Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேக்கை வெட்டு.. வாயில் ஊட்டு.. கண்ணான கண்ணே குடும்பத்தில் பர்த்டே.. செம கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நம்ம கண்ணான கண்ணே சீரியலின் தனலட்சுமி பாட்டி அதான் சுலக்ஷனா பிறந்தநாளை சிறப்பாக சீரியல் குடும்பம் கொண்டாடி இருக்கிறது.

சீரியலில் சண்டை போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தாலும் டைரக்டர் கட்டுனு சொன்னதும் நாங்க சேர்ந்து விடுவோம் என்று வெட்டவெளிச்சமாக காட்டியிருக்கிறார்கள்.

அடடா ..பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் மாறாத அம்மா மகன் பாசம் வேற லெவல் தான் என ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் அதிகம் தான்

ரசிகர்கள் அதிகம் தான்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வருகிறது. இதற்கு காரணம் இந்த சீரியலின் முக்கியமான நடிகர் ,நடிகைகள் பலரும் நடித்து இருந்தாலும் அதிகமான இளம் நடிகர்கள் மற்றும் பிரபலமான நடிகர்கள் இதில் இருப்பதால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். அப்பா மகளின் பாசம் ஒருபுறம் என்றால் இரண்டாவது அம்மாவாக இருந்தாலும் தன் பிள்ளை போலவே கணவரின் குழந்தையும் பார்க்கும் கேரக்டர் ஒருபுறம் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மகன் தப்பு செய்தால் அதனை தட்டி அவருக்கு உறுதுணையாக அந்த வீட்டிற்குள்ளே இருக்கும் ஒரு தாயின் குணமும் இந்த சீரியலுக்கு ஒரு சிறப்பு தான். அதுமட்டுமல்லாமல் யுவா , மீராவின் காதலும் பலருக்கும் பிடித்திருக்கிறது. தற்போது தான் இந்த சீரியல் பெரும் பரபரப்பாக திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மீராவின் திருமணம் நடைபெறுமா நடக்காதா என்று சஸ்பென்ஸை கொடுத்து கொண்டிருந்தவர்கள் இப்போ கௌதமுக்கு என்ன ஆச்சு என்று பரபரப்பை கூட்டி இருக்கிறார்கள்.

நிஜத்தில் வேற மாதிரி

நிஜத்தில் வேற மாதிரி

சீரியலில் பல நடிகைகள் புதுமுகமாக இருந்தாலும் அதில் சுலோச்சனா பலருக்கும் பரிச்சயமான நபர்தான். அவருடைய பிறந்தநாளை அவருடன் நடிக்கும் நடிகர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இவருடைய வீடியோவை பிருத்விராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .இந்த சீரியலில் பிருத்திவிராஜ் கௌதம் ஆக நடிக்கிறார். அவருடைய அம்மாவாக தனலட்சுமி கேரக்டரில் ,சுலோச்சனா நடித்திருக்கிறார். நாங்கள் சீரியலில் மட்டுமல்ல சீரியலை தாண்டியும் அப்படித்தான் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் என்று தற்போது இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

குழந்தையிலேயே நடிகைதான்

குழந்தையிலேயே நடிகைதான்

சுலக்சனா இந்த சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அப்போதே பலருக்கும் நல்ல அறிமுகம் தெரியும். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இரண்டரை வயதிலேயே காவியத்தலைவி திரைப்படத்தில் கிருஷ்ணராக நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கே பாக்யராஜ் உடன் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலமாகத்தான் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நடிப்பினை அழகாக வெளிக்காட்டி முதல் படத்திலேயே பிரபலம் அடைந்து விட்டார்.

மீண்டும் எழுத்த சின்னத்திரை

மீண்டும் எழுத்த சின்னத்திரை

திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து கொண்டிருக்கும்போதே பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகன் கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் அதில் முதல் மகன் விஷ்ணு கடற்படை அதிகாரியாக இருக்கிறார். இரண்டாவது மகன் லண்டன் விமான நிலையத்தில் அதிகாரியாகவும், மூன்றாவது மகன் படித்துக் கொண்டும் இருக்கிறாராம். மகிழ்ச்சியான குடும்பத்தை பார்த்துக்கொண்டு இருந்த இவர் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தங்கமான தனலட்சுமி தான்

தங்கமான தனலட்சுமி தான்

2003 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் ஒளிபரப்பான சஹானா என்னும் சீரியலின் மூலமாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்குப்பிறகு கோகுலத்தில் சீதை ,மகாராணி ,முந்தானை முடிச்சு ,தங்கம் ,அழகி ,தெய்வம் தந்த வீடு ,லட்சுமி வந்தாச்சு, தேவதையை கண்டேன் ,அரண்மனைக்கிளி ,ராசாத்தி போன்ற பல சீரியல்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது கண்ணான கண்ணே சீரியலிலும் தனலட்சுமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சீரியல்களில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதால் பலருக்கும் பிடித்தவராக இருக்கிறார்.

முகத்தில் ஒரே பூரிப்பு தான்

முகத்தில் ஒரே பூரிப்பு தான்

கண்ணான கண்ணே சீரியலில் அந்தக் குடும்பத்தின் பாட்டியாக இருந்தாலும் சீரியலை தாண்டியும் அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுவும் கேக் வெட்டும் போது பக்கத்தில் இருக்கும் மீராவும் ,யமுனாவும் காதில் எதோ சொல்லிக்கொண்டு சிரிப்பதை பார்த்து அவர்கள் அவங்க ரெண்டு பேரும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் அன்பு வாழ்த்து

ரசிகர்களின் அன்பு வாழ்த்து


அதுமட்டுமல்லாமல் தனக்கு மகனாக நடிக்கும் பிருத்விக்கு பாசமாக கேக் ஊட்டுவதை பார்த்து அப்போ எங்களுக்கு கேக் இல்லையா என்று பலர் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீரியலில் ஐசியூவில் இருக்கும் இவர் இங்க பாட்டு பாடி ஜாலி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று கிண்டல் செய்தாலும் அழகான குடும்பம் தான் என்று இவர்களுடைய பாசத்தை பார்த்து சிலர் கண் வைத்து வருகிறார்களாம். இதேபோல சந்தோஷமாக இருக்க வேண்டும் சுலக்ஷனா அம்மா என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+