எனக்கு பணத்தை விட மரியாதை முக்கியம்.. விஜய் டிவியில் இப்படித்தான் நடந்துச்சு! சிவகார்த்திகேயன் ஓபன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பணத்தை விடவும் மரியாதை தான் முக்கியம் அதற்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்று பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் பல நடிகர்கள் சின்னத்திரையில் இருந்த வெள்ளித்திரைக்கு பயணிக்கிறார்கள். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வது அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. காரணம் வெள்ளிதிரையில் உள்ள நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதை சின்னத்திரை நடிகர்களுக்கு கிடைக்காது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் பிறகு தொகுப்பாளராக மாறி இருந்தார். ஒரு சில வருடங்களாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வேலை பார்த்தார். பிறகு சினிமாவில் நுழைந்து இப்போது டாப் நடிகராக மாறி இருக்கிறார்.
அதுவும் மிகவும் குறுகிய காலகட்டத்தில் மேலே உயர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார். இவர் வளர்ச்சியை பார்த்து பலர் பொறாமைப்படுவார்கள் என்று நடிகர் அஜித்தே இவரிடம் சொன்னதாக சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
ஆரம்பத்தில் காமெடி கலந்த காதல் காட்சிகளில் ஜாலியாக நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தின் மூலமாக வேறொரு பரிமாணத்தை காட்டியிருந்தார். அமரன் திரைப்படத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையில் எதார்த்தமாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
பல வாரங்களாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அமரன் திரைப்படம் இதுவரைக்கும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு வந்த சூர்யாவின் கங்குவா படம் 100 கோடியை தாண்டாத நிலையில் அமரன் இன்னும் கெத்து காட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் எனக்கு ஆரம்பத்தில் விஜய் டிவியில் பெரிய சம்பளம் எல்லாம் கிடையாது. ஆனால் மரியாதை இருந்தது. எனக்கு ஒரு மேடை கொடுத்தார்கள், அதுவே போதும். எனக்கு கிடைச்ச பிளாட்பார்மை வச்சு ஏதாவது ரெவென்யு பண்ணிக்கிறதுக்கு முயற்சி பண்ணுனேன்.
எனக்கு அது போதுமானது ஆனால் எனக்கு இதை எல்லாம் விட முக்கியம் நீங்க எனக்கு மரியாதை கொடுக்கிறீர்கள், அந்த மரியாதை எனக்கு யாரு கொடுக்கலையோ அவங்க கிட்ட நான் இருக்க மாட்டேன். அது யாராக இருந்தாலும்... அவங்களால எவ்வளவு பெரிய ஆதாயம் இருந்தாலும் என்னால் இருக்க முடியாது என்று சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல இன்னொரு பேட்டியில் பேசும்போது நான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போகும் போது அங்கு நிலைமை வேறுவிதமாக இருந்தது. நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்த போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நடிகர்களை வேணும் என்றால் கேட்டுக் கொள்ள பாருங்கள் அவர்கள் என்னுடைய வலி வேதனையை சொல்லுவார்கள். என்றும் பகிர்ந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications