மதராஸி வெற்றி மட்டுமல்ல! ரசிகர்கள் இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கல! எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை: ஒரு சாதாரண மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவருடைய வளர்ச்சி என்பது ஒரு சில படங்களால் வந்தது அல்ல; ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டிய உழைப்பும், ரசிகர்களுடன் அவர் கொண்டிருக்கும் அன்பான உறவும்தான்.
இப்படிப்பட்ட உழைப்பால் உருவான அவருடைய சமீபத்திய திரைப்படம், மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், பெரிய அளவில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்கள் செய்த செயல்களை சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சி
விஜய் டிவியில் ஒரு சாதாரண மிமிக்ரி கலைஞராகவும், அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் ஒரு போட்டியாளராகவும் சிவகார்த்திகேயன் தனது பயணத்தைத் தொடங்கினார். அவருடைய நகைச்சுவை உணர்வும், ரசிகர்களுடன் இயல்பாகப் பேசும் விதமும் சீக்கிரமே அவரை ஒரு தொகுப்பாளராக உயர்த்தியது.
மெரினா படம் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார். அமரன் திரைப்படத்திற்குப் பிறகு, இப்போது மதராஸி படம் மூலம் ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இன்று விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் மக்கள் இவரைப் பார்க்கிறார்கள். விஜய் அரசியலுக்குச் சென்ற பிறகு, அடுத்த தளபதி சிவகார்த்திகேயன்தான் என்று பலரும் பேசுகிறார்கள்.
ரசிகர்கள் தான் என் பலம்
அமரன் திரைப்படத்தை தொடர்ந்து மதராஸி படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ரசிகர்களைச் சந்தித்த அவர், தனது நன்றியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார்.
"தோரணங்கள், கட்-அவுட்டுகள், பேனர்கள் என படத்தின் வெற்றியை நீங்கள் கொண்டாடாமல், அதன் வெற்றியைப் பல்வேறு நல உதவிகள் மூலம் கொண்டாடுவதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது" என்று தனது ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ரசிகர்களுக்குத் துப்பாக்கி கொடுக்கும் காட்சி கோட் படத்தில் வைக்கப்பட்டது சிவகார்த்திகேயன் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மதராஸி படத்திற்கு வந்த பாசிட்டிவான விமர்சனங்கள் காரணமாகவே, படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இன்று திங்கள் கிழமை என்பதால், இன்றுதான் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது தெரியவரும். எப்படிப் பார்த்தாலும், ஒரு தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர், இன்று பெரிய நடிகர்களுக்குச் சமமாக நிற்கிறார் என்பது பலருக்கும் ஒரு பெரிய உத்வேகம். சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சி பலருக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடம்!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications