ஒரே வாந்தி...கயல் தங்கையின் நிச்சயம் - பெரியப்பா நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றா இருக்கே
கயல் தங்கையின் நிச்சயம் நடக்குமா நடக்காதா என ஒரு வாரமாக ஓட்டி விட்டனர். இன்றாவது நடக்குமா ? பெரியப்பா நினைத்தது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: கயல் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 7 எபிசோடுகளுமே தேவியின் நிச்சயம் நடக்குமா நடக்காதா என்றே கடந்து விட்டது. தேவி வாந்தி எடுத்த பின்னரும் நிச்சயம் நிற்கவில்லை என்பதால் அடுத்த பிளானை ஆரம்பித்து விட்டார் பெரியப்பா.
கன்னட சீரியலில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. தமிழில் ப்ரியா பவானி சங்கருக்கு பதிலாக நடித்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வாய்ப்பை பெற்றார். இதில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர். சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தில் முக்கிய ரோலான சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாசமான அக்கா
அப்பா இல்லாத குடும்பத்தில் பாரம் மொத்தத்தையும் தூக்கி சுமக்கும் தைரியமான பெண் வேடத்தில் நடித்து வருவதன் மூலம் மேலும் இவருக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். தவிர பெண் ரசிகர்களும் கயல் சீரியல் மூலமாக இவருக்கு அதிகரித்து வருகின்றனர்.

தங்கையின் திருமணம்
கயலின் தங்கை தேவியின் நிச்சயத்திற்கு புடவை எடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. கடந்த ஒரு வாரமாக
கோவிலில் நிச்சயம் செய்யும் வேலைதான் நடந்து கொண்டிருக்கிறது ஏழு எபிசோடுகளில் நிச்சயம் நடக்குமா நடக்காதா என்ற சஸ்பென்ஸ் உடன் முடித்து வருகின்றனர்.

வாந்தி எடுத்த தேவி
தேவியை வாந்தி எடுக்க வைத்து அதை வைத்து நிச்சயத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்தது பெரியப்பாவின் குடும்பம். இதெல்லாம் பெரிய விசயமே இல்லை என்று வேதவல்லி தூசி தட்டி விட அப்படியே அதிர்ச்சியாகிவிட்டார் பெரியப்பா. ஜூஸில் வாந்தி மாத்திரை கலந்து கொடுத்ததே பெரியம்மாதான் என்ற குட்டு உடைபட கோவித்து கொண்டு எஸ்கேப் ஆகின்றனர்.

நிச்சயம் நடக்கக் கூடாதே
எப்படியாவது நிச்சயத்தை நிறுத்த வேண்டுமே என்று பெரியப்பா மைண்ட் வாய்ஸ் மூலம் யோசிக்க கயலின் அண்ணன் மூர்த்தியை வைத்து அடுத்த காய் நகர்த்துகிறார். அண்ணனை போலீசில் மாட்டி விட்டு அசிங்கப்பட வைத்தால் நிச்சயம் நின்று விடும் என்பது பெரியப்பாவின் எண்ணம்.

பெரியப்பாவுக்கு ஆப்பு
தேவியின் நிச்சயத்திற்கு மூர்த்தி வரக்கூடாது என்று சொன்ன வேதவல்லியே வரவேற்பதால் பெரியப்பா பல்பு வாங்குகிறார். அடடா பெரியப்பாவுக்கு பெரிய ஆப்பாக கிடைத்து விட்டதே என்று அனைவரும் நினைக்கின்றனர். இன்றாவது நிச்சயம் நடக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சீக்கிரம் முடிங்க ஏன் இந்த இழுப்பு
ஹீரோயின் தங்கையின் திருமணத்தை நடத்தவே ஏழு எபிசோடு என்றால் கல்யாணத்தை எத்தனை எபிசோடு இழுப்பார்களோ என்று கேட்கின்றனர் ரசிகர்கள். சீக்கிரம் நிச்சயத்தை முடிங்க சட்புட்டுன்னு சீரியல் நகரட்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications