Madharasi: அடுத்த தளபதின்னு சொல்லி இப்படி ஆயிடுச்சே! மதராஸி ட்ரெய்லருக்கு நடந்த சம்பவம்! சிவகார்த்திகேயனுக்கு சவால்
சென்னை: தமிழ் சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் நுழைந்து, குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' போன்ற வெற்றிப் படங்கள், அவரைப் பல சீனியர் நடிகர்களை முந்திச் செல்ல வைத்தன. தற்போது, ரஜினி, அஜித், விஜய்க்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். குழந்தைகளுக்குப் பிடித்த நடிகர் என்ற இமேஜ், அவருடைய வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

₹300 கோடி வசூல் சாதனை
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அமரன்' திரைப்படம், ₹300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ஒரு புதிய சாதனையைப் படைத்தது. ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு இந்த வசூலை எட்டிய முதல் நடிகர் சிவகார்த்திகேயன் தான். இந்த வெற்றியின் உச்சத்தில், அவர் இப்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
மதராஸி டிரெய்லர் விமர்சனம்
'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. டிரெய்லரின் காட்சிகள், வில்லன் கும்பல் சிவகார்த்திகேயனின் காதலியைப் பிடித்து வைத்து பிளாக்மெயில் செய்வது போலவும், அவர்களைக் காப்பாற்ற சிவகார்த்திகேயன் போராடுவது போலவும் அமைந்துள்ளன. டிரெய்லரில் அசத்தலான ஆக்சன் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் இடம்பெற்றிருந்தன.
வரவேற்பில் பின்னடைவு
டிரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்திற்குப் பிறகும், யூடியூபில் வெறும் 28 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். பொதுவாக, சிவகார்த்திகேயன் படங்களுக்கு டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வியூஸ் கிடைப்பது வழக்கம். படக்குழு பெரிய அளவில் விளம்பரங்களைச் செய்யாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், டிரெய்லருக்குக் கிடைத்த இந்த வரவேற்பு, படத்திற்கு எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மதராஸி இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் இசை வெளியீட்டு விழா, ட்ரைலரில் அதிகமாக பில்டப் காட்டப்பட்டு பிறகு கதைகள் சொதப்பியதால் அந்த படங்கள் படு தோல்வி அடைந்து வருகிறது. அதுபோல சிவகார்த்திகேயன் படம் மாறிவிடக்கூடாது என்று பட குழுவினர்கள் இந்த படத்தை பற்றி அதிகமாக பில்டப் செய்யவில்லையா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கதை சுவாரசியமாகவும் இயல்பானதாக இருந்தால் படம் மக்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதை இப்போது மதராஸி பின்பற்றுகிறதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
'மதராஸி' படம், 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் படம், ₹300 கோடி சாதனையைத் தொடருமா அல்லது படக்குழுவின் புரோமோஷன் குறைபாட்டால் விமர்சனங்களைச் சந்திக்குமா? என்பது செப்டம்பர் 5 அன்று தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications