Thaazhamboo Serial: சிவனுக்கு பிடிக்காதது.. நாகங்களுக்கு பிடித்தது .. தாழம்பூ!
சென்னை: விஜய் டிவியின் தாழம்பூ சீரியல், அந்த டிவியின் மற்ற சீரியல்களை விட சற்றே வித்தியாசமாக இருக்கிறது.
இந்திரா சவுந்திர ராஜன் நாவல் படிக்கற மாதிரி மர்மமா இருக்கிறது.. சீரியலின் தலைப்பே நாகங்களுக்கு பிடித்தது என்று சொல்லப்படும் சிவனுக்கு ஒவ்வாது என்று சொல்லப்படும் தாழம்பூ என்று இருப்பதால் கொஞ்சம் சீரியலை பார்க்கும் ஆர்வம் வருகிறது.
பாம்பு கழுகு என்று கிராபிக்ஸ் ஆதிக்கம் ஆர்மபித்தில் அதிகம் இருந்தாலும்,, பிற்பாடு கதையில் கவனம் செலுத்தி இருப்பதால் விறுவிறுப்பான வித்தியாசமான சீரியலாகத்தான் தாழம்பூ சீரியல் இருக்கிறது.

விஜய் டிவி
தாழம்பூ சீரியலை விஜய் டிவி ஏன் மதிய நேரத்தில் ஒளிபரப்பி வருகிறது என்று தெரியவில்லை. இந்த சீரியலின் இரண்டாவது ஒளிபரப்புக்கும் விஜய் டிவி நேரம் ஒதுக்கித் தரவில்லை. நாகலோகம் என்று ஒன்றை நம்ப முடியவில்லையே தவிர கதை மர்ம நாவல் படிப்பது போலத்தான் இருக்கிறது.

கதையில் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்ல ஒரு மர்ம சீரியலாக இதை கொண்டு செல்லலாம். சாதாரண நாகினிகள் இச்சாதாரிகள் என்பதை மட்டும் தவிர்த்து இருந்தால் தரமான நல்ல மர்ம கதையாக இது இருந்து இருக்கும்.

ரேவதி பூஜை
அத்ம லிங்கம் ரேவதி மட்டும்தான் பூஜை செய்ய வேண்டும் என்பது கதையில் நன்றாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக தாத்தா பின்னர் பேத்தி ஆத்ம லிங்கத்தை தொடுவது வழிபடுவது இதெல்லாம் தமிழ் குடும்பங்களில் இருந்த நடைமுறைதான். அதை கதையில் காண்பித்து இருப்பது நன்றாக இருக்கிறது.

சிவ வழிபாடு
முன்னோர்கள் சிவ வழிபாடு செய்ததை இப்படியான முறையில் சீரியல்களில் காண்பிப்பது என்பதும் நம்புபடியாக இருக்கிறது. இதன் இடையில் நாகங்கள் இருப்பது என்பதும் நம்பும்படியாக இருந்தாலும் அதையும் காண்பிக்கும் விதத்தில் மெனெக்கெட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி காண்பிக்க வேண்டும் என்பதே சீரியல் ஆர்வலர்களின் விருப்பம்.












Click it and Unblock the Notifications