கண்ணான கண்ணே சீரியல் கடைசி நாள் ஷூட்டிங்கில் நெகிழ்ச்சி... கதாநாயகன் வெளியிட்ட வீடியோ
கண்ணான கண்ணே சீரியல் கடைசி நாளுக்கான சூட்டின் புகைப்படங்களை அந்த சீரியலில் கதாநாயகன் பப்லு பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது.
கண்ணான கண்ணே சீரியலின் கடைசி நாள் சூட்டிங் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சீரியலின் திடீர் முடிவு பற்றி நடிகர் பப்லு உருக்கமான சில தகவல்களை கூறி இருக்கிறார்.

டிஆர்பியில் முன்னணி
சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் அந்த சீரியலில் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. தற்போதைய கண்ணான கண்ணே சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான வரவேற்பை பெற்று டாப் 10 சீரியல்களில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.

சீரியலின் கதை
சன் டிவியில் இரவு 8:30க்கு ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் மகள் அப்பாவின் பாசத்தை பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் என்னென்ன சவால்களை சந்திக்கிறார் என்பதை பற்றியதாக இருந்து வந்த நிலையில் தற்போது தன்னுடைய மகள் மீது இருந்த வெறுப்பை எல்லாம் மறந்து தந்தைக்கு பாசம் ஏற்பட்டிருக்கும் நிலையில் விதி அவர்கள் இருவரையும் பிரித்து வைக்கிறது. கடைசி நேரத்தில் இவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் கதையின் முடிவாக இருக்கிறது.

விரைவில் முடிவு
இந்த சீரியலில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். அதிலும் இந்த சீரியலில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் நிமிஷிதா, ராகுல் ரவி இடையே காதல் காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது .இந்த சீரியலுக்கு மகேந்தர் பாரதி, கண்ணன் கதை எழுதுகின்றனர். நரசிம்மமூர்த்தி, நல்லம் ஆகியோர் வசனம் எழுத இந்த சீரியலை தனுஷ் இயக்குகிறார். இந்த நிலையில் இந்த சீரியல் வரும் நான்காம் தேதியோடு நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் சூட்டிங்
இதே நேரத்தில் இந்த சீரியலின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை பப்லு பிரித்திவிராஜ் தன்னுடைய வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார். அந்த வீடியோவில் இயக்குனர் தனுஷ் நாயகி நிஷா உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களையும், பிரிவையும் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த படப்பிடிப்பு முடிந்து கண்ணான கண்ணே குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அதில் அவர் பகிர்ந்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications