சன் டிவி தொகுப்பாளருக்கு விஜய் டிவி நடிகையோடு கல்யாணம்.. போஸ்டர் போல போட்டோஸ்.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் அஸ்வந்த் சந்திரசேகருக்கும் சீரியல் நடிகை கண்மணி மனோகரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடைபெற்று இருந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு அவர்கள் ஹல்தி பங்க்ஷன் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சின்னதிரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி அதில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை பார்த்து இருப்போம். ஆனால் சின்னத்திரையில் ஒரே துறையில் இருந்தாலும் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வந்துக்கும் சீரியல் நடிகை கண்மணிக்கும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் நடைபெறப்போகிறது.

இவர்களுடைய எங்கேஜ்மென்ட் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று விட்டது. அப்போது வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை திடீர் அதிர்ச்சியில் ஆழ்தி இருந்தது. சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான அஸ்வந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலி கேரக்டரில் நடித்த கண்மணியை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருந்தார்.
கண்மணி மனோகரன் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அந்த சீரியலும் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. கதாநாயகியை மையப்படுத்திய அந்த சீரியல் இருந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த சீரியல் முடிவடைந்தது.

அதற்குப் பிறகு வேறு எந்த சீரியலிலும் சில மாதங்களாக கண்மணி நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் முக்கிய கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இனி இவரை வைத்துதான் அந்த சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வரப்போகிறது என்று தெரிகிறது. புது சீரியலில் கமிட்டான அதே நேரத்தில் தன்னுடைய திருமணத்தையும் கண்மணி அறிவித்திருந்தார்.

அதுபோல அஸ்வந்த் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த ஜோடி தங்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்களுக்கு நேரில் பத்திரிக்கை கொடுத்தும் அசத்தியிருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நேரில் சென்று பத்திரிகை வைத்த போது ரஜினிகாந்தின் மனைவி லதாவின் காலில் அஸ்வந்த் மற்றும் கண்மணி விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருந்தனர்.

அப்போது சிலர் கமெண்ட்களில் அடுத்த மாநிலத்துகாரங்க அதுவும் நடிகர்களில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கணுமா? என்று கேட்டிருந்த கேள்விக்கு அஸ்வந்த் மற்றும் கண்மணி இருவரும் அது எங்களுடைய விருப்பம் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று பதிலடி கொடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியையும் சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுத்து இருந்த புகைப்படங்களையும் அஸ்வந்த் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இவர்களுடைய திருமணம். இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் ஹல்தி பங்க்ஷன் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களை அஸ்வந்த் மற்றும் கண்மணி பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் போஸ்டர் போல இருப்பதாக அஸ்வந்துடன் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசார் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதுபோல இந்த தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications