"இது ரத்த கண்ணீருக்கு சமம்” கனவு இல்லத்தில் பால் பொங்கும் போது அழுத சித்து – ஸ்ரேயா தம்பதி! குவியும் வாழ்த்து
சென்னை: பொதுவாக ஒரே சீரியலில்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் போது ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியான திருமணம் சீரியல் பிரபலங்களான ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து தம்பதி இப்போது தங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பல வருட போராட்டத்திற்கு பிறகு சொந்தமாக வீடு கட்டி பால் காய்ச்சி இருக்கிறார்கள். அது குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
பல பிரபலங்களின் வாழ்க்கை ரசிகர்கள் நினைப்பதுபோல சொகுசானதாகவோ, பண பிரச்சனைகள் இல்லாததாகவோ இருப்பதில்லை. தங்களை காஸ்ட்லியானவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், தங்களின் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்ய தூண்டுகிறது. இத்தகைய சவால்களுக்குப் பின்பு, இந்த தம்பதி கனவு இல்லத்தை கட்டி இருப்பதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்

கண்ணீர் விட்டனர்
புது வீட்டில் பால் பொங்கி வரும்போது, அதன் உணர்ச்சி பெருக்கை தாங்க முடியாமல், சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர்கள் பட்ட முயற்சியையும், இவ்வளவு காலம் காத்திருந்த பொறுமையையும் நினைத்து ரசிகர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் அவர்களைப் பாராட்டி வருகிறார்கள்.
உருக்கமான பதிவு
இந்தத் தம்பதியினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது புதுவீட்டுக் கனவு குறித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்:
"எங்கள் இதயங்கள் இப்போது முழுமையாக நிரம்பியிருக்கிறது, சில உணர்ச்சிகளுக்கு வார்த்தைகள் போதாது என்பார்களே, அதுபோல தான் இதுவும். இந்தத் தருணம் எளிதாக வரவில்லை, ஆனால் மிக அழகாக வந்திருக்கிறது. வாழ்க்கை எங்களை எத்தனையோ முறை சோதித்தது, ஆனால் நாங்கள் இருவரும் ஒரே நம்பிக்கையை இறுக பிடித்துக்கொண்டோம். அப்படி இருக்கும்போது கண்ட கனவுதான் எங்களுக்கு என்று ஒரு வீடு."
இரவும் பகலும் உழைப்பு
"அதற்காக உழைத்தோம், அதற்காக இரவு பகலாக வேண்டி கொண்டே இருந்தோம். இன்று நாங்கள் அந்த கனவின் நடுவே நின்று கொண்டிருக்கிறோம். இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு மூலையும் எங்கள் பயணத்தின் கதையைச் சொல்கிறது" என்று பதிவிட்டுள்ளனர்.
தங்களது வெற்றிக்குக் காரணம் அவர்களின் அன்புதான் என்பதைச் சுட்டிக்காட்டி, "சரியான மனிதர் பக்கத்தில் இருந்தால் சாத்திய மற்றவையும் மெல்ல சாத்தியமாகும் - நாங்கள் அதை ஒன்றாக சாதித்து விட்டோம்" என்று முடித்துள்ளனர்.

ரசிகர்கள் வாழ்த்து மழை
சித்து - ஸ்ரேயா தம்பதியினரின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரிய அலையை உருவாக்கியுள்ளது. "ரத்தக் கண்ணீருக்கு சமமான இந்த சாதனையை உங்களின் காதல் மற்றும் முயற்சியால் நிகழ்த்தி காட்டிவிட்டீர்கள் - எப்போதும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்" என்றும், "இன்னும் இதுபோன்ற பல கனவுகளைச் சாதிக்க வேண்டும்" என்றும் பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
முயற்சிக்கு வெற்றி
அவர்களுடைய கடினமான உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான் இந்த வீடு என்று கூறும் ரசிகர்கள், அவர்கள் தொடர்ந்து இதுபோலச் சாதனைப் படைத்துத் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் விருப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்த தம்பதி இருவரும் முதலில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் தான் நடித்து வந்தனர். அந்த சீரியலில் நடிக்கும் போது ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மாறிவிட்டனர். அதற்குப் பிறகு இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலில் ஸ்ரேயா நடித்து வந்தார். அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் சித்து நடித்து வந்தார். இப்போது சித்து திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications