நடிகை பிரவீனா தந்த ஐடியா.. அதைவிடுங்க, ஊர்வசி தலையில் குட்டு வைத்த டைரக்டர் பாக்யராஜ்: பூரித்த விஐபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகச்சிறந்த துணிச்சல்காரர் டைரக்டர் பாக்யராஜ் என்றும், பிறமொழி நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதில் அபார திறமை வாய்ந்தவர் என்றும் மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

King 24X7 யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்திருந்த பேட்டியில், "பாக்யராஜ் சிறந்த இசையமைப்பாளர்.. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் இவங்கெல்லாம் நாடகங்களிலிருந்து வந்தவர்கள். மணிவண்ணன் உடுமலையை சேர்ந்தவர்.. சிங்காநல்லூரை சேர்ந்தவர் பாக்யராஜ்.

k bhagyaraj urvashi


பாக்யராஜ்:
கோவை ராஜா என்ற பெயரில் கோயம்புத்தூரில் நாடகங்களை நடத்தி வந்தார்.. அதேபோல, ஆர்.சுந்தர்ராஜனும் நாடகம் நடத்தி வந்தார்.. 2 பேருமே தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டவர்கள்.. ஆர்.சுந்தர்ராஜன்தான், பாக்யராஜிடம் பணம் கொடுத்து, முதல்முதலில் சென்னைக்கு கிளம்பி போக சொன்னார். சென்னைக்கு போயி முதல்ல நீ சக்சஸ் செய் என்று அனுப்பி வைத்தார் ஆர்.சுந்தர்ராஜன்.

முதன்முதலில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாக்யராஜ் வந்து சேர்கிறார்.. பாக்யராஜின் கையெழுத்து ரொம்ப அழகாக இருக்கும். எப்போதுமே ஒரு உதவி இயக்குனருக்கு முதல் குவாலிட்டியே இந்த கையெழுத்துதான். இணை இயக்குனர்கள் என்றாலே சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், ஒரு டைரக்டரின் மன ஓட்டம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்தவகையில், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பிரபலமானார் பாக்யராஜ்.

நடிகைகள் மொழி: அப்போதெல்லாம் வெளிமாநில நடிகைகள் அதிகமாக தமிழில் நடித்து வந்தார்கள்.. அவர்களுக்கு தமிழில் வசனம் கற்றுத்தர ஆட்கள் தேவைப்பட்டது.. அப்படி வசனம் சொல்லி தருவதில் பாக்யராஜ் சிறந்து விளங்கினார்.

அந்தவகையில்தான் தெலுங்கு மொழி பேசும் பிரவீனாவுக்கு தமிழ் வசனம் கற்று தந்தார் பாக்யராஜ். அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.. பிரவீனா இல்லையென்றால், பாக்யராஜ் இல்லை. அவரை டைரக்டர் ஆக வேண்டும் என்று சொல்லி உற்சாகப்படுத்தியதே பிரவீனாதான். 20 லட்சம், 30 லட்சம் இருந்தால்தான் ஒரு படம் அப்போது எடுக்க முடியும். அதனால், பிரவீனாவே, ஒரு தயாரிப்பாளரையும் அறிமுகப்படுத்துகிறார்.

சுதாகர்: ஆனால், பாக்யராஜ், தன்னை ஹீரோவாக்கி கொள்ளாமல், சுதாகரை ஹீரோவாக்குகிறார். அந்த படத்தில் 2வது ஹீரோவாகிறார் பாக்யராஜ்.. சுவர் இல்லாத சித்திரம் என்ற அந்த படத்தில், ஹீரோயினை புது முகமாக போட்டு, ரிஸ்க் எடுக்கிறார்.. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள் என முரண்பட்ட தலைப்புகளையே தன்னுடைய படங்களுக்கு வைத்து சக்சஸ் செய்தார்.

முதன்முதலில் தன்னுடைய முழு திரைக்கதையையும் "குமுதம்" பத்திரிகையில் வெளியிட்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ்தான். மௌன கீதம் படம் ரிலீசும், இந்த கதையும் முடிவும், குமுதம் பத்திரிகையில் ஒன்றாக வெளியானது.. மௌன கீதங்கள், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழியிலும் சூப்பர் ஹிட் ..

ஹீரோயின்கள்: அதேபோல, தன்னுடைய படத்தில் நடிக்க வைத்த கதாநாயகியை இன்னொரு படத்தில் நடிக்க வைக்க மாட்டார். இதில், ராதிகா போல ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருப்பார்கள்.. ஆனால், பெரும்பாலும் புதுபுது ஹீரோயின்களாகவே அறிமுகப்படுத்துவார்.. ஹீரோயின்களை நடிப்பில் டிரெயினிங் செய்வதில் பாக்யராஜ் கில்லாடி..

முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசிக்கு தமிழ் பேச வராது.. அவரது மண்டையில் குட்டி குட்டி வசனம் சொல்லி தந்தாரு.. ஆனால், கோபப்பட மாட்டார். 10 டேக், 15 டேக் என்று சர்வ சாதாரணமாக எடுப்பார்.

பல சாதனைகளை, முறியடித்தவர் பாக்யராஜ்.. அரங்கேற்றம் படத்தில் பிரமீளா விபச்சாரி கேரக்டரில் நடித்தார். அதற்கு பிறகு பெரும்பாலான கேரக்டர்கள் அதுபோலவே அவருக்கு அமைந்தன.

பாராட்டு: அதேபோல, சரிதாவை விபச்சாரியாக பாலச்சந்தர் நடிக்க வைத்தபோது, அவரை ஹீரோயினாக நடிக்க வைத்து, இமேஜ் உயர்த்தினார்.. இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், என எல்லா இசையமைப்பாளர்களையும் தன்னுடைய படங்களில் ஈடுபடவைத்தார்" என்றெல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், "எனக்கு முந்தானை முடிச்சு பட வாய்ப்பு நடிக்க காரணமே பிரவீனாதான்.. நான் பேச்சுலராக, லாட்ஜில் தங்கியிருந்தபோது, பிரவீனா எனக்கு போன் செய்து சொன்னபிறகுதான், ஏவிஎம் செல்ல நேர்ந்தது. அதன்பிறகுதான், முருங்கைக்காய் வைக்கிற சீனுக்கு எனக்கு தரப்பட்டது. இந்த முருங்கைக்காய் வைக்கும் சீனுக்கு பாக்யராஜின் நண்பர்கள், தேனாம்பேட்டை நாடகர்கள் எல்லாம் போட்டி போட்டார்கள்.. ஆனால் எனக்கு அந்த சீனை ஒதுக்கியதற்கு காரணமே பாக்யராஜ் மற்றும் பிரவீனாதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+