அட பாவமே..! பிரியங்காவுக்கு என்ன ஆச்சு..திடீரென்று மருத்துவமனையில்..கடைசியில் இப்படி ஆகிவிட்டதே..!
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் பிரியங்கா காணாமல் போய்விட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிரியங்கா மருத்துவமனையில் இருந்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் கடைசியில் தான் தெரிகிறது இது பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் சீசன் 4க்கான ப்ரோமோ என்பது. இந்த நிலையில் பிரியங்காவை கடத்தியது யார் என்பது இந்த வாரம் தெரிய வரும்.

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா பக்கமும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், இவர் செய்யும் செயல்களை சில நேரங்களில் நெட்டிசன்கள் கலாய்க்க தான் செய்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் தலையில் ஏத்திக் கொள்ளாமல், தன்னை பற்றி என்னதான் கூட இருப்பவர்களே கலாய்த்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து போய்க் கொண்டிருப்பது தான் பிரியங்காவின் சிறப்பாகவே அவருடைய ரசிகர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.
அதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவால் அத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் பிரியங்கா போகும்போது அவருடைய ரசிகர்களை அக்கா, உங்க கால்ல வேணா விழுறோம். நீங்க இந்த நிகழ்ச்சிக்கு போய் உங்க பேர கெடுத்துக்காதுங்க. ஏற்கனவே அர்ச்சனா அக்காவுக்கு நடந்தது ஞாபகம் இல்லையா? என்று பலர் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அசட்டை செய்துதான் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரைக்கும் களைகட்டி இருக்கிறார்.
ஆனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது பிரியங்கா என்னதான் ஜாலியா இருந்தாலும், அடிக்கடி தாமரையோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், மீண்டும் விஜய் டிவியில் நமக்கு இடம் கிடைக்குமா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாகவும் பயமாகவும் தான் இருந்தது. அதனால்தான் அடிக்கடி உள்ளே வரும் சிறப்பு விருந்தினர்கள் இடம் எல்லாம் வெளிய நல்லா போய்கிட்டு இருக்கா? நான் மறுபடியும் ஷோ பண்ணலாமா? அதுக்கு வாய்ப்பு இருக்கா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி பிரியங்கா பயந்த மாதிரி இல்லாமல் அவருக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் பிரியங்காவிற்காகவே உருவாக்கப்பட்டது போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளும் இருந்தது. அந்த வகையில் இப்போது ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியும் உண்டு. இப்போது அது நாலாவது சீசன் அடி எடுத்து வைத்திருக்கிறது.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியானது. தான் இப்போ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது ப்ரோமோவா அல்லது நிஜமா என்று தெரியாமல் ரசிகர்கள் அதிகமானோர் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். காரணம் மருத்துவமனையில் இருந்தபடியே பிரியங்கா அதில் தட்டு நிறைய சாப்பாட்டை அள்ளி அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் யாரோ அப்போது அந்த அறைக்கு சென்று பிரியங்காவை அப்படியே கடத்தி சென்று ஒரு நாற்காலியில் கட்டி வைத்திருப்பது போன்று அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதுவும் இதுவரைக்கும் இல்லாத வகையில் இது செய்தி சேனல்களில் வந்தது போல வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் இது யாரை வரவேற்பதற்காக இந்த முயற்சி என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஒருவேளை இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகர்களுக்கான வரவேற்பாக கூட இருக்கலாம்.
ஏனென்றால் கடந்த வாரத்தில் அபியை தீவிரவாதிகள் இப்படித்தான் கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். வெற்றி காப்பாற்றி இருக்கிறார். அதனால் அதே கான்செப்ட் வைத்து பிரியங்கா கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்கள் தானே இருக்கு பொருத்திருந்து பார்ப்போம்.
-
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம்












Click it and Unblock the Notifications