சுந்தரி சீரியல் அனுவுக்கு கிடைத்த பெரிய சந்தோஷம்.. கணவர் உருக்கம்.. சினிமாவை விட்டு விலகியது இதற்காகத்தானா?
சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் மனதில் 'சுந்தரி' அனுவாக இடம்பிடித்த நடிகை ஸ்ரீ கோபிகா, திருமணத்திற்குப் பிறகு திடீரென நடிப்பை விட்டு விலகியபோது பலரும் அதிர்ச்சியடைந்தனர். "என்னாச்சு? ஏன் இப்படியொரு முடிவு?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இப்போது அவரது வாழ்க்கையில் அழகான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா
கேரளாவை சேர்ந்த ஸ்ரீ கோபிகா, மலையாள சீரியல்களில் தொடங்கி தமிழில் அன்பே வா, சுந்தரி போன்ற சீரியல்களில் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக சுந்தரி சீரியலில் அனு கதாபாத்திரம் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனி இடம் பிடித்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதிகமான ட்ரோலிலும் சிக்கிக் கொண்டிருந்தார். அதாவது அனுவுக்கு மட்டும் இரண்டு வருடத்திற்கு மேலாக குழந்தை பிறக்காமல் அவர் கர்ப்பமாக இருப்பது போன்றே காட்சி வந்து கொண்டிருந்தது. அதனால் அப்போது அவர் தான் மீம்ஸ்களின் டெம்ப்ளேடாக மாறி இருந்தார்.
அதன்பிறகு மலையாள சீரியலிலும் பிஸியாக இருந்த அவர், கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலரான வருண் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எட்டு ஆண்டுகள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் நடந்த அந்த திருமணம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளானது.

ரசிகர்களை குழப்பிய முடிவு
திருமணத்திற்குப் பிறகும் நடிப்பை தொடர்ந்த ஸ்ரீ கோபிகா, திடீரென சமூக வலைதளத்தில், "நான் இனி சீரியலில் மட்டுமல்ல, நடிப்பு வாழ்க்கையிலிருந்தே விலகுகிறேன்" என்று அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்போது பல்வேறு யூகங்கள் கிளம்பின. குடும்ப வாழ்க்கையா காரணம்? கர்ப்பமா? தனிப்பட்ட முடிவா? என்று பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கு ஸ்ரீ கோபிகா நேரடி விளக்கம் அளிக்கவில்லை.
இப்போது வந்திருக்கும் இனிய அப்டேட்
அந்த சஸ்பென்ஸ்க்கு இப்போது இனிய பதில் கிடைத்திருக்கிறது. ஸ்ரீ கோபிகா - வருண் தேவ் தம்பதியினர் சமீபத்தில் தங்கள் குழந்தையின் பெயர்சூட்டு விழாவை குடும்பத்தினருடன் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் கொண்டாடியுள்ளனர்.
அதன் புகைப்படங்களை வருண் தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மனைவிக்காக எழுதியிருந்த வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.
"பல மாதங்கள் எங்களின் உலகத்தை உன் கருவில் சுமந்து, எங்கள் கைகளில் பாதுகாப்பாக கொண்டு வந்தாய்... என்னை அப்பாவாக மாற்றியதற்கு நன்றி" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

எளிமையில் அழகான குடும்ப தருணம்
பகிரப்பட்ட புகைப்படங்களில் ஸ்ரீ கோபிகா, வருண் தேவ், அவர்களது குழந்தை மற்றும் குடும்பத்தினர் பாரம்பரிய உடையில் மிக அழகாக காணப்படுகிறார்கள். சின்னத்திரை ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரையில் கண்ணீர் சிந்த வைத்த நடிகை, இப்போது நிஜ வாழ்க்கையில் தாயாக புதிய பொறுப்பை ரசித்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் நடிப்புக்கு வருவாரா?
ஸ்ரீ கோபிகா முழுமையாக நடிப்பை விட்டு விலகியதாக அறிவித்திருந்தாலும், பல நடிகைகள் போல ஒரு கட்டத்தில் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ஆனால் தற்போதைக்கு, அவர் தனது குடும்பம், கணவர், குழந்தை என வாழ்க்கையின் அழகான தருணங்களை முழுமையாக அனுபவித்து வருகிறார் என்பதே தெளிவாக தெரிகிறது.
சின்னத்திரை ரசிகர்களோ, "அனு மேடம் மீண்டும் வரணும்... ஆனா இப்ப இந்த சந்தோஷத்தை முழுசா அனுபவிங்க" என்று அன்பு தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்













Click it and Unblock the Notifications