிறார்கள்.. நான் வெறும் செய்தியைதான் சொல்கிறேன்.. இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.. எப்போதுமே சிவாஜி கணேசன் பற்றி நான் துளிகூட தவறாக சொன்னதில்லை, சொல்லவும் மாட்டேன்" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications