பிரம்மாண்ட "வளையத்தில்" நடிகை.. முதன்முதலில் அதிக சம்பளம்.. முதலமைச்சர் சான்ஸை மறுத்தாரா கேஆர் விஜயா
சென்னை: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்தபோது, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த விவாதம், அவருடன் நடித்த நடிகைகளிடையே ஏற்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்.
Globe 360 என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், பழம்பெரும் நடிகை கேஆர் விஜயாவின் திறமைகளை பற்றியும், அவர் எப்படி கொடிகட்டி திரையுலகில் வாழ்ந்தார் என்பது குறித்தும் கூறியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

சாதனை புரிந்த நடிகை: "அந்த காலத்திலேயே எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையான சம்பளம் பெற்றவர் கேஆர் விஜயா.. 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி, அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நடிகையாவார். இதெல்லாம் இப்போது 50 கோடி, 100 கோடி ரூபாய்க்கு சமம். அதேபோல, 500 படங்களில் நடித்து சாதனை புரிந்தவர் கேஆர் விஜயா..
ஆனால், இவரது கால்ஷீட் கிடைக்கும்வரை தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள்.. உச்சபட்ச நடிகர்களுக்குகூட இப்படி யாரும் காத்திருந்ததில்லை.,. ஏவிஎம், ஜெமினி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களே கேஆர் விஜயா கால்ஷீட்டுக்கு காத்திருந்தனர்.
வெற்றிப்படங்கள்: இதற்கு காரணம், கேஆர் விஜயா நடித்தால், அந்த படம் வெற்றிபெற்றுவிடும்.. அதனால்தான் புதுமுக நடிகைகளை வைத்து ரிஸ்க் எடுக்க யாரும் விரும்பவில்லை.. மற்ற நடிகைகளின் பக்கமும் தயாரிப்பாளர்களுக்கு கவனம் செல்லவில்லை. கேஆர் விஜயா கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நினைத்து, அவருக்குரிய முழு பணத்தையும் தந்து, காத்திருப்பார்கள்.
எம்ஜிஆர் மரணமடைந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் அவருடன் நடித்த கதாநாயகிகள் அனைவரும் ஒன்றுகூடினார்கள்.. கேஆர் விஜயா, மஞ்சுளா, லதா, எல்லாரும் ஜானகி அம்மாவுடன் ஒன்று திரண்டார்கள்..
யார் அடுத்த முதல்வர்: அப்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற போட்டி வருகிறது.. ஜெயலலிதா ஜானகியை எதிர்த்ததால், எம்ஜிஆருடன் அதிக படம் நடித்தவர் என்ற முறையில் அடுத்த ஆப்ஷனாக கேஆர் விஜயாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாமா? என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் கேஆர் விஜயா.
முதலமைச்சராக பதவியேற்றால், அது தனக்கு பலவிதமான விமர்சனங்களை தந்துவிடும்.. தன்னை பற்றி கிசுகிசுக்கள் எழுதுவார்கள் என்றெல்லாம் சொல்லி, முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கேஆர் விஜயா மறுத்து விட்டார். அந்தம்மா ஒரு தனிமை விரும்பி. தனக்கு விருப்பமிருந்தால் அவரே சக நடிகர், நடிகைகளிடம் பேசுவார். இல்லாவிட்டால் பேச மாட்டார்.
கேஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் பலகோடி சொத்துக்களுக்கு உரிமையாளர்.. பல பிரைவேட் கம்பெனிகள், சுதர்சன் சிட்பன்ட்ஸ், ஸ்பென்சர் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்..
டெபாசிட்: அந்த காலத்திலேயே பல்லாயிரம் கோடி வர்த்தகம் செய்தவர். இந்த நிறுவனங்களில் உரிமையாளர்களில் ஒருவர் கேஆர் விஜயா ஆவார். இந்த நிறுவனங்களின் உரிமையாளராக இருப்பதால், கேஆர் விஜயாவை மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள்.. இதைத்தான் வேலாயுதம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். பல்லாயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட மக்களின் பணம் சுதர்சன் சிட்பண்ட்டால் ஏமாற்றப்பட்டது
ஆனால், வேலாயுதம் நாயர் மோசடி தொழிலபதிராக இருந்தாலும், பிரம்மாண்டமான தொழிலதிபராக இருந்தாலும், கேஆர் விஜயாவை ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்து, கையோடு ஷூட்டிங் முடிந்து அழைத்து சென்றுவிடுவார். உள்ளூர் ஷூட்டிங் என்றால் பென்ஸ் காரில் கே ஆர் விஜயாவை அழைத்து வருவார்.. ஊட்டி போன்ற வெளியூர் ஷூட்டிங் என்றால் சொந்த விமானத்தில், ஹெலிகாப்டரில் வருவார்.
கால்ஷீட்: இதனால் யாருமே அந்தம்மாவிடம் நெருங்க முடியாது.. வேலாயுதமே மிகப்பெரிய பணக்காரர் என்பதாலும், கேஆர் விஜயாவின் கால்ஷீட் மிகவும் முக்கியம் என்பதாலும், பாலியல் சிக்கல் கேஆர் விஜயாவை சுற்றி எழ வாய்ப்பேயில்லை.. இந்த பிரம்மாண்டம்தான் யாருமே கேஆர் விஜயா அருகில் செல்ல முடியாத வளையத்தை உருவாக்க வைத்திருந்தது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications