சூப்பர் சிங்கரில் ‘சர்ப்ரைஸா’ குடும்பத்தை கூப்பிட்டு வருவது இப்படி தான்! சாரா சுருதி சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த சாரா சுருதி அந்த நிகழ்ச்சியில் நடக்கும் பல நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது சூப்பர் சிங்கர் உட்பட பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய குடும்பத்தினரை கூட்டிக்கொண்டு வந்த சர்ப்ரைஸ் கொடுப்பார்கள். அதை பார்த்தும் போட்டியாளர்களும் இன்ப அதிர்ச்சி ஆவார்கள். அது எப்படி நடக்கும் என்று சாரா சுருதி பேசியிருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மோகம் மக்கள் மத்தியில் அதிகரிக்க அதிகரிக்க தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது. ஒரு சேனலில் தொடங்கப்படும் ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆகிவிட்டால் மற்ற சேனலில் அதை காப்பி அடித்து புதியது போல ஒரு நிகழ்ச்சியை தொடங்கி விடுகிறார்கள். அதில் சுவாரசியத்திற்காக அழுதாச்சி காட்சிகளையும், சென்டிமென்ட் காட்சிகளையும் கொஞ்சம் தூக்கலாகவே போட்டு விடுகிறார்கள்.

Super Singer 10 Vijay TV

குடும்பத்தினர் வருகை

சீரியலுக்கு மாற்றாக ரியாலிட்டி நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் பல செயல்கள் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து கூட்டிக்கொண்டு வருவார்கள். அவர்களும் எதோ பல வருடம் கழித்து தங்களுடைய குடும்பத்தினரை பார்ப்பது போல கண்கலங்கி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்

இதை பார்க்கும் ரசிகர்களும் "பாவம்" என்று உச்சுக்கொட்டி பார்ப்பார்கள். இதனால் டிஆர்பி அதிகரிக்கும். இதற்காக பல நிகழ்ச்சிகளில் சர்ப்ரைஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை பற்றி தான் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த சாரா சுருதி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் நான் போட்டியாளராக இருக்கும்போது என்னுடைய அப்பாவை கூட்டிக் கண்டு வந்தது எனக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அப்பா தான் அன்பு

காரணம் என்னுடைய அப்பா வேலைக்காக வெளியூரில் இருக்கிறார். அப்பாவை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. என்னுடைய நிகழ்ச்சிகளை அப்பா டிவியில் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். என்னுடைய அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இரண்டு குடும்பத்தினரும் அவர்களை ஒதுக்கி விட்டார்கள். அதனால் எங்களுக்கு சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் கிடையாது.

சூப்பர் சிங்கர் சர்ப்ரைஸ்

அதனால் என்னுடைய அப்பா அம்மா மீது தான் எனக்கு அதிகமான பாசம். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்னுடைய அப்பா வந்தது எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி தான். என்னுடைய அப்பாவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து தொடர்புகொண்டு அவரை ஊருக்கு வரவழைத்து இருக்கிறார்கள். நாங்கள் மாடியில் இருக்கிறோம் அந்த வீட்டின் கீழ் பகுதியில் தான் என்னுடைய அப்பாவை தங்க வைத்திருக்கிறார்கள்.

விமர்சனங்களுக்கு பதிலடி

எங்கள் குடும்பத்தினரிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய அப்பா வந்தது உண்மையில் எனக்கு தெரியாது. செட்டில்தான் அப்பாவை பார்த்தேன் என்று சாரா சுருதி பேசியிருக்கிறார். ஆனால் இந்த காட்சிகள் ஒளிபரப்பான சமயத்தில் எல்லோரும் ஒரே வீட்டிலிருந்து கொண்டு தானே இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்கள்? எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? என்ற விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது சாரா சுருதியின் பேச்சு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+