காட்டு தீயாக பரவும் விவாகரத்து பிரச்சனை.. இறுதியில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா உடைத்த உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரில்லா செல்லஸ் அவருடைய கணவர் சுருளியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று செய்திகள் இணையத்தில் அதிகமாக பரவி வந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகைகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, அதில் அதிகமாக அடுத்த மாநில நடிகைகள் நடிகர்கள்தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். அடுத்த மாநிலத்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு கிடைப்பது அரிதிலும் அரிதாகத்தான் இருக்கிறது. ஒரு சிலர்தான் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் பல நடிகைகள் பல்வேறு திறமைகளோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் கவிதை படிப்போமா? என்று கதை கவிதை படித்து பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
டிக் டாக் இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிகமான பாலோவர்ஸ் கிடைத்துவிட்டனர். அதற்குப் பிறகுதான் இவருக்கு சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் இவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு சின்னத்திரை ரசிகர்களுக்கு தொடங்கிவிட்டது. ஆனாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தனர்.
இந்த பொண்ணு ரொம்ப கருப்பா இருக்கு... இந்த பொண்ணு கதாநாயகியா?, இதெல்லாம் கதாநாயகி மாதிரியா இருக்கு? என்றெல்லாம் கூட சிலர் கமெண்டுகள் கொடுத்து வந்தனர். ஆனாலும் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பாதியிலிருந்து இவர் விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமா சீரியல் வாய்ப்புகளில் முயற்சி செய்த நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைத்து கொண்டிருக்கிறது. அதுபோல சினிமாவிற்காக வீட்டை விட்டு ஓடி வந்து முயற்சி செய்தபோது அவருக்கு துணையாக இருந்த நண்பர்தான் சுருளி. அவரை தான் கேப்ரில்லா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணம் செய்தியை ரசிகர்களிடம் கேப்ரில்லா அறிவித்தபோது தன்னுடைய கணவர் குறித்து பல இடங்களில் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலமாக கேப்ரில்லா அவருடைய கணவரோடு எந்த போஸ்ட்டும் போடுவது கிடையாது. இதனால் அவருடைய கணவரை பிரிந்து விட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்தது.
ஆனால் அதற்கு பதில் சொல்லும் விதமாக நேற்று கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தன்னுடைய கணவரோடு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் அவர்களுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
அதற்கு காரணம் இருவரும் பிசியாக இருப்பதால் தொடர்ந்து போஸ்ட் மற்றும் புகைப்படங்கள் வெளியிடாததால் இவர்கள் இருவரும் பிரிந்து இருக்கலாம் என்று யூகங்களின் அடிப்படையிலே வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அதை சிலர் சீரியஸாக பதிலடி கொடுப்பதும் உண்டு. ஒரு சிலர் கேப்ரியல்லா போல கூலாக போஸ்ட் போட்டு நீங்க நினைக்கிற மாதிரி இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications