சூர்யா பற்றி சிவகுமார் சொன்ன “அந்த” வார்த்தை, விளாசும் ரசிகர்கள்.. ப்ளூ சட்டை மாறன் நேரடி தாக்கு.. இது புது பிரச்சனை
சென்னை: நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் பற்றி பேசும் போது "தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு முன்பு எந்த நடிகர் சிக்ஸ்பேக் வெச்சிருந்தான்" என்று ஒருமையில் பேசி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் சிவக்குமாரை திட்டி கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனும் இது பற்றி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர்களில் ஒருவர்தான் சிவகுமார். இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் மேடைகளில் இவர் பேசும் பேச்சுகள் மற்றும் ரசிகர்களிடம் நடந்து கொள்ளும் விதம் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் செல்பி எடுக்க வந்த ஒரு ரசிகரின் போனை பிடுங்கி உடைத்து இருந்தார்.

ரெட்ரோ இசை வெளியீட்டு விழா
அதுபோல சிவகுமாரின் மகன் சூர்யா மற்றும் மருமகள் ஜோதிகாவும் பேசுவதும் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதுவும் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்து விட்டது.
வருத்தத்தில் சூர்யா
இந்த நிலையில் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற கடின உழைப்பு போட்டுக் கொண்டிருக்கும் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது சூர்யாவின் சார்பாக அவருடைய அப்பா சிவகுமாரும் கலந்து கொண்டு இருந்தார்.

சிவக்குமார் சர்ச்சை பேச்சு
சிவகுமார் பேசிய விஷயம் தான் இப்போது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அதாவது அவர் தன்னுடைய மகன் பற்றி பேசும் போது "தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது உண்டா? அதற்குப் பிறகு யாராவது உண்டா? என் கார்த்திக் கூட உண்டா? அவரை டாக்டர் உடலை வருத்திக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார் என்று அந்த பேட்டியில் சிவக்குமார் பேசி இருக்கிறார். இதுதான் இப்போது ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் கருத்து
சூர்யாவுக்கு முன்பு சரத்குமார், அருண் பாண்டியன், அர்ஜுன் போன்ற பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். ஆனால் சிவக்குமார் அவர்களையெல்லாம் மறந்துவிட்டார், சூர்யாவுக்கு பிறகு கூட நடிகர் சூரி, விஷால் உட்பட பல நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறார்கள் என்று அந்த ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இது பற்றி ப்ளூ சட்டை மாறனும் களத்தில் குதித்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

சூர்யாவின் மாற்றம்
ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சிவகுமாரின் பேச்சை குறிப்பிட்டு, சூர்யாவுக்கு முன்னாடி சிக்ஸ் பேக் வச்சவன் யாரு இருக்கா--- சிவகுமார். இது என்னடா புது புரளியா இருக்கு? என்று பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது அந்த திரைப்படம் 200 கோடி வசூல் செய்யும் இரண்டாவது பாகம் வெளியாகும் போது மற்ற எந்த படங்களும் வெளியாக முடியாது அந்த அளவிற்கு இருக்கும் என்று அதிகமாக பேசி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டது.
ரசிகர்களின் கமெண்ட்
அதனால் இப்போது ரெட்ரோ திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசும் போது மிகவும் குறைவாக தான் பேசி இருந்தார். படத்தில் நடித்த நடிகர்கள் பற்றியும், தன்னுடைய வளர்ச்சிக்கு ரசிகர்கள் தன்னுடைய மனைவி, குடும்பத்தார் கொடுக்கும் ஒத்துழைப்பு பற்றி தான் பேசி இருந்தார். ஆனால் இப்போது சிவக்குமார் பேசி இருப்பதை பார்க்கும்போது ரசிகர்கள் சூர்யாவுக்கு எதிரி வேறு எங்கும் இல்லை அவருடைய குடும்பத்தில் தான் இருக்கிறார்கள், சூர்யாவை ஒவ்வொரு முறையும் இப்படி மாட்டி விடுகிறார்களே என்று கமெண்ட் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications