சன் டிவியில் புது சீரியலுக்கு டைட்டில் பாட்டு பாடிய சித்ரா.. ஆனால் எம்ஜிஆர் பாடலை சுட்டுட்டாங்களே!
சென்னை: சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மல்லி சீரியலின் டைட்டில் பாடலை பாடகி சித்ரா பாடி இருக்கும் நிலையில் அந்த வீடியோவை சன் டிவி பகிர்ந்து இருக்கிறது. அதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
சீரியலில் பொதுவாக திரைப்படங்களின் பாடல்களை பயன்படுத்தி வருவதை பார்த்து இருப்போம். ஒரு சில சீரியல்களில் மட்டும் தான் பாடல்கள் சொந்தமாக உருவாக்கி பயன்படுத்துகிறார்கள். அது சில நேரங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு வெளியான "மெட்டி ஒலி" சீரியலில் "அம்மி அம்மி அம்மி மிதித்து" என்ற பாடல் இப்போதும் பலருடைய ஃபேவரிட் ஆக இருக்கிறது. அந்த பாடல் வரிகள் 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட். அதுபோல கோலங்கள், கங்கா யமுனா சரஸ்வதி, நாதஸ்வரம் என்று பல சீரியல்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சமீபத்தில் ஒரு சில சீரியல்கள் பழைய பாடலை காப்பியடித்து அப்படியே டைட்டில் பாடல்களாக மாற்றி விடுகிறார்கள்.
அந்த வகையில் புதியதாக தொடங்க இருக்கும் மல்லி சீரியலும் இதையே ஃபாலோ பண்ணுகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன்பே பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலின் ப்ரோமோ வெளியானதும் இது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் என்ற சீரியலில் காப்பி என்று பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

நினைத்தேன் வந்தாய் சீரியலில் அம்மாவை இழந்த குழந்தைகளுக்கு கேர் டேக்கர் ஆக கதாநாயகி அந்த குழந்தைகளின் வீட்டிற்கு வந்து பிறகு அந்த குழந்தைகளின் மனதை கவர்ந்து அம்மாவாக மாறுவது போன்று கதை போய்க் கொண்டிருக்கிறது. அதேபோலத்தான் மல்லி சீரியலிலும் இருக்கிறது. கதாநாயகன் மனைவி இல்லாமல் குழந்தையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கதாநாயகி மல்லி வீட்டிலும் அவருக்கு இந்த ஜென்மத்தில் திருமணமே நடக்காது என்று அவருடைய சித்தி திட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் மல்லி இனி கதாநாயகன் குழந்தையின் மனதை கவர்ந்து அவருடைய வீட்டிற்குள் எப்படி போகப் போகிறார் என்பது போன்றுதான் கதை இருக்கும் என்று ப்ரோமோவில் தெரிகிறது. இந்த நிலையில் இந்த சீரியலின் டைட்டில் பாடலை பாடகி சித்ரா பாடி இருக்கிறார். அதுவும் நடிகர் எம் ஜி ஆர் நடித்த படத்தில் இடம் பிடித்த சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்து விடக்கூடாது என்ற பாடலைக் காப்பியடித்து அதிலிருந்து பல பாடல் வரிகளையும் எடுத்து இந்த சீரியலின் டைட்டில் பாடலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாடகி சித்ரா ஏற்கனவே சன் டிவியில் கயல், வானத்தைப்போல சீரியலுக்கு பாடல் பாடி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது சித்ரா குரலில் பாடப்பட்ட மல்லி சீரியல்களின் டைட்டில் பாடல் அருமையாக இருந்தாலும் இது எம்ஜிஆர் பாட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட பாடலாக இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications