திருவிழான்னாலும் சரி! வீட்டில் உடுத்தவும் 4, 5 டிரஸ்தான் இருக்கு! சரிகமபவில் இலங்கை பெண் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தமிழ் பெண் சினேகா என்பவர் பாட வந்துள்ளார். அவரின் வசதி குறித்து சர்ச்சை வெளியாகியுள்ள நிலையில் தனது நிலை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சரிகமப சீசன் 5 சீனியர்ஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் சினேகா கலந்து கொண்டு பாட வந்துள்ளார். இந்த போட்டியில் 21 பேர் பாட வந்துள்ளனர். இதில் தேவயானியின் மகள் இனியாவும் பங்கேற்றுள்ளார்.

television saregamapa season 5 5

அது போல் இலங்கை பெண் சினேகா முதல் ரவுண்டில் செலக்ட் ஆகவில்லை. அவரின் நிலையை அறிந்த நடுவர்கள், அவரை இன்னொரு பாடல் பாட வைத்து தேர்வு செய்தனர். அவர் பாடியது "சண்டக்கோழி கோழி" பாடல்

அது முதல் அவர் இந்த நிகழ்ச்சியில் பாடி வருகிறார். சினேகா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவரது பின்புலம் குறித்து ஒரு வீடியோ, நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

சினேகா

அதில் இலங்கையில் சினேகாவின் அப்பா தேயிலை தோட்டத்தில் பணிபுரிகிறார். தாய்க்கு சிறுநீரக ஆபரேஷன் செய்ததால் அவரால் எந்த வேலையும் செய்ய இயலாது. இதனால் சினேகாவின் தந்தைதான் வீட்டை பார்த்துக் கொண்டு சம்பாதித்யமும் செய்கிறார்.

காசு கொடுத்து அனுப்பிய ஊர்க்காரர்கள்

சினேகாவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். இவருடைய குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. சினேகாவின் தாய் , தந்தை, தம்பியுடன் இந்தியாவுக்கு வந்தால் அதிக செலவாகும். அந்த அளவுக்கு வசதி இல்லை. சினேகாவையே ஊர்காரர்கள் எல்லாம் காசு கொடுத்து அனுப்பியுள்ளனர்.

எந்த பாடல்

சினேகா பாடிய எள்ளுவய பூக்கலையே பாடலை ஊரே ஒன்று கூடி பொது டிவியில் பார்த்து ரசித்தனர். இதை பார்த்த சினேகா அதிர்ச்சி அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த நிகழ்ச்சியை திருவிழாவை விட மக்கள் கொண்டாடினார்கள்.

சினேகா வெற்றி

சினேகா வெற்றியுடன் இலங்கைக்கு வர வேண்டும் என ஊர்மக்கள் ஒன்றுகூடி வாழ்த்தினார்கள். இந்த நிலையில் சினேகா கூறுகையில், பள்ளிகளில் பாட்டு போட்டியிலும் சரி, இலங்கையில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் சரி அப்பா, அம்மா இல்லாமல் நான் போனதே இல்லை.

புத்தாடை கேட்கவே மாட்டோம்

முதல்முறையாக நான் தனியாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஆடம்பரமாக செலவழிக்கணும்னு நானோ எந்த தம்பியோ எதிர்பார்த்ததில்லை. எந்த பண்டிகை வந்தாலும் நானோ என் தம்பியோ புத்தாடை வேண்டும் என கேட்க மாட்டோம்.

4 டிரஸ்தான் இருக்கிறது

எவ்வயாவது ஒரு டிரஸ் வாங்கித் தருவார்கள். அதை வைத்துக் கொண்டு சமாளிப்போம். அப்படி சொல்ல போனால் என்னிடம் அதிகபட்சமாக 4 அல்லது 5 டிரஸ்கள்தான் இருக்கும். திருவிழாவுக்கு போட்டுக் கொள்ளவும் சரி, வீட்டுக்குள் போட்டுக் கொள்ளவும் அந்த 4, 5 டிரஸ்தான்.

ஸ்டேஜில் பார்க்க ஆசை

நானும் என் தம்பியும் வீட்டில் உள்ளவர்களின் நிலையை புரிந்து நடந்துக்குவோம். அப்பா, அம்மா, தம்பி ஆகிய மூவரையுமே இந்த ஸ்டேஜில் நான் பார்க்கணும்னு ஆசைப்படுறேன் என கண்ணீர் விட்டார்.

ஸ்வேதா மோகனுக்கு நல்ல மனசு

அப்போது நடுவர் ஸ்வேதா மோகன், "சினேகா, உன்னுடன் ஸ்ரீலங்காவிலிருந்து யாரும் வரவில்லையா" என கேட்டார். அதற்கு அவர் இல்லை என்றார். "நம்ம ஒரு நாள் ஷாப்பிங் போய் உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் வாங்கலாம்" என ஸ்வேதா தெரிவித்தார்.

ஏழ்மை நிலை

இவரது ஏழ்மை நிலை குறித்து வீடியோ வெளியான நிலையில் இலங்கையில் ஒரு ஷோவில் சினேகா அத்தனை நல்ல ஆடைகளை உடுத்தி கொண்டு பாடியது குறித்த வீடியோ வைரலானது. இத்தனை வசதியான பெண்ணை, வசதியற்றவர் என காட்டி உங்கள் ஷோவை ப்ரமோட் செய்கிறீர்களா என்ற விமர்சனம் எழுந்தது.

சினேகா விளக்கம்

இதற்கு சினேகாவையே விளக்கம் அளிக்க வேண்டும் என நடுவர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து சினேகா கூறுகையில், நான் ஏற்கெனவே சென்ற ரியாலிட்டி ஷோவில் அவர்கள் கொடுத்த ஆடையைதான் உடுத்தணும், அவர்கள் கொடுக்கும் உணவைதான் சாப்பிடணும். அவர்கள்தான் மேக்கப் எல்லாமே போட்டு விடுவார்கள். எங்கள் காசில் நாங்கள் எதுவும் வாங்கவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் எல்லாம், அதையெல்லாம் நாங்களே வாங்கியதாகவும் நாங்கள் நிறைய காசு வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். என்னை விமர்சனம் செய்யுறவங்களுக்கு நான் கொடுக்கும் பதில், ஸ்டேஜில் நல்லா பாடுறதும், நடுவர்கள் கிட்ட நல்ல கமென்ட் வாங்குவதும்தான் என தெரிவித்தார்.

உண்மையிலேயே சினேகா ஏழ்மை நிலையில் உள்ளவர்தான் என்பது அவரது பேச்சிலும் வீவடியோவிலும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+