5வது மாத வளைகாப்பு.. எங்களுக்கு வாரிசு வரப்போகுது! நெகிழ்ந்த கன்னிகா சினேகன்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை கன்னிகா ரவி மற்றும் சினேகன் தம்பதி தாங்கள் அப்பா அம்மாவாக போகிறோம் என்ற மகிழ்ச்சி செய்தியை சில வாரங்களுக்கு முன்பு பகிர்ந்து இருந்தனர். இன்று கன்னிகாவிற்கு ஐந்தாவது மாத வளைகாப்பு எளிமையாக நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஹிட்டான பாடல்களை எழுதி இருக்கும் சினேகன் பலரும் முணுமுணுக்கமும் பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர்தான் என்று இவருடைய முகத்தை காட்டியது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். ரசிகர்களுக்கு பேவரைட் ஆன பல பாடல்களுக்கு பாடல்களை எழுதிய இவருடைய முகம் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

சினேகன் பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு நடிகை கன்னிகா ரவியை 8 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதல் வெளியே தெரியாமல் ரகசியமாகத்தான் இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியில் தான் சினேகன் ஒரு நடிகையை காதலிக்கிறார் என்ற உண்மை வெளியே தெரிந்தது. அப்போது கூட சினேகன் கன்னிகாவை தான் காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லவில்லை.

அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து கமல்ஹாசன் தலைமையில் கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று அதற்கான வாய்ப்புக்கு காத்திருந்த கன்னிகாவிற்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கன்னிகா நடிகை மட்டுமல்லாமல் சிலம்பாட்டம், ஓவியம், புத்தக எழுத்தாளர், சமையல் கலைஞர் என்று பல திறமைகளை வைத்திருக்கிறார் திருமணத்திற்கு பிறகும் நடிப்பதற்கு வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். ஆனால் இன்று தம்பதியிடம் திருமணமான அடுத்த மாதத்தில் இருந்து குழந்தை குறித்து வெளியே போகும் போதெல்லாம் பலரும் கேள்வி கேட்பதால் வருத்தமாக இருக்கிறது என்று சினேகன் மற்றும் கன்னிகா பேட்டிகளில் பேசியிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்கு மேலே ஆகிவிட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று கன்னிகாவிற்க்கு ஐந்தாவது மாத வளையல் அணியும் விழா நடைபெற்றிருக்கிறது.

அப்போது எடுத்த புகைப்படங்களை கன்னிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் வரப்போகும் எங்கள் வாரிசினை நாங்கள் வரவேற்கிறோம் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். சினேகன் தான் அப்பாவாக போகிறேன் என்ற மகிழ்ச்சி செய்தியை சொன்ன சில வாரங்களிலே அவர் கதாநாயகனாக நடிக்கும் சீரியல் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பவித்ரா என்ற சீரியலில் தான் சினேகன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications