சூப்பர் சிங்கர் 9 பைனல் லிஸ்ட் இவங்க தானா? கசிந்த தகவல்கள்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 பைனலில் மூன்று போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.
அதில் யார் வெற்றியாளர் என்ற தகவல்கள் கசிந்திருக்கிறது.
அது குறித்து இது விஜய் டிவி செய்த சதி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் பல்வேறு பாடகர்களை உருவாக்கிய நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பலர் பின்னணி பாடகர்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் உட்பட பல பிரபலங்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போதைய ஒன்பதாவது சீசனில் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் யாரு பைனலிஸ்ட் ஆக வந்து வெற்றிக் கோப்பையை தட்டப் போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் பலர் கலந்து கொண்ட நிலையில் தற்போது அபிஜித், பூஜா, அருணா மூன்று பேரும் பைனல் போட்டிக்கு தேர்வாகி இருக்கின்றனர்.
இதில் பூஜா தேர்வாகி இருப்பதுதான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பூஜா என்ன தான் பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் மற்ற போட்டியாளர்களை விட பெஸ்ட் ஆக இல்லை என்றும் பூஜாவிற்கு இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்தது என்றால் அது டிஜே பிளாக் அவருக்காக காதல் பாடல்களை ஒளிபரப்பி செய்த சேட்டைகள் தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் நான்கில் எப்படி சிவாங்கியை தான் குக்காக தேர்ந்தெடுப்பார்கள் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல இந்த சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனிலும் வெற்றியாளர் பூஜாவாகத்தான் இருக்க முடியும் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே பெரிய அளவில் ஹிட் பாடல்கள் கொடுக்காத பூஜாவிற்கு தூள் பெர்ஃபார்மன்ஸ் விருது வழங்கப்பட்டதையும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
சூப்பர் சிங்கர் மேடையில் பலரும் பல பாடல்கள் பாடி அசத்து இருக்கிறார்கள் ஆனாலும் பூஜாவின் பெரியம்மா செய்த பிராங்கால் டிஆர்பி அதிகரித்துவிட்டது என்று பூஜா மற்றும் டிஜே பிளாக்கிற்க்கு அவார்ட் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். அதுபோலத்தான் தற்போதும் கூட இந்த சீசனை டைட்டில் வின்னர் ஆக பூஜா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலர் கூறி வருகிறார்கள்.
இப்போதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி பல்வேறு மீம்ஸ்கள் பரவி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் யார் பைனலிஸ்ட் என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும் அதுவரைக்கும் தேவையற்ற வதந்திகள் ஒவ்வொரு முறையும் பரவி வருவது வழக்கம்தான். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது பல சீசன்களில் நடக்காமல் போயிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசன் எப்படி என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
இதுபோலத்தான் கடந்த சீசனில் கார்த்திக் தேவராஜ் மற்றும் மானசாவை வைத்து வைத்து ஓட்டிக் கொண்டிருந்தனர். கடந்த ஜூனியர் சீசனில் வெற்றி பெற்ற க்ரிஷ் இருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் மக்கள் மனதை ரொம்பவே கவர்ந்தவர் என்றால் நேகா தான் என்று இப்போதும் சிலர் விஜய் டிவியை விமர்சித்து வருகிறார்கள்.
சூப்பர் சிங்கரில் வாத்தியாராக அதிர வைக்கும் விஜய் ஆண்டனி.. பிரியங்காவிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி












Click it and Unblock the Notifications