மதராஸியில் மாஸ் பண்ண சிவகார்த்திகேயன், இதுல மிஸ்ஸாயிட்டாரே.. கோட்டை விட்ட அனிருத்.. எதுவும் ஒட்டல

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 'சிக்கந்தர்' திரைப்படம் வெளியானது. சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்த இந்த பாலிவுட் படம் படுதோல்வியடைந்தது. தொடர் தோல்விகளில் இருக்கும் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "மதராஸி படம், முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் எடுத்துள்ள படம்.. ஒரு ஹிட் தரவேண்டிய கட்டாயத்துக்காக எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.. மதராஸி ஒரு ஆக்‌ஷன் படம்தான்..

Television Sivakarthikeyan Madharaasi

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படத்துக்கு தேவையான சண்டைக்காட்சிகளை வைத்து படம் எடுத்துள்ளனர்.. நிறைய ஆக்‌ஷன் பிளாக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.. சிவகார்த்திகேயன் மெனக்கெட்டு, ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளை செய்துள்ளார்.. வித்யூ ஜமாலுடன் சிவகார்த்திகேயன் மோதும் கட்சிகள் நன்றாக உள்ளன.. வித்யூ ஜமாலுக்கு இந்த படத்தில் நிறைய ஸ்கோப் தரப்பட்டுள்ளது..

துப்பாக்கி 2ம் பாகம்

படத்தின் முதல் பாகம் தொய்வாக இருந்தாலும், 2வது பாகம் பரபரப்பாக போகிறது.
கத்தி, துப்பாக்கி போல ஏஆர் முருகதாஸ் தன்னுடைய பாணியில் செய்துள்ள படம் இதுவாகும்.. மதராஸி என்று படத்துக்கு பெயர் வைத்ததற்கு பதிலாக, துப்பாக்கி 2 என்று வைத்திருக்கலாம்.. படம் முழுக்க துப்பாக்கி சண்டை வருகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல் இருக்கிறது. சண்டைக்காட்சிகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இது நல்ல படம்.

சிவகார்த்திகேயனுக்கு இருப்பது ஃபேமிலி ஆடியன்ஸ்தான்.. குழந்தைகளும், இளைஞர்களும்தான் அவரது ரசிகர்கள்.. சிவகார்த்திகேயனின் காமெடியை அவர்கள் விரும்பி பார்ப்பார்கள்.. அந்தஅளவுக்கு இயல்பாகவே காமெடி செய்யக்கூடியவர் சிவகார்த்திகேயன்.. ஆனால், அதுதான் இந்த படத்தில் அவருக்கு மிஸ்ஸாகிவிட்டது ஆச்சரியமாக உள்ளது.

காமெடி எங்கே

ஆக்‌ஷன் படம் என்றாலும் ஜாக்கிசான் படம் போல ஆங்காங்கே காமெடியை சொல்லி சென்றிருக்கலாம்.. ஆனால், எங்குமே காமெடி சொல்லவில்லை.. காமெடிக்கும் சிவகார்த்திகேயனை பயன்படுத்தவில்லை..காமெடி நம்பி செல்பவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும்.

அதேபோல, கதையின் முடிவை ஆரம்பத்திலேயே யூகித்துவிடுவதுதான் படத்தின் மிகப்பெரிய தொய்வாக உள்ளது.. சிவகார்த்திகேயனின் பிளாஷ்பேக் சீன்களை இன்னும் நிறைய வைத்திருக்கலாம். சிவகார்த்திகேயன் ஏன் இவ்வளவு கரடுமுரடாக மாறுகிறார் என்பதற்கான காரணத்தை அதிக சீன்களை வைத்து சொல்லியிருக்கலாம்.

முருகதாஸ் வசனம்

அதேபோல படத்தின் முதல் பாதியிலேயே கதையை நேரடியாக சொல்லிவிடுகிறார்கள்.. அதுதான் இந்த படத்தின் மைனஸ் எனலாம். அதேபோல 10, 15 வருடங்களுக்கு முன்பு வந்த ஏஆர் முருகதாஸின் பட காட்சிகளே, இந்த மதராஸி படத்திலும் தென்படுகிறது.. அதையெல்லாம் மாற்றியிருக்கலாம்.. வசனத்தையும் வேறு யாரையாவது வைத்து எழுதியிருக்கலாம்.

சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து நடித்தாலும், திரைக்கதையில் சஸ்பென்ஸ் இல்லாமல் போய்விட்டது. படத்தின் ஹீரோயின் வித்யூத் ஜாம்வால் நன்றாக இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோயின் கிடைத்துவிட்டார். வெயிட்டான ரோலில் நடித்துள்ளார்..

ஆழமான காதல் இல்லை

ஆனால், சிவகார்த்திகேயனுடனான காதல் காட்சிகள் அந்த அளவுக்கு வலுவாக இல்லை.. டூயட் மிஸ்ஸாகிவிட்டது.. இதுவே அமரன் படத்தில் சாய் பல்லவியுடனான காதல் மிக ஆழமாக சொல்லப்பட்டிருக்கும்.. இதில் அப்படியான காட்சிகள் இல்லை.. ஒரு நடிகையாக வித்யூத் ஜாம்வால் நன்றாக நடித்துள்ளார்.. எனவே, சினிமாவில் இன்னொரு ரவுண்டு வருவார்.

அனிருத் இந்த படத்தில் கோட்டை விட்டுவிட்டார் எனலாம்.. ஒரு பாட்டு மட்டும்தான் சுமாரா இருக்கு.. மற்ற பாடல்களும் ஒட்டவேயில்லை.. ரீ-ரிக்கார்டிங் மெனக்கெடவேயில்லை.. ஏற்கனவே செய்த பல படங்களின் டிராக்குகளையே இந்த படத்துக்கும் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

விக்ராந்த் பிஜூ மேனன் இருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் ஏஆர் முருகதாஸ் அப்டேட் ஆகவில்லை என்றே தெரியவில்லை.. அல்லது சரியான நபர்கள் அவருடன் இல்லையா தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+