சூப்பர் சிங்கரில் விம்மி அழுத பாடகர் மனோ.. ஆறுதல் சொன்ன சித்ரா! அதுதான் எஸ்பிபி.. பூரித்த விஜய் டிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் தொடர்ந்து வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த நெட்டிசன்கள் திரண்டு வந்து, எஸ்பிபியை புகழ்ந்து கமெண்ட்டுகளை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் ஃபேவரைட் நிகழ்ச்சியாக திகழ்ந்து கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இதில், வருடா வருடம் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன..

television vijay tv

சமீபத்தில்தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிந்து, தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது... இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை தந்து வருகிறார்கள். பல திறமையான குழந்தைகள் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள்.

கலக்கல் ஷோ: அந்த வகையில், இந்த வாரம் Celebrating SPB டாஸ்க் தரப்பட்டுள்ளது.. எஸ்.பி.பி சுற்று என்பதால், போட்டியாளர்கள் ஆர்வத்துடன் எஸ்.பி.பியின் பாடல்களை பாடினார்கள்..

இதில், ஒவ்வொருவரும் எஸ்பிபி பாட்டை பாடப்பாட, அரங்கமே சோகத்திலும், கரகோஷத்திலும் மூழ்கியது. இதில், இசையமைப்பாளர் டி.இமான் எஸ்பிபி பாடிய "என் காதலே" என்ற பாட்டை பாடியதுமே மனோ கண்கலங்கவிட்டார்..

கர்வமே இல்லாத பேச்சு: அதேபோல, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பிபியின் நினைவுகளும் பகிரப்பட்டன.. இதில், நடுவராக எஸ்பிபி வந்தபோது, நிகழ்ச்சிகளுக்கு நடுவில் மனோ, சித்ராவிடம் செய்த கிண்டல்கள், கேலிகள் உள்ளிட்ட அலப்பறைகளும் திரையில் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது. அப்போது, எஸ்பிபியின் இயல்பான பேச்சு, கர்வமே இல்லாத அவரது அணுகுமுறை, இவைகளை எல்லாம் பார்த்து அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது.

அப்போது மனோவை எஸ்பிபி கட்டிப்பிடித்து முத்தம் தருவது, மனோவின் தலையில் பாசத்துடன் தடவி தந்தது, தோளை தட்டி கிண்டல் செய்வது போன்ற காட்சிகளை கண்டதுமே, உணர்ச்சிவசப்பட்டு மனோ அழ ஆரம்பித்துவிட்டார்.. மனோ இப்படி அழுததுமே, சித்ரா அவரை சமாதானம் செய்தார். "மனோ அழக்கூடாது.. நாம எல்லாரும் சேர்ந்து சாருக்கு, அவரது பாடல்களை பாடி சந்தோஷப்படுத்தணும், அழாதீங்க" என்றார்.

நெகிழ்ச்சி சித்ரா: இதற்கு பிறகு, சித்ராவும் எஸ்பிபியுடனான தன்னுடைய பாடல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.. மேடைகளில் பலமுறை தன்னை எஸ்பிபி கிண்டல் செய்ததாகவும், ஆனால், ஆடியன்ஸ்களுக்காகவே அவ்வாறு கிண்டல் செய்ததாகவும், தவறாக நினைக்க வேண்டாம் என்று மேடைக்கு பின்புறம் வந்து விளக்கம் தருவார் என்றும் சித்ரா நெகிழ்ந்து கூறினார். இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பானாலும், இப்போதுவரை இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+