Azhagu Serial: பரவால்லியே... சற்றே மாற்றம் தெரியுது!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் சிறையில் கைதியாக இருக்கும் பூர்ணாவுக்கு ஸ்பெஷலாக பிரியாணி சாப்பாடு கொடுக்கப்படுகிறது. அவள் அம்மா வழக்கறிஞர் என்கிற செல்வாக்கில்.
அப்போது சிறை வார்டனாக இருக்கும் ஒரு பெண் போலீஸ், அதை கண்டுபிடிச்சு, கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே வராங்க. மற்ற கைதிகள் ஜெயில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்க. பூர்ணா பிரியாணி சாப்பிட கெத்தாக உட்கார்ந்து இருக்கிறாள்.
உள்ளே வந்த வார்டன் சொல்றாங்க... இது மட்டும் சாப்பாடு இல்லாம வேற ஏதாவதா இருந்துச்சு.. அப்படியே அதை மிதிச்சு இருப்பேன். உனக்கு மட்டும் என்ன இந்த மாதிரி சலுகை எல்லாம் என்று கேட்டு, பிரியாணியை கொடுத்த போலீசிடம் இதை எடுத்துட்டு போன்னு சொல்றாங்க.

சாப்பாட்டை மிதிச்சா
பெண் போலீஸ் சாப்பாட்டுக்கு எப்படி மதிப்பு தரணும்னு சொல்லி, பூர்ணாவுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியை பக்குவமா எடுத்துட்டு போகச் சொல்றாங்க. சாப்பாடுன்ன வாசி அதை ஒன்னும் செய்யாம விட்டுட்டேன். வேற எதாவது நீ திருட்டுத்தனம் பண்ணி அதை இப்போ என் கண் முன்னால் பார்த்திருந்தா அதை மிதிச்சு இருப்பேன். உனக்கும் மிதி கிடைக்கும்னு சொல்றாங்க. அந்த சிறை வார்டன் சாப்பாட்டை மிதிக்கும்படி சீன் வச்சா நல்லாவா இருந்திருக்கும்?

இதைத்தான் சொன்னோம்
இது மாதிரி சில விஷயங்களைத்தான் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறோம். வயதான பெண்கள் கோவத்தில் பூவைத் தூக்கி வீசறாங்க. உணவுப் பொருட்களை காலால் மிதிக்கறாங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று சொல்லி இருந்தோம். என்னதான் கோவம் வந்தாலும் இப்படி பெண்கள் நடந்துக்கொள்வதில்லை என்பதை அழகு சீரியலில் போலீஸ் வார்டன் நிரூபிச்சு இருக்காங்க.

மாத்தி யோசிங்க
இதுக்குத்தான் காலம் காலமா இதையே பின்பற்றி சீன் எடுக்காதீங்க. மாத்தி யோசிங்கன்னு சொல்லி இருந்தோம். மாத்தி யோசிச்சா டயலாக் கிடைக்காதா இல்லை காட்சிதான் கிடைக்காதா? கற்பனைக்கா பஞ்சம்....! அழகு சீரியலின் இந்த காட்சி பயனுள்ள காட்சியாக இருந்தது. பூர்ணாவுக்கு டஃப் கொடுக்கும் சிறை வார்டனாக வருகிறார் இந்த பெண் போலீஸ்.

ஜெயிலில் பூர்ணா
ஜெயிலில் இருக்கும் பூர்ணா, ஜெயிலுக்கு போயும் கூட திருந்தவில்லை. இன்னும் இன்னும் என்று சுதாவைப் பழிவாங்கத் திட்டம் போடுகிறாள். அழகு சீரியல் கதை எப்போது முடியுமோ அப்போது இந்த பூர்ணா திருந்துவார். அதுதானே சீரியல் தர்மம்! பூர்ணா திருந்திவிட்டால் அழகு கதைக்கு வேலை இருக்காது என்று பயணிக்கிறார்கள். அதுவரையில் பூர்ணா வில்லியாக என்ன செயல் செய்வாளோ அதை பொறுத்துப் போகத்தான் வேண்டும், சீரியல் பார்ப்பவர்கள். இதுதான் எழுதப்படாத விதி!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications