சுஜாதா விஜயகுமார்.. ஆர்த்தி சொல்லும் 3வது நபர் இவர்தான்.. உடைந்துபோன அன்பு மீண்டும் ஒட்டுமா: பிரபலம்
சென்னை: சோகமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கெனிஷா ஆறுதலாக இருந்துள்ளார்.. பொதுவாகவே ஆண்களுக்கு விருந்தாக இருக்கும் பெண்களைவிட மருந்தாக இருக்கும் பெண்களையே பிடிக்கும்.. இப்போது வாழ்க்கைத்துணை கெனிஷாதான் என்று ஜெயம் ரவியும் அறிவித்துவிட்டார். இதற்கெல்லாம் ஆர்த்தி, சுஜாதா விஜயகுமார் தான் காரணம்.. அன்பு குறைந்து விரிசல்கள் அதிகமாகிவிட்டதால் குடும்பத்தினர் அனைவருமே அறிக்கை போர்களை நிறுத்தினால் நல்லது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "3வது நபரால்தான் எங்களுக்குள் பிரச்சனை என்று ஆர்த்தி சரியாகவே சொல்லியிருக்கிறார். அந்த 3வது நபர் சுஜாதா விஜயகுமார்தான்.. தம்பதிக்குள் நுழைந்து எல்லா விஷயங்களிலும் தலையிட்டதால்தான், ஜெயம் ரவி கோர்ட் வரை சென்றார்..

17 வருட வாழ்க்கை
ஜெயம் ரவி ஒன்றும் திருமணமாகி ஒரு வருடத்தில் குடும்பத்தை விட்டு போகவில்லை.. 17 வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்துள்ளார்.. தாம்பத்தியத்துக்கு சாட்சியாக 2 ஆண் குழந்தைகளும் இருக்கின்றன.. இதுவே தவறான நபராக இருந்தால், திருமணமானதுமே குடும்பத்தைவிட்டு விலகியிருக்கலாம்..
இத்தனைக்கும் சினிமா துறையில் பல பெண்களுடன் பழகும் வாய்ப்பும், சூழலும் ஜெயம் ரவிக்கு அதிகமாக இருந்த போதிலும், எந்த பெண்ணுமே ஜெயம் ரவி கண்ணில் படவில்லையா? கெனிஷா மட்டும்தான் பெண்ணாக தெரிந்தாரா?
காஸ்ட்லி கார்
ஜெயம் ரவியை பொறுத்தவரை நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல குடும்ப தலைவனாக வாழ ஆசைப்பட்டவர்.. அப்படித்தான் 17 வருடமும் வாழ்ந்துள்ளார்.. ஆனால், பல நெருக்கடிகள் அவருக்கு வந்துவிட்டது.. எந்தவிதமான பொருளாதார சுதந்திரமும் இல்லை. 5 கோடி ரூபாய் காருடன் கிளம்பி சென்றுவிட்டதாக மனைவி தரப்பில் சொல்லப்படுகிறது. 1 படத்துக்கு 7 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஜெயம் ரவி, காஸ்ட்லி கார் எடுத்து சென்றதில் தவறில்லை.. ஒரு தவறான நபர் 17 வருடங்கள் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டார்..
ஷூட்டிங்கில் இருக்கும்போது ஜெயம் ரவியால் போன் எடுக்க முடியாவிட்டால், தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்தது யார்? போனை எடுக்க முடியாத பட்சத்தில், வீடியோ காலில் வந்து இருக்குமிடத்தை உறுதிபடுத்த சொன்னது யார்? மேக்கப்மேன், டச்சப் பாய், காஸ்ட்யூமர், அசிஸ்டெண்ட் டைரக்டர் உட்பட செட்டில் உள்ளவர்களை விசாரித்து பார்த்தால், உண்மை தெரியும். தொழில் செய்யும் இடத்தில், தலைநிமிர்ந்து வாழும் ஒருநபரால் இவைகளை எல்லாம் பொறுத்து கொள்ளவே முடியாது.
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்
சுஜாதா விஜயகுமார் ஒரு தயாரிப்பாளராக எப்படி நடந்து கொள்வார் என்பதை சினிமா துறையில் உள்ள தொழிலாளர்களை விசாரித்தால் தெரியும். தயாரிப்பாளர்கள் கெடுபிடியாக இருக்கலாம், கண்டிப்புடன் இருக்கலாம்.. ஆனால், ஆணவத்தை, அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலாளர்களை வேலை வாங்க முடியாது.. தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். ஜெயம் ரவி விஷயத்திலும் குடும்ப விஷயத்திலும், தொழில் விஷயத்திலும் தலையிட்டதுதான் நெருக்கடியாகிவிட்டது.
தன்னுடைய மனநிம்மதிக்காக சென்றபோது கெனிஷாவை சந்தித்துள்ளார்.. வாழ்க்கையில் அடிபட்டு உதைபட்டு துன்பத்தில் ரணங்களுடன் இருக்கும் நபருக்கு, யாராவது ஆறுதல் சொன்னால், அந்த ஆறுதலை புண்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.. ஆண், பெண் யாராக இருந்தாலும் இதுவே மனிதாபிமானம்.
வாழ்க்கைத்துணை கெனிஷா
அந்தவகையில், சோகமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கெனிஷா ஆறுதலாக இருந்துள்ளார்.. பொதுவாகவே ஆண்களுக்கு விருந்தாக இருக்கும் பெண்களைவிட மருந்தாக இருக்கும் பெண்களையே பிடிக்கும்.. இப்போது வாழ்க்கைத்துணை கெனிஷாதான் என்று ஜெயம் ரவியும் அறிவித்துவிட்டார். இதற்கெல்லாம் ஆர்த்தி, சுஜாதா விஜயகுமார் தான் காரணம்.
ஆர்த்தி மிகவும் நல்ல பெண் என்றாலும், தாயின் பேச்சை கேட்டு நடந்ததுதான், தம்பதி விரிசலுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.. பெரும்பாலும், மகளின் நன்மைக்காக, வீடுகளில் அம்மாக்கள் சில விஷயங்களை சொல்லித்தருவது நல்லதுதான். ஆனால், இது சற்று ஓவராகிவிடும்போதுதான், பிரச்சனை வெடிக்கிறது.
ஜெயம் ரவி - ஆர்த்தி - சுஜாதா விஜயகுமார் என மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு, கல்லடி, சொல்லடிகளால் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. அன்பு, பாசம் உடைந்து விரிசல் பெரிதாகிவிட்டது. இருவருமே குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.. முதலில் இவர்கள் எல்லாருமே அறிக்கை போர்களை நிறுத்தினால் நல்லது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications