நடுத்தெருவில் தவித்த சமயத்தில் இயக்குனர் சேரன் செய்த செயல்.. ஆன்மீக பேச்சாளர் சுமதி ஸ்ரீ உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவருக்கு நாம் செய்யும் உதவி எப்போது, எந்த வகையில் அவருடைய வாழ்க்கையில் நினைவாக மாறும் என்று சொல்லவே முடியாது. சில உதவிகள் அப்போதைக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், பல வருடங்கள் கழித்து அதை நினைத்துப் பார்க்கும்போது அதன் அருமை இன்னும் அதிகமாக புரியும். அப்படியொரு சம்பவத்தைத்தான் ஆன்மீக பேச்சாளர் சுமதி ஸ்ரீ தற்போது பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்பு, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி சுமதி ஸ்ரீ, இயக்குநர் சேரன் தனக்கு செய்த உதவியைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Director Cheran

ஆன்மீக பேச்சாளர் சுமதி ஸ்ரீ

அப்போது சுமதி ஸ்ரீ ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக ஹாஸ்டல் பீஸ் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தாதவர்களின் பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், சுமதி ஸ்ரீயின் பெயர் மட்டும் தொடர்ந்து அந்தப் பட்டியலில் இருந்திருக்கிறது. அதுவும் சாப்பிடும் இடத்தில் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்ததால், பசியோடு சாப்பிடச் செல்லும்போது அந்தப் பட்டியலைப் பார்ப்பதே அவருக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கிறது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் அந்த சூழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்.

ஒரு நாள் இரவு திடீரென்று, "பீஸ் கட்டிய பிறகுதான் மீண்டும் உள்ளே வர வேண்டும்" என்று சொல்லி சுமதி ஸ்ரீயை ஹாஸ்டலை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்களாம். அந்த நேரத்தில் என்ன செய்வது, எங்கே செல்வது என்று தெரியாமல் அவர் நின்றிருக்கிறார். அப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருக்கிறது.

இரவில் சேரன் செய்த உதவி

அந்த சமயத்தில் சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்ததாம், அந்த எண் பேன்சி நம்பராக இருந்ததால் அதை சுமதி ஸ்ரீ மனப்பாடமாக வைத்திருந்தாராம். வேறு யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாததால், அருகில் இருந்த ஒரு காயின் பூத்துக்கு போய் அந்த எண்ணுக்கு போன் பண்ணி இருக்கிறார்.

அந்த அழைப்பை எதிர்பாராதவிதமாக சேரனே எடுத்திருக்கிறார்.
யார் பேசுறீங்க? என்று அவர் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் சுமதி ஸ்ரீயால் உடனடியாக பேச முடியவில்லை. பின்னர் ஒருவழியாக தனது நிலைமையைச் சொல்லியிருக்கிறார். ஹாஸ்டல் பீஸ் கட்ட முடியாததால் தன்னை வெளியே அனுப்பிவிட்டதாகவும், தான் திருச்சியில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பெருந்தன்மையான செயல்

அதற்கு சேரன், "உங்க அப்பா, அம்மா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுமதி ஸ்ரீ, அப்படி யாரும் இல்லை சார் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு சேரன் அதிகமாக எதையும் விசாரிக்கவில்லை. அவர் அப்போது சென்னையில் இருந்திருக்கிறார். சுமதி ஸ்ரீ திருச்சியில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் எப்படி உடனடியாக பணம் அனுப்புவது என்று ஒரு நிமிடம் யோசித்த சேரன், திருச்சியில் 'ஆட்டோகிராப்' படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கிற்கு செல்லுமாறு கூறியிருக்கிறார்.

அதோடு நிற்காமல், அந்த டெலிபோன் பூத்தில் இருந்தவரின் எண்ணையும் வாங்கிக் கொண்டு, இந்தப் பெண்ணை இங்கேயிருந்து வெளியே எங்கேயும் அனுப்பாதீங்க. ஆட்டோ பிடித்து திருச்சியில் படம் ஓடும் தியேட்டருக்கு மட்டும் அனுப்பி வைங்க என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு ஹாஸ்டல் வார்டனின் போன் நம்பரை வாங்கியிருக்கிறார். பிறகு சுமதி ஸ்ரீ தியேட்டருக்கு சென்றபோது அங்கே அவருக்காக ஒரு கவரில் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Director Cheran

பெரிய மனது

ஆனால் அதைவிட அவரை நெகிழ வைத்தது அங்கே சொல்லப்பட்ட இன்னொரு விஷயம். உங்களை சாப்பிட வச்சு அனுப்பச் சொல்லியிருக்கார் சார் என்று கூறியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் பணம் கிடைத்ததே பெரிய விஷயம். அதிலும் இரவு நேரத்தில் மீண்டும் ஹாஸ்டலுக்கு போனால் சாப்பிடுவதற்குக்கூட வழி இருக்காது என்பதை சேரன் யோசித்திருக்கிறார். அதனால் சுமதி ஸ்ரீக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார். அந்த சூழ்நிலையில் தனக்கு உதவி கிடைத்தது மட்டுமல்லாமல், தன்னுடைய பசியையும் ஒருவர் நினைத்துப் பார்த்திருக்கிறார் என்பதை நினைத்து மிகவும் அழுததாக சுமதி ஸ்ரீ கூறியிருக்கிறார்.

இதற்குப் பிறகும் சேரன் அமைதியாக இருந்துவிடவில்லை.
ஹாஸ்டல் வார்டனுக்கு போனில் பேசி, "இந்த நேரத்தில் பணம் கட்டவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணை வெளியே அனுப்பினால் அவள் எங்கே போவாள்?" என்று கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் நடந்தது 2004-ல். அதன்பிறகு சுமதி ஸ்ரீ தனது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்த பிறகு, சுமார் பத்து ஆண்டுகள் கழித்து 2014-ல் சேரனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்போதுதான் பல வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை அவரிடம் கூறியிருக்கிறார். அன்று இரவு உதவி செய்த சேரனுக்கு, தான் யாருக்கு உதவி செய்கிறோம் என்பதே சரியாகத் தெரியவில்லை. தொலைபேசியில் ஒரு மாணவி தனது சூழ்நிலையைச் சொல்லியிருக்கிறார். அவர் கேட்டதை வைத்து உதவி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.

பிறகு சில வருடங்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சுமதி ஸ்ரீயை பார்த்த சேரன், அவரிடம் அந்த பழைய சம்பவத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். நான் சுமதிக்கு உதவி செய்தேன் என்று பெருமையாகச் சொல்லுவேன் என்று சேரன் சந்தோஷமாக சொன்னாராம். இந்த சம்பவத்தை முதலில் வெளியில் சொன்னது தான்தான் என்றும், அதன்பிறகுதான் சேரன் அதைப் பற்றி பேசியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சுமதி ஸ்ரீ யார்?

சுமதி ஸ்ரீ ஆன்மீக பேச்சாளராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருபவர். ஆன்மீகம் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சூழ்நிலைகள், மனித உறவுகள், நம்பிக்கை போன்ற விஷயங்களையும் தனது பேச்சுகளில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்திருக்கும் இந்த பழைய சம்பவம், அவரது வாழ்க்கையில் சேரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+