சுகன்யா, விஜயகாந்த் சீன் ஞாபகம் இல்லயா? டீசன்ட் அரசியல் செய்யும் விஜய்.. அபாண்டம் அண்ணாமலை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பாஜகவை திமுகதான் ஊட்டி ஊட்டி வளர்க்குது.. தமிழ்நாட்டில் பாஜக என்ற பூச்சாண்டி காட்டியே, திமுக பயமுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், தனக்கு அரசியல் எதிரி திமுக, கருத்தியல் எதிரி பாஜக என்று விஜய் தெளிவாக சொல்லிவிட்டார். அப்படியிருந்தும், திமுகவின் B டீம் விஜய் என்று அண்ணாமலை சொல்வதெல்லாம், அரசியல் அடிச்சுவடிகூட தெரியவில்லை என்பதைதான் காட்டுகிறது" என மூத்த பத்திரிகையாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மதிவாணன், "விஜய்யை கண்காணிக்கிறார்கள்.. விஜய்யின் வீட்டை, விஜய்யின் கட்சி அலுவலகத்தை, அவர் எங்கே போகிறார்? அவர் யாரை சந்திக்கிறார்? அவர் வீட்டுக்கு யார் வர்றாங்க? என்பதையெல்லாம் உளவுத்துறை கண்காணிக்கிறது.

Television Vijay Vijayakanth

விஜய் என்ன கிரிமினலா? பயங்கரவாதியா?

விஜய் ஒன்றும் கிரிமினல் இல்லை.. அவர் ஒரு பாப்புலர் நடிகர் அவ்வளவுதான்.. ஆனால், அரசியல் எதிரிகளை, எதிர்க்கட்சியாக உள்ள தலைவர்களை எல்லாம் உளவுத்துறை கண்காணிக்கிறது.. இதற்காக விஜய்க்கு நெருக்கடி தருகிறார்கள் என்று நான் சொல்லவில்லை..
ஆனால், விஜய்யின் நடவடிக்கைகளில் அதிக அக்கறை, அதீத ஆர்வம் காட்டுவது, தேவையில்லாத வேலை..

விஜய் ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி என்றால், உளவுத்துறை அவரை கண்காணிக்கலாம்.. ஒரு சாதாரண அரசியல் எதிரிதானே? அரசியல்களத்தில்தானே இதை சந்திக்கணும்? அதற்காக அரசு எந்திரத்தை, உளவுத்துறையை பயன்படுத்தி கண்காணிப்பது தவறு. இது ஜனநாயகம் கிடையாது.


பார்ட் டைம் அரசியல்வாதிகள்

டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடந்து, எச்.ராஜா கைதாகி போலீஸ் ஜீப்பில் ஏற சொன்னால் "நாய் வண்டியில் ஏற மாட்டேன்"னு சொன்னாரு. அப்படின்னா AC பஸ் கேட்கிறாரா எச்.ராஜா? "5 மணி நேரமாகிவிட்டது, 3 ஃபிளைட் மிஸ் பண்ணிட்டேன்" என்கிறார் அண்ணாமலை.. இவர்களெல்லாம் பார்ட் டைம் அரசியல்வாதிகளா? இவர்கள் எப்படி மற்றவர்களை பேசலாம்?

டாஸ்மாக் சம்பந்தமாக விஜய் பேசும்போது, "தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கும் எனில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்? அதிகாரத்தை வைத்துள்ள நீங்க ஏன் நாடகம் போடுறீங்க" என்பது போல விஜய் கேட்டிருந்தார்.

நடிகைகளின் இடுப்பை கிள்ளி

உடனே இதற்கு அண்ணாமலை உணர்ச்சிவசப்பட்டு, தன்னிலை மறந்து, "விஜய் மாதிரி நடிகைகளின் இடுப்பை கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்கேனா?" என்று கேட்டுவிட்டார்.. தன்னுடைய மனதில் யார் அதிகமாக அரித்து கொண்டிருக்கிறார்கள் என்பது, அன்றைய அண்ணாமலை பேச்சில் அம்பலமாகிவிட்டது.

நடிப்பு சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு.. தவெகவின் வளர்ச்சி, தவெகவுக்கு நாளும் பொழுதும் பெருகும் ஆதரவு, இதெல்லாம் சேர்ந்துதான் உச்சக்கட்ட வெறுப்பில் அண்ணாமலை பேசுகிறார்..

2026-ல் பிரதான எதிர்க்கட்சியாக தாங்கள் வரவேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக இருந்து வருகிறது.. ஆனால், திடீரென யாருமே எதிர்பார்க்காமல் விஜய், கட்சியை ஆரம்பித்து, மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி, அரசியலில் முழுநேரமும் இருப்பேன் என்று அறிவிக்கவும், திருமாவளவன் உட்பட அண்ணாமலை உட்பட அனைவருக்குமே இது அதிர்ச்சியாகிவிட்டது.

லாரி அடிச்சு செத்துருவே

இன்றுவரை விஜய் டீசன்ட் அரசியலை செய்து வருகிறார்.. யாரையுமே தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதில்லை. ஆனால், "லெப்ட்ல போ, ரைட்ல போ, நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துருவ" என்று சீமான் சொல்கிறார்.. அப்பக்கூட விஜய் எதுவுமே பேசவில்லை. விஜய்யிடம் நிதானம் உள்ளது, பண்பு உள்ளது, அடக்கம் உள்ளது.. அண்ணாமலையிடம் இது எதுவுமே இல்லை.

ஒரு தேசிய கட்சி , அதுவும் 11 வருடங்கள் மத்தியில் ஆளும் கட்சி, அதுவும் ஐபிஎஸ் படித்த ஒரு அதிகாரி, இப்படித்தான் பேசுவாரா? இடுப்பை கிள்ளி அரசியல் என்கிறாரே, அவரது இந்த விமர்சனம், அரசியலுடன் சம்பந்தப்பட்டதா?

தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த்

இடுப்பை கிள்ளு, தொப்புளில் பம்பரம் விடு என்றெல்லாம் நடிகர்களுக்கு டைரக்டர்கள் சொல்வதுதானே? அன்று சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்டார் விஜயகாந்த்.. ஆனால், அவர்தான் மக்கள் நலக்கூட்டணி, அவர்தான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் இதே திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் 2016ல் சொன்னாங்களே? அப்ப இவர்களுக்கெல்லாம் விஜயகாந்த் ஒரு நடிகர் என்பது தெரியலயா?

எனவே, அண்ணாமலை காழ்ப்புணர்ச்சியால் அநாகரீகமாக பேசுகிறார்.. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்.. விஜய் என்றில்லை, அதுபோல யாரை பேசினாலும் அது தப்புதான்.. "மரம் சும்மா இருந்தாலும், காற்று சும்மா இருக்காது" என்பார்கள்.. அதுபோல, விஜய் அமைதியாக இருந்தாலும், அவரது தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.. அண்ணாமலையை விமர்சித்தே அது இணையத்தில டிரெண்டாகிவிட்டது.

பாஜக என்ற பூச்சாண்டி

பாஜகவை திமுகதான் ஊட்டி ஊட்டி வளர்க்குது.. தமிழ்நாட்டில் பாஜக என்ற பூச்சாண்டி காட்டியே, திமுக பயமுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், தனக்கு அரசியல் எதிரி திமுக, கருத்தியல் எதிரி பாஜக என்று விஜய் தெளிவாக சொல்லிவிட்டார். அப்படியிருந்தும், திமுகவின் B டீம் விஜய் என்று அண்ணாமலை சொல்வதெல்லாம், அரசியல் அரிச்சுவடிகூட தெரியவில்லை என்பதைதான் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+