பலவருட சர்ச்சைக்கு மேடையில் முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக சொன்ன அந்த வார்த்தை
சென்னை: சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் வெளியான சமயத்தில் அருண் விஜய் போட்ட ஒரு போஸ்டால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜயை திட்டி வந்தனர். அதற்குப் பிறகு அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு சிவகார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் போட்டியாளராக அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு தொகுப்பாளராக கலக்கி கொண்டு இருந்தார். பிறகு அதிலிருந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்து இப்போது சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் உண்மையான உழைப்பும், கடின போராட்டம் இருந்தாலும் இது ஒரு சிலரை வயிறு எரிய வைத்திருந்தது.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமையில் பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பேசுவதை பார்க்க முடிந்தது. ஆனாலும் இப்போது சிவகார்த்திகேயன் தனக்கென்று சினிமாவில் ஒரு இடத்தை உருவாக்கி விட்டார். இந்த நிலையில் தான் நேற்று பிரபல இயக்குனரான பாலாவின் இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்படுகிறது. வணங்கான் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் திடீரென்று அவர் அந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்கு பிறகு தான் நடிகர் அருண் விஜய் அந்த திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.

பொதுவாக பாலா இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் பயப்படுவார்கள். காரணம் பாலாவின் திரைப்படம் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தோடு இருக்கும். அதுபோல நடிகர் நடிகைகளை நினைத்த மாதிரி காட்சிகள் வரவேண்டும் என்று பாடாயப்படுத்தி எடுத்து விடுவார். அதனாலேயே அந்த படம் வெற்றி பெற்று விடுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா எதற்காக விலகினார் என்ற தகவல் இதுவரைக்கும் வேறு யாருக்கும் தெரியாது. ஆனாலும் நடிகர் அருண் விஜயை வைத்து இந்த படத்திற்கான மொத்த வேலைகளையும் பாலா முடித்துவிட்டார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் காமாட்சியும், பாலாவும் சேர்ந்து தான் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அது மட்டுமல்லாமல் இயக்குனர் பாலா தற்போது திரை உலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் நிகழ்ச்சியில் கொண்டாடினார்கள். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர் சிவகுமார், சூர்யா, மணிரத்தினம், சிவகார்த்திகேயன், மிஷ்கின், சமுத்திரக்கனி, வேதிகா, மன்சூர் அலிகான், நித்திலன் சுவாமிநாதன், மாரி செல்வராஜ் பாக்கியராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பாலா குறித்து பெருமையாக பேசி இருந்தனர்.
இதில் யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடைபெற்றது. அதாவது சூர்யா இந்த நிகழ்ச்சியில் வந்ததும் பெரியதாக ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதுபோல அவர் பேசுகையில், பாலா தான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது, நந்தா படத்தில் அவர் எனக்கு கொடுத்த முக்கியத்துவம் காரணமாகத்தான் எனக்கு அடுத்தடுத்த பல வாய்ப்புகள் வந்தது என்று தங்க சங்கிலி ஒன்றை பாலாவிற்கு பரிசளித்தார்.
அதுபோல இன்னொரு சம்பவம் நடைபெற்றது. அதாவது சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்படுகிறது. அதற்கு காரணம் அருண் விஜய் தான். அதாவது சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படம் வெளியான சமயத்தில் அருண் விஜய் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில் "யார் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு" என்று டேக் செய்திருந்தார். இதனால் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தான் அருண் விஜய் கலாய்க்கிறார் என்று சமூக வலைத்தள பக்கங்களில் இருவருடைய ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டு இருந்தனர். அப்போது அந்த பிரச்சனை பெறும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இப்போது இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபோல அருண் விஜய் பற்றி சிவகார்த்திகேயன் பேசும்போது, "அருண் விஜய் அண்ணா தான் எனக்கு போன் செய்து நீ கண்டிப்பா வரணும் தம்பி என்று சொன்னார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் மறுக்காமல் வந்தேன்" என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications