40 வயசாய்ருச்சா "துளசி"க்கு.. நம்பவே முடியலையே.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருந்த கதாநாயகிகள் இப்போ இணையதளங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சீரியல்களில் பிரபலமான சுருதி ராஜ் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறார். அது மட்டுமல்ல அவரது பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
சினிமாக்களில் அறிமுகமாகி சின்னத்திரையில் குடும்பத்தலைவியாக கதாநாயகியாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சுருதி ராஜ் 90 கிட்ஸ் களின் ஃபேவரட் சீரியல் ஆன கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கி பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர். அழகு சீரியல் நடித்திருப்பார்.
இந்த சீரியல் திடீரென்று நிறுத்தியதால் இவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது ஏமாற்றத்தை அடக்க முடியாமல் ஜீரணித்துக் கொண்டார்.

மனசுக்கு கஷ்டம்
அதற்கு முன்னாடியே சூட்டிங் ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொன்னதும் தன்னால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாது ஏனென்றால் எந்த கோரானா அச்சுறுத்தல் காரணமாக வெளியே வருவதற்கு பயமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால் அடுத்ததாக உடனே அந்த சீரியல் முடித்ததும் இவருக்கு கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது.

ஜாலியாக பொழுது போகுது
தற்போது சூட்டிங் எதுவும் இல்லாததால் இணையதளத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய்யின் பிரண்டோட காதலியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவு பெரிய இடத்திற்கு செல்லவில்லை. அதனால்தான் சீரியலில் காலடி எடுத்து வைத்து இருந்தார். ஆனால் சீரியல்களில் டாப்ல வந்திருக்கிறார்.

இன்னும் மணம் வீசும் துளசி
சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் ரொம்பவும் பிடித்த அமைதியான குடும்பத் தலைவியான கதாநாயகியாகவும் இருந்திருக்கார். கோலங்கள் சீரியல் ஒளிபரப்பான அந்த டைம்ல அந்த சீரியல் முடிந்ததும் அதே நேரத்தில் இந்த சீரியலை ஒளிபரப்பாகும் போது சீரியல் குழு முதலில் தயங்கி தான் இருக்கிறார்கள் .மக்களிடம் இந்த சீரியல் பிரபலம் ஆகுமா என்று தான் இவர்களது கருத்து இருந்திருக்கிறது.

நடிப்பில் அசத்தல்
ஆனால் முதல் எபிசோடில் தொடங்கி கடைசி வரை மக்களிடம் இந்த சீரியலுக்கு நல்ல ஒரு எதிர்பார்ப்பும் ஆதரவும் இருந்திருக்கிறது. இன்று வரையிலும் இவரை துளசி என்று நிறைய ரசிகர்கள் அழைக்கிறார்களாம். அழகில் சுதா வாக நடித்திருந்தாலும் இன்னும் சிலர் துளசி என்று கூப்பிடுவது இவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறதாம். இவர் நடிப்பது எல்லாமே நேர்மையான கதாநாயகியாக தான் நடித்திருக்கிறாராம்.

நம்ம வீட்டுப் பொண்ணாக
இதனால் ரசிகர்கள் இவரை பாசமாக தங்கள் வீட்டு பொண்ணாக நினைக்கிறார்களாம். இதை நினைக்கும்போது இவருக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது சூட்டிங் இல்லாததால் இணையதளத்தில் வெயிட் லாஸ் டிப்ஸ் களையும் அழகுக் குறிப்புகளையும் கூறிவருகிறார் . இவரை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இணையதளத்தில் பாலோவர்ஸ் களாக மாறி வருகிறார்கள் .தற்போது இவருடைய பேன்ஸ்களும் இவரது பெயரில் பல ஐடிகளை ஓபன் பண்ணி வருகிறார்கள்.

இன்னும் போகாத அழகு
இவருக்கு 40 வயது ஆனாலும் என்றும் இளமையாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பல ரசிகர்கள் இவரிடம் கேட்டு வருகிறார்கள் .அதற்கு அவர் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் கவலைப்படாமல் சந்தோசமாக இருந்தாலே போதும் மனசு சந்தோசமாக இருந்தால் அது முகத்தில் தெரியும் முகம் எப்போதும் அழகாக தான் இருக்கும் என்று டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications