சன் டிவியில் ஒரே சீரியலில் நடித்து திடீர் திருமணம் செய்து கொண்ட நடிகர்- நடிகை.. யாருன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியல் நடித்து வரும் நடிகை நிவேதிதா அந்த சீரியலில் தன்னோடு நடித்து வரும் நடிகர் சுரேந்தரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் நிவேதிதாவுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் அது விவாகரத்தில் முடிவடைந்த நிலையில் இப்போது மகிழ்ச்சிகரமாக தன்னுடைய காதலனை திருமணம் செய்திருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

sun tv serial actresses niveditha second marriage to actor surender

சமீபத்தில் சீரியல் பிரபலங்கள் தங்களோடு நடிப்பவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதை ஒரு ட்ரெண்டாக செய்து வருகின்றனர். ஏற்கனவே சின்னத்திரையில் பலர் ரீலாக நடித்து ரியல் ஆக ஜோடியாக மாறி இருக்கின்றனர். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்று சீரியலில் கதாநாயகன் பிரேம் ஜாக்கப் நடிகை சுவாதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து இப்போது சன் டிவியில் மலர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் திடீர் திருமணம் செய்து இருக்கின்றனர்.

அதாவது சீரியல் நடிகை நிவேதிதா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் சன் டிவியில் தொடர்ச்சியாக பல சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு சின்னத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை நேரத்தில் இவர் இப்போது மலர் சீரியல் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலில் இவர் முதல் முதலாக அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து கல்யாண பரிசு, திருமகள், சுந்தரி என்று பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிவேதிதா மகராசி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த சீரியலில் அவரோடு நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்த தகவல் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நிவேதிதா மலர் சீரியலில் தன்னோடு நடிக்கும் சுரேந்திரோடு அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு கொண்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போகிறார்களா? ஏற்கனவே நிவேதிதாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதே என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நிவேதிதா சில வாரங்களுக்கு முன்பு விளக்கம் ஒன்றையும் கொடுத்திருந்தார். அதில் எனக்கு விவாகரத்தாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது நான் சுரேந்தரை என்று தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்... அது உண்மைதான். எனக்கு புது காதல் கிடைத்திருக்கிறது. இனி இந்த ஸ்பெஷலான ஒருவரோடு நான் வாழ போகிறேன்.

அதனால் புரிந்து கொண்டு மோசமான கேள்விகள் எல்லாம் இனி கேட்க வேண்டாம் எங்களை வாழ விடுங்கள் என்று பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று சுரேந்தர் நிவேதிதா திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணம் இரண்டு வீட்டாரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

sun tv serial actresses niveditha second marriage to actor surender

அதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் சிலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அதைத்தொடர்ந்து இந்த புகைப்படங்களை திருமண ஜோடிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்க அதற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+