Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீமில் நல்ல மனுஷன் எஸ்பிபி.. நோட்டீஸை அனுப்பிட்டு "எழுந்து வா பாலு"? மனோஜை விட்டுட்டு தீபம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் கங்கை அமரன் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.. "கல்லுக்குள் ஈரம்" படத்தில் எழுதிய சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடி, இதெல்லாம் ஞாபகம் இருக்கா? இந்த பாட்டை 10 நிமிஷத்தில் எழுதினேன். பாம்குரோவ் ஓட்டலில் பாட்டை எழுதிட்டு வா என்று சொன்னீங்களே? என்றெல்லாம் பாரதிராஜாவிடம் கேட்டு பழைய நினைவுகளுடன் பாடி ஆறுதல் சொல்லியிருந்தார். இது வீடியோவாகவும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்துக்களை சொல்லி உள்ளார்.

BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "இதுல என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. பார்ப்பதற்கு மனசு கஷ்டமாக இருந்தது.. இவர்கள் எல்லாம் இதயத்துடன் வாழாமல் இசையுடன் வாழ்ந்தவர்கள்.. இளையராஜா, பாரதிராஜா போன்றோருக்கு கலைதான் உயிர்.. அதனால், கங்கை அமரனும் இசையுடன்தான் பாரதிராஜாவுக்கு ஆறுதலையும் சொல்ல வேண்டியிருக்கிறது..

Television SPB Manoj Bharathiraja Balu

ஜாம்பவான்கள் - உச்சம்

இவர்கள் எல்லாருமே திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள்.. மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர்கள்.. நாம் எந்த கருத்தும் இவர்களை பற்றி சொல்ல முடியாது.. ஆனால், ஒரு வருத்தம் உண்டு.. உயிருடன் இருக்கும்போது, உறவுகளை தாங்கி பிடித்து கொள்ள வேண்டும்.. உயர்வான கிரேடிலிருந்து கொஞ்சம் கீழே இறங்கிவந்து, சாதாரண மனிதர்களை போல இருக்கலாம்..

ஒருவர் இறந்தபிறகு மோட்ச தீபம், கற்பூரம் ஏற்றி கொண்டிருப்பதைவிட, உயிருக்கும்போதே ஆறுதலாக இருந்தால், எந்தவிதமான பரிதவிப்பும் இல்லாமல், ஏக்கமும் இல்லாமல், உயிர் சந்தோஷமாக பிரியும்..

சகோதரர்களின் குடும்பம் - உதவிக்கரம்

எப்படியும் இவர்கள் எல்லாம் மூன்றாம் நபர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.. இரண்டாம் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டமாட்டார்கள்.. சொந்த சகோதரர் மகன்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள்? என்று கேட்க போவதில்லை.. ஊரார் பிள்ளைகளுக்கெல்லாம் ஆதரவாய் இருக்க மாட்டீர்கள் என்றும் தெரியும்.. தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு ஆதரவாய் இருந்தால் போதும்.

இசைஞானி என்று கலைஞர் என்று பட்டம் தந்தார் .. ஆனால், மேடையில் ஒருமுறை இளையராஜா பேசும்போது, "7 ஸ்வரங்களுக்குள்தான் இசையை கொண்டு வர்றோம்.. ஆனால், எங்கள் பாடல்களை திருடுகிறார்கள்.. இப்படியெல்லாம் இசையமைத்தும், இசைஞானி என்று என்று பட்டமும் தருகிறார்கள்" என்று கேலி செய்தார்.. அதாவது, பட்டத்தையும் பெற்றுக் கொண்டு, பட்டம் தந்தவரையும் காயப்படுத்தியதுபோல பேசலாமா?

இழப்பீடு - காப்பிரைட்

இளையராஜாவுக்கு இசை தெரிந்திருக்கலாம், ஆனால் இங்கிதம் தெரியாதவர். இசைக்கடவுள், ராகதேவன் எல்லாம் இருக்கட்டும்.. ஆனால், பொது இடத்தில் இங்கிதம் தெரியாத நபர், அடுத்தவர்களிடம் எப்படி பழகுவது என்று, எப்படி நடந்து கொள்வது? என்று தெரியாத நபர் இளையராஜா.. அவரது காப்பி ரைட் விஷயத்துக்குள் போகவில்லை.. ஆனால்., பாட்டு கேட்பவர்கள்கூட தனக்கு இழப்பீடு தரவேண்டும் என்று சொல்லிவிட்டால், நம்ம நிலைமை என்னாகும்?

இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா என இந்த டீமிலியே நல்ல மனுஷன் எஸ்பிபிதான்.. "இளையராஜா காலம் எனக்கு பொற்காலம்" என்று மகிழ்ந்து சொன்னார் எஸ்பிபி.. ஒருமுறை அவருக்கு தொண்டையில் ஆபரேஷன் செய்யும் சூழல் ஏற்பட்டபோது, எஸ்பிபி போலவே குரல் உள்ளவர்களை தயார் செய்து கொண்டு வந்தவர்தான் மனோ.. பல இசையைமப்பாளர்களிடம் எஸ்பிபி நட்புடன் இருந்தார்..

எஸ்பிபி கிரேட்

கேளடி கண்மணி படத்தில் மூச்சு விடாமல் பாடியதாக கூறி, மண்ணில் வந்த காதல் ஹிட்டாகிவிட்டது. ஆனால், ஒரு மேடையில் கங்கை அமரன், "மூச்சு விட்டு பாடினாரா? மூச்சு விடாமல் பாடினாரா? என்பது எங்களுக்கே தெரிந்த ரகசியம்" என்கிறார்.. அதாவது புகழ் மொத்தமும் எஸ்பிபி-க்கு போயிடக்கூடாது என்பதற்காக இப்படி சொன்னார். மூச்சு விடாமல் பாடியதாக டெக்னிக்கலாக ஏதோ உபயோகப்படுத்தியிருந்தாலும், ஒரு மனிதருக்கு புகழ் கிடைக்கும்போது, அதை தாங்க முடியாமல, பொதுவெளியில் மேடையிலியே உடைத்தவர்தான் கங்கை அமரன்.. இப்படியான சின்ன புத்தி கங்கை அமரனுக்கு உள்ளது..

வைரமுத்து, இளையராஜா விஷயமென்றாலும்கூட, "என்னால தான் நீ, உன்னால தான் நான்" என்றெல்லாம் இவர்கள் பேசக்கூடாது.. இவர்கள் எல்லாரும் சேர்ந்த கூட்டு வெற்றி அது..

எஸ்பிபிக்கு அனுப்பிய நோட்டீஸ்

எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பும்போதே ரொம்ப உடைஞ்சிட்டாரு. எஸ்பிபி இறந்ததுமே, ரெட்ஹில்ஸ் பக்கமாக மகரல் என்ற பகுதியில் அவரது பண்ணை வீடு உள்ளது..

அங்கு அவரை அடக்கம் செய்ய, இரவில் சடலத்தை கொண்டு செல்கிறார்கள்,., அப்போது லாக்டவுன் உச்சத்தில் இருந்தது.. இரவு நேரம் மழையும் கொட்டிக் கொண்டிருந்தது.. ஆனால், வழியெல்லாம் மக்கள் திரண்டு வந்தார்கள்.. அப்போதுதான் திகைத்து போய்விட்டேன்.. புழல் போற வழியெல்லாம் கூட்டம் நின்று கொண்டிருந்தார்கள்.
இதுபோல எந்த பாடகருக்கும் மக்கள் நின்றிருக்க மாட்டார்கள்..

எழுந்து வா பாலு

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதுமே, அதுகுறித்து செய்தியாளர்கள் எஸ்பிபியிடம் கேட்டார்கள்.. "அதுபற்றி நான் எதுவுமே பேச விரும்பவில்லை" என்றாரே தவிர, ஒரு வார்த்தைகூட, இளையராஜாவை தவறாக பேசவில்லை. இந்த காப்பிரைட் பிரச்சனையை எஸ்பிபியை நேரில் அழைத்தே நேரடியாக பேசியிருக்கலாம்.. நோட்டீஸ் அனுப்ப போகிறேன் என்றும் வெளிப்படையாக அவரிடம் சொல்லியிருக்கலாம்...

அதைவிட்டுவிட்டு, எஸ்பிபி சீரியஸாக இருந்தபோது, "எழுந்து வா பாலு" என்றால்? நோட்டீஸையும் அனுப்பிவிட்டு, எழுந்து வா பாலு என்றால் எப்படி? கொரோனாவை விட மனதளவில் அன்றே கொல்லப்பட்டார் எஸ்பிபி.. தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னதற்கு காரணமே பணம், தலைகணம்தான்.. இதை எஸ்பிபி, சாதாரணமாக எடுத்துக் கொள்ள மிகப்பெரிய மனசு வேணும். தன்னுடைய சகாக்களிடம் இது மிகப்பெரிய தண்டனை எனக்கு என்றாராம் எஸ்பிபி..

பணம் + தலைக்கணம்

இளையராஜா இசையில் பாடியதை பொற்காலம் என்று நெகிழ்ந்தவருக்கு, அந்த பாடல்களை இனி பாடவே கூடாது என்றால், எப்படி இருக்கும்? இதைதான் மனோஜ் விஷயத்திலும் சொல்கிறேன்.. இருக்கும்போது, மனோஜூக்கு யாருமே எதுவுமே செய்யவில்லை.. கங்கை அமரன் படங்களை தயாரித்தவர் இல்லையா? இளையராஜா தயாரிக்கவில்லையா? ராமராஜனை வைத்து படம் தயாரித்தவர்கள், மனோஜை வைத்து படத்தை தர முடியாதா? அப்போதெல்லாம் செய்யாமல் திருவண்ணாமலையில் எதுக்கு தீபம்?

கங்கை அமரன், இளையராஜாவை காயப்படுத்தும் நோக்கம் இல்லை.. ஆனால், தங்களது செல்வாக்கை வைத்து, பணத்தை வைத்து, உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவுங்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

சுற்றுவட்டார மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.. பவதாரணி, மனோஜ் போயிட்டாங்க. அடுத்தடுத்த பிள்ளைகளுக்கு, அல்லது சகோதரர்களின் பிள்ளைகளுக்கு செய்தால் போதும்.. சொந்த உறவுகளுக்குகூட பணம் தர வேண்டாம்.. உங்களது செல்வாக்கை வைத்தாவது இல்லாதவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால் போதும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+