நீங்க மட்டும் புருஷன் பொண்டாட்டியா ஒத்துமையா இருங்க... என்னை பத்தி எதுக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் நாயகி சீரியலை பெரும்பாலானோர் விரும்பி பார்க்கறாங்க. ஆனந்தி, திரு, கண்மணி, செழியன், சற்குணத்தம்மா, சுமதி இவங்க அனைவரும் சேர்ந்து நன்றாக நடிப்பதால் சீரியல் களை கட்டுது.

இதில் சொத்து வாரிசை கொல்லணும்னு எதிரிகள் ஒன்றாக சேர்ந்து பல அக்கிரமங்களை செய்யறதுதான் கதை. என்றாலும், நல்ல கதாபாத்திரங்கள், காமெடி, ரொமான்ஸுன்னு எல்லா மசாலாக்களும் இருக்கு.

அம்பிகா சற்குணத்தம்மா கேரக்டர்ல நல்லா இறங்கி வந்து நடிச்சு இருக்காங்க. அதுக்கு ஒரு பாராட்டு குடுக்கலாம். பார்க்க போனா அம்பிகா வரும் காட்சிகள் ரொம்பவே நல்லாருக்கு.

இல்லை

இல்லை

அக்கா எவ்ளோ அழகா பூஜை படங்களை அலங்கரிச்சு இருக்கீங்கன்னு சுமதி கண்மணியிடம் கேட்கறா. நல்லாருக்கா...இந்த சாமி பாரு பொண்டாட்டி கூட எவ்ளோ ஜம்முன்னு அழகா இருக்காருன்னுன்னு கண்மணி சொல்றா. அக்கா அவங்க புருஷன் பொண்டாட்டி சாமிக்கா ஒண்ணாதான் இருப்பாங்கன்னு சுமதி சொல்றா. ஆமா சுமத்தி செவ்வாய், வெள்ளின்னா நமக்கு நாள் தவறாம பூ வச்சு இவ்ளோ அலங்காரம் பண்ணி பக்தியா இருக்காளே... அவளை புருஷனோட சேர்த்து வைக்கணும்னு இந்த சாமிக்கு தோணுதா..சாமிக்கு என் நினைப்பே இல்லை சுமதின்னு சொல்றா.

மாமா கையால

மாமா கையால

இதோ பாரு சாமி.. இன்னிக்கு மாமா கையால கண்மணி அக்காவுக்கு பூ வச்சு விடணும்.. என்ன செய்வியோ எனக்கு தெரியாதுன்னு சுமதி சாமிகிட்ட பேசறா.பார்த்தா செழியன் கையில் பூவுடன் வருகிறான்.

தர சொல்லி

தர சொல்லி

அண்ணா.. என்னன்னா இன்னிக்கு கையில பூவோட வந்திருக்கே...அண்ணிக்கு வாங்கிட்டு வந்தியா.. உன் கையால வச்சுவிடுன்னு தங்கை மேகலா சொல்றா. அதுக்குள்ளே செழியன் மேல் ஆசை வச்சுருக்க சுஹாசினி என்ன செழியன் இவ்ளோ லேட்டா வறீங்கன்னு கேட்கறா. ஜி.எம் வீட்டுல பூஜை போட்டாங்க... கூப்டாங்க போனேன்.. இந்த பூவை கொடுத்து பொண்டாட்டிக்கு குடுன்னு சொன்னாங்கன்னு சொல்றான். அந்த பூவை கொடுங்களேன் நான் வச்சுக்கறேன்னு சுஹாசினி சொல்ல, பொண்டாட்டிக்குன்னு கொடுத்ததை நீங்க வச்சுக்க கூடாதுங்கன்னு சொல்றான் செழியன்.

பூஜை அறையில்

பூஜை அறையில்

மேகலா இதை பூஜை அறையில வைன்னு சொல்றான், மாமா ஏற்கனவே சாமிக்கு அக்கா நிறைய பூ வச்சுட்டாங்க.. இனிமே சாமிக்கு பூ தேவையில்லை.. நீங்க அக்காகிட்ட குடுங்கன்னு சொல்றா சுமதி. ஆமாம் அண்ணா நீயே அன்னிக்கு வச்சுவிடுன்னு சொல்றா மேகலா. செழியன் மேகலாவிடம் எரிந்து விழ..என்னடா அவகிட்ட கோவத்தை காமிக்கறேன்னு கேட்டுகிட்டே சற்குணம் அம்மா வர்றாங்க.

கூச்ச நாச்சம்

கூச்ச நாச்சம்

ஏண்டா பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வந்த பூவை ஒண்ணு அவ கையில குடு.. இல்லை வச்சுவிடு.. அதென்ன பூஜையில் வைன்னு சொல்ற. நம்ம வீட்டுல கல்யாணமானவங்களுக்கு இந்த கூச்ச நாச்சம் எல்லாம் இருக்க கூடாது. நீ பொண்டாட்டிக்கு என்ன வாங்கிட்டு வந்தாலும் எல்லார் முன்னாலயும் குடுக்கலாம். இப்போ அவ தலையில பூவை வச்சுவிடுன்னு சொல்றாங்க.

கிடைக்கும்னு

கிடைக்கும்னு

எப்படா புருஷன் தன கையால பூ வச்சு விடுவான்னு காத்திருந்த கண்மணி, செழியன் முன் நிற்க, அவன் பூவைப் பிரித்து, மெதுவாக கண்மணி தலையில் வச்சு விடறான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இதுவரை இருவரும் புருஷன் பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு இருக்காங்க.

மல்லிப்பூ அல்வா

மல்லிப்பூ அல்வா

எப்பவுமே புருஷன் ஆசையா பொண்டாட்டிக்கு மல்லிப்பூ, அல்வா வாங்கிட்டு போகணும்னா திருட்டுத் தனமா மறைச்சு. ஒளிச்சு வாங்கிக் குடுப்பான்...இப்படித்தான் சினிமாவிலும், சீரியலிலும் காட்டப்பட்டு இருக்கு. குடும்பத்துல இப்படி வெளிப்படையா இருக்கறது எவ்ளோ நல்ல விஷயம் பாருங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+