நீ பாதி... நான் பாதி.. பால் குடிக்கலாம் மாமா... அடடா காதல் பொங்கி வழியுதே...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனுக்கும், சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்கணும்னு, கண்ணனோட அக்காவும், மாமாவும் ஆசைப்படறாங்க. சவுந்தர்யாவுக்கும் ஆசை இருக்கு.
கண்ணன் வழக்கம்போலவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கான்.இவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலையேன்னு நினைச்ச அக்காவும், மாமாவும் ஜோதிடரை பார்க்க போறாங்க.
ஜோதிடர், சவுந்தர்யா மனசுல நினைக்கறது நடக்கும். அதுக்கு முன்னால கோயிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடத்தி வைங்க. முருகன், வள்ளி காதல் கதையுடன் கூடிய திருமணத்தை கூத்தாக நடத்தினால், மனம் போல மாங்கல்யம் கிடைக்கும்னு சொல்றார்.

வள்ளி திருமணம்
கோயிலில் முருகன் வள்ளி திருமணம் நடக்குது. சவுந்தர்யா மிக ஆசையாக கண்ணனின் அருகில் நின்று, மாமா மனசுல என்னை வைன்னு வேண்டிக்கறா. சவுண்டு மனசுல என்ன நினைக்குதோ அது தெரியாது..ஆனா, அக்கா, மாமா மனசுல என்ன நினைக்கறாங்களோ அதை நிறைவேத்தி குடு முருகான்னு கண்ணன் வேண்டிக்கறான்.

பாதி பால்
குடும்பமே விரதம் இருக்க, சவுந்தர்யாவுக்கு கண்ணன் பால் எடுத்து வருகிறான். சவுண்டு விரதம்னா வெறும் வயித்தோட இருக்கணும்னு அவசியம் இல்லை. பால் குடிக்கலாம்.. அதனால் இந்த பாலை குடிச்சுடுன்னு சொல்றான். ஏன் மாமா எனக்காக இவ்ளோ தூரம் மாடி ஏறி பால் எடுத்துட்டு வரே ... கூப்பிட்டா வந்திருப்பேனேன்னு சொல்றா. என்ன சவுண்டு எனக்காக தினமும் நைட்ல நீ சாப்பாடு எடுத்துக்கிட்டு மேல வர்ரதில்லையா..சரி மாமா நீ பால் குடிச்சியான்னு கேட்கறா சவுந்தர்யா.. இல்லை சவுண்டு, இனிமேதான் குடிக்கணும்னு சொல்றான் கண்ணன். இது நைவேத்திய பால்தானே.. அதனால என்ன மாமா, எனக்கு பசின்னா உடனே நீ தாங்கிக்காம பால் கொண்டு வந்திருக்கே.. உனக்கு பசின்னா நான் மட்டும் எப்படி மாமா தாங்குவேன்னு சொல்லி பாதி பாலை நீ குடிச்சுட்டு குடு மாமான்னு கண்ணன்கிட்ட தறா. கண்ணன் பாதி பால் குடிச்சுட்டு தர, மீதி பாலை குடிக்கறா சவுந்தர்யா.

கல்யாண கூத்து
வள்ளி, முருகன் கல்யாண கூத்து ஏற்பாடு செய்ய புறப்படறார் முத்து செல்வியின் அப்பா. ஊரெல்லாம் சின்னவருக்கும், சின்ன எஜமானி சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடந்தா நல்லாருக்கும், ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்குன்னு பேசிக்கறாங்கம்மா.. அதுக்குத்தான் முருகன், வள்ளி திருக்கல்யாணம், கூத்து எல்லாம் நடத்தறாங்களாமே.. பேசிக்கறாங்க...

கலக்கத்தில் முத்து செல்வி
கூத்து நடத்தினா சின்னவருக்கும், சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடந்திருமாப்பான்னு முத்து செல்வி கலக்கத்தில் கேட்கறா. அதுக்குதானேம்மா இதை செய்யறாங்க. கண்டிப்பா நடந்துரும்மான்னு அப்பா சொல்ல முத்து செல்விக்கு கண்கள் கலங்குது.

வாழ்க்கையிலும்
இப்போ நீ பாதி, நான் பாதின்னு பால் குடிச்ச மாதிரி, வாழ்க்கையிலும் நீயும் நானும் பாதிபாதியா சேர்ந்து வாழனும் மாமா.. முருகன்தான் அதை நிறைவேத்தி கொடுக்கணும்னு சவுந்தர்யா வேண்டிக்கறா.

கலங்காதே...
அக்கா நீ மனசுல என்ன நினைக்கறேன்னு தெரியும்க்கா... நீதான் திருக்கல்யாணம் பார்த்தியே.. உன்னோட ஆசையையும் முருகன் நீ நிறைவேத்தி வைப்பாருக்கான்னு தங்கச்சி சொல்றா.... நாம பஞ்சம் பொழைக்க வந்தவங்க.. அதிக ஆசைப் படக்கூடாது தங்கம்னு சொல்றா முத்து செல்வி.

கண்ணனா
என்னக்கா நீ நம்மளை மாதிரி மலை காட்டு மேட்டுல இருந்த வள்ளியையே முருகன் காதலிச்சு கல்யாணம் செய்துக்கலியா.. அதே மாதிரி உன் ஆசையை மட்டும் ஏன் முருகன் நிறைவேத்த மாட்டார்னு தங்கம் கேட்கறா. அதுவும் சரிதான் தங்கம்..முருகன் துணையில நடக்கட்டும்னு சொல்றா முத்து செல்வி. முருகன் துணை இல்லேன்னாலும், கண்ணன் துணையில நடக்கட்டும்க்கான்னு தங்கச்சி சொல்றா.என்ன சொன்ன தங்கம் .. கண்ணன் சின்னவருடின்னு முத்து செல்வி சொல்ல, ஐயோ அக்கா உனக்கு புடிச்ச சாமி கண்ணன்தானே அதான் சொன்னேன்னு தங்கச்சி ஜோக் அடிக்கறா...
இரு பெண்கள் இப்படி கண்ணனை நினைக்க, கண்ணன் மனசுல சவுந்தர்யா மேல பாசமும், முத்து செல்வி மேல நட்பும்னு மட்டுமே இருக்கு.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications