சன் டிவியில் முடிவுக்கு வரும் வானத்தைப்போல சீரியல்.. காரணம் இதுதானா? வெளியான தகவல்கள்
சென்னை: சன் டிவியில் கடந்த 2020 ஆண்டில் தொடங்கப்பட்ட வானத்தைப்போல சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அண்ணன் தங்கை கதையை மையமாக கொண்ட இந்த சீரியல் வரும் வாரத்தோடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒரு சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி விட்டாலே அது பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும். இது வழக்கமாக நடப்பது தான். அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விடும். அதனாலேயே டிஆர்பியில் டாப் 10 இடத்தில் அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடிக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் பல வருடங்களை கடந்த ஒரு சில சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் வானத்தைப்போல சீரியல் நான்கு வருடத்தை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தங்கை கதையை மையமாகக் கொண்டே கதை நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் அதிகமாக ரசிகர்கள் மத்தியில் கவர தொடங்கியது. ஆனால் இந்த சீரியலில் கதாநாயகனாக அண்ணன் கேரக்டரில் நடித்து வந்த நடிகரும் அவருடைய தங்கையாக நடித்த நடிகையையும் அடுத்தடுத்து விலகி இருந்தனர். ஆனாலும் இந்த சீரியலுக்கு டிஆர்பி குறையவில்லை. ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் கதையில் தொய்வு ஏற்பட்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் கிராமப்புறத்தில் இந்த சீரியலுக்கு இப்போதும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அண்ணன் தங்கையாக இருந்தாலும் இவர்களை இருவரும் நல்லா வாழ்ந்ததாக இந்த சீரியலில் கதையே இல்லை. எப்போதும் இவர்களுக்கு அடுத்தடுத்த பிரச்சனை மட்டும்தான் வந்து கொண்டே இருக்கிறது.

அண்ணனுக்காக தங்கையும், தங்கைக்காக அண்ணனும் மருத்துவமனையில் தான் அடிக்கடி அட்மிட் ஆகி கொண்டு இருக்கிறார்கள். அதனாலேயே இப்போது டிஆர்பியும் தொடங்கி இருக்கிறது. இதனால் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் இனி ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமடைந்த சுவாதி நடிக்கும் மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று முடிச்சு சீரியல் கிராமப்புறத்தை மையமாகக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வரும் செய்தி வந்ததும் ஒரு தரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சி என்று கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications