சுந்தரி சீரியல் நடிகைக்கு திடீர் எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை “இந்த” பிரபல நடிகர் தான்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் அனு கேரக்டரில் நடிக்கும் நடிகை ஸ்ரீ கோபிகா தனக்கு எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என்று புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து விட்டாலே அந்த நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அதிலும் பிரைம் டைம் சீரியலில் நடித்தால் சொல்லவே வேண்டாம். அந்த மாதிரி தான் சன் டிவியில் சீரியலில் பெரிய ஒரு புரட்சியை செய்த நடிகை என்று சொல்லப்படும் ஸ்ரீ கோபிகாவை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்துவிட முடியாது.

சின்னத்திரை ரசிகர்கள் இவரைப் பார்த்தாலே இவரா இவர் பயங்கரமான ஆளாச்சே என்று சொல்லிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரே ஒரு சீரியல் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கதற விட்டிருந்தார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் அனு கேரக்டரில் நடித்த ஸ்ரீ கோபிகா அந்த சீரியலில் இரண்டு வருடங்களுக்கு மேலாக கர்ப்பமாக இருப்பது போன்றே நடித்துக் கொண்டிருந்தார்.
இது குறித்து பல மீம்ஸ்கள் வெளியாகி இவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது. சுந்தரி சீரியலில் சுந்தரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதுபோல அணுவிற்கு அதிகமான முக்கியத்துவம் இருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் சீரியலில் இறந்து போய்விட்டார் என்று கதை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ கோபிகா தான் சுந்தரி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதனால் மீண்டும் அவர் சீரியலில் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு வெளியான அன்பே வா சீரியலிலும் முக்கிய கேரக்டரில் கோபிகா நடித்திருந்த நிலையில் அந்த சீரியலும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.. இந்த நிலையில் கோபிகா தனக்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டது என்று புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதோடு தான் நடிகர் வைசாக் ரவி என்பவரை எட்டு வருடங்களாக காதலித்து வருவதாகவும் அவருடன் தற்போது தனக்கு என்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டது விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று கோபிகா தெரிவித்திருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதிலும் சுந்தரி சீரியல் அணுவின் கணவராக நடிக்கும் ஜிஸ்னு மோனன் தன்னுடைய வாழ்த்துக்களை முதல் ஆளாக சொல்லி இருக்கும் நிலையில் அவருடைய கமெண்டுக்கு கீழே அதிகமான கமெண்ட்கள் அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இருந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. காரணம் சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை பலர் மறந்து விடுகிறார்கள் என்பது தான் இப்போது கமெண்ட்களில் தெரிகிறது.












Click it and Unblock the Notifications