ராதாரவியின் அட்வைஸை ஏற்றாரா ராஜலட்சுமி?.. லைசன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் செந்தில் மிஸ்ஸிங்
சென்னை: சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த வாய்ப்பை கனவில் கூட தான் எதிர்பார்த்ததில்லை என ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவருமே நாட்டுப்புற பாடல்கள் மீது பற்றுக் கொண்டவர்கள். இவர்களை ஒன்றிணைத்ததே இந்த நாட்டுப்புறப் பாடல்கள்தான்.
அழியும் விளிம்பில் இருக்கும் கலைகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் விதமாக ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக போராடி வருகிறார்கள். அந்த வகையில் ராஜலட்சுமியும் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் சினிமா பாடல்களை பாடாமல் நாட்டுப்புற பாடல்களை பாடினர்.

அந்த ஒட்டுமொத்த சீசனிலும் நாட்டுப்புற பாடல்களையே பாடி மக்களின் மனங்களை வென்றனர். விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் வெற்றியாளரானார்கள். இதைத் தொடர்ந்து இவர்கள் வெளிநாடுகளில் கச்சேரி நடத்தும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்கள். சினிமாவில் பாடமும் இருவருக்கும் தனித்தனியே வாய்ப்பு கிடைத்தது. இருவரது பாடல்களும் ஹிட்டடித்தன.
பாடகி அவதாரம் எடுத்த சிங்கர் ராஜலட்சுமி தற்போது கதாநாயகியாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லைசென்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா,வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமியும் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் சினிமாவில் எனக்கு முதல் மேட. நான் முதல் குழந்தை பெற்ற போது பிரசவ வலி எப்படி இருந்ததோ அது போன்று ஒரு அனுபவம் இதில் கிடைத்தது.
இந்த படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்ற போது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த கதாபாத்திரத்தில் என்னை நான் கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது. இந்த படத்தில் மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸை தேர்வு செய்து வைத்துள்ளேன். ஆனால் ஹீரோயினான உங்களுக்கு வேறு சாய்ஸே இல்லை என இயக்குநர் என்னிடம் தெரிவித்தார்.
அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு வியந்து போனேன். ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் பாசிட்டிவாக இருந்தாலும் போக போக அவர்களிடம் மாற்றம் வரும். அயலி புகழ் அபி நட்சத்திரா நடிக்கும் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை. 32 வயதில் இரு குழந்தைகளுக்கு தாயாக நான் நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம்தான் என்றார்.
மேலும் ராஜலட்சுமி பேசுகையில் இனி அடுத்து எந்த நிகழ்வுக்கு வந்தாலும் கணவரை அழைத்து வரக் கூடாது. அவர்கள் எல்லாம் தொல்லை என விளையாட்டாக தெரிவித்தார். இன்று இந்த நிகழ்வுக்கு என் கணவர் வரவே இல்லை. இந்த மாதம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் எங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த விழாவில் நான் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் நான் எனக்கு பதிலாக எனது கணவரை அனுப்பியுள்ளேன். இவ்வாறு ராஜலட்சுமி பேசினார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த லைசன்ஸ் படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ராதாரவி கூறுகையில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் ராஜலட்சுமி நடித்துள்ளார். கதைக்கு ஏற்ற ஹீரோயின் அவர். இவரை தேர்வு செய்ததற்கு இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும். ரினிசார் முகத்தை போட்டாலே இழுக்குது. ஆனால் ராஜலட்சுமியின் முகத்தை தைரியமாக போஸ்டரில் போட்டுள்ளார்கள். குத்துவிளக்கு ஏற்றும் போது கூட ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷை அழைத்தார்.
கணவரை அழைத்து வராதீர்கள். எதுக்கு புருஷனை அழைத்து வருகிறீர்கள். தொல்லை. உங்களுக்கு பாதுகாப்பு என நினைக்கிறீர்கள். அது பாதுகாப்பு அல்ல. நீங்கள்தான் உங்களுக்கு பாதுகாப்பு. யாரும் யாரையும் பாதுகாக்க முடியாது. சினிமா மட்டும் அல்ல, அலுவலகம், அரசியலிலும் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications