Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் சிங்கரில் வெளிவந்த ஒரு கிராமத்தின் அவல நிலை.. உதவிக்கு வந்த நல்ல உள்ளங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஷ்ணு தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் வறுமை மற்றும் ஊரில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து மனதுருகி பேசி இருக்கும் நிலையில் அவருக்காக பலரும் உதவ முன் வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10ல் ஒரு சிறுகுரல் ஒலித்தது, அது விஷ்ணுவின் அழகிய மழலைக்குரல். அவர் நிகழ்ச்சியின் முதல் நாளில் பாடிய அத்தை மக உண்ண நினைச்சு அழகு கவித எழுதி வெச்சேன்….. அத்தனையும் மறந்துப்புட்டேன் அடியே உன்ன பாத்ததுமே…” என்ற பாடல் அவரது குரலில் அவ்வளவு இனிமையாக இருந்தது.

vijay tv television super singer 10 10

அந்த மழலையின் குரலுக்கு பின்னல் ஒரு கிராமத்தின் அழுகுரலும் கேட்டது!! விஷ்ணு குருகுளாம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இந்த போட்டியின் ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி இப்பொது போட்டியாளர்களில் ஒருவராக பாடிக்கொண்டிருக்கிறார்.

பன்னிரண்டு வயது, சின்னஞ்சிறிய உருவம், மழலைக்குரலில் பாடும் அழகு நம்மை மெய்யுருகச்செய்கிறது. அம்மா அப்பா இருவரும் கூலி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தினக்கூலி வெறும் இருநூறு ரூபாய்.

விஷ்ணு பாடிய நிகழ்ச்சியை கூட அவனால் பார்க்க இயலவில்லை. ஏனென்று கேட்டால் 'எங்க வீட்ல டிவி எல்லாம் கிடையாது அண்ணா' என்றான்.

விஷ்ணுவின் பாடும் திறனை பாராட்டி இசையமைப்பாளர் மற்றும் நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவரான D. இமான் அவனுக்கு கீபோர்டு பரிசாக அளித்தார்.

vijay tv television super singer 10 10

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் அவனுக்கு டிவியையும் மற்றும் பிரியங்கா அவர்களுக்கு காஸ் அடுப்பையும் பரிசாக கொடுத்தனர். விஷ்ணுவின் பள்ளி படிப்புக்கு தேவையான உதவிகளை பாடகர் மனோவும், சித்ராவும் அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். விஷ்ணு தனக்காக மட்டும் இந்த போட்டியில் பங்குபெறவில்லை.

தன்னுடைய கிராமத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஆசையில் மேடை எறியுள்ளார். அந்த ஊர் மக்களிடம் சூப்பர் சிங்கர் குழு என்னதான் அங்கு தேவை என்று விசாரிக்கப்போனது. அந்த ஊரில் தண்ணீர் கிடையாது. கிடைக்கும் தண்ணீர் உப்பு நீர். அதை குடித்ததால் பலருக்கு பலவிதமான உடல் நோய்கள் வந்தது. குடி தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் நடந்து சென்று எடுத்துவரவேண்டும்.

அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நல்ல உள்ளங்கள் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம், விஷ்ணுவின் குரலும் அந்த ஏழை ஊர் மக்களின் துயரும் உலகத்திரு கேட்கிறதா என்று!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+